How To Add Custom Domain For Blogger In Tamil

How To Add Custom Domain For Blogger In Tamil

Custom Domain 

பிளாக் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் Custom Domain Add செய்வது பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். உங்கள் பிளாக்கருக்கு என்று கஸ்டம் டொமைன் Add செய்யும்போதுதான் தனித்துவம் பெறுகிறது. உங்கள் பிளாக்கர் விசிட் செய்யும் ஒவ்வொரு நபருக்கும் பிளாக்கரின் பெயர் மனதில் பதிந்து வைத்துக் கொள்வதற்கு கஸ்டம் டொமைன் மிக முக்கிய ஒன்றாகும். இந்த கஸ்டம் டொமைன் நீங்கள் என்ன தலைப்பில் போஸ்ட் எழுதுகிறீர்கள் என்பதைப் பற்றி சொல்லும் விதமாக அமைய வேண்டும். இது மட்டுமல்லாது சரியான கஸ்டம் டொமைன் தேர்வு செய்யும் பொழுது அது உங்கள் பிளாக்கருக்கு SEO Rank,Views அதிகப்படுத்தவும் உதவிசெய்கிறது. பெரும்பாலும் இந்த கஸ்டம் டொமைன் .com , .in, .net, .org ஆகியவை பலராலும் உபயோகப்படுத்தப்படுகிறது. இவை அனைத்தும் Top Level Domain ஆக அங்கீகரிக்கப்பட்ட வையாகும். நீங்கள் உங்கள் பிளாக்கருக்கு Adsense Apply செய்யும் பொழுது கூகுள் நிறுவனம் இம்மாதிரியான Top Level Domain களுக்குத்தான் முக்கியத்துவம் தருகிறது. இவ்வாறு நீங்கள் வாங்கிய கஸ்டம் டொமைன் எவ்வாறு உங்கள் பிளாக்கரில் இணைப்பது பற்றி விரிவாகப் பார்ப்போம். 

Buy Custom Domain 

தனித்துவம் வாய்ந்த இந்த கஸ்டம் டொமைன் வாங்குவதற்கு பல இணையதளங்கள் சேவை வைத்துள்ளன. இதில் குறிப்பாக Godaddy,Big Rock, Namecheap போன்ற இணையதளங்கள் உங்களுக்கு கஷ்டம் டொமைனை வழங்குகின்றன. நீங்கள் கஸ்டம் டொமைன் வாங்கும் பொழுது அந்த இணையதளத்தின் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கொள்வது மிக முக்கியமாகும். மேலே கூறிய மூன்று இணையதளத்தில் நீங்கள் கஸ்டம் டொமைன் வாங்கும் பொழுது எவ்வித பணபரிமாற்ற பிரச்சனைகளும் அல்லது ஏமாற்றப்படும் சூழ்நிலையோ உருவாகாது. அவ்வாறு உங்களுக்கு பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் நீங்கள் அந்த இணையதளத்தில் உள்ள கஸ்டமர் சர்வீஸ் என்னை தொடர்பு கொண்டு அல்லது Chat Message செய்து உங்களது கஸ்டம் டொமைன் பிரச்சனை சரி செய்து கொள்ளலாம். ஒரு கஸ்டம் டொமைன் வாங்குவதற்கு முன்பு அதன் விலை மற்றும் ஒவ்வொரு வருடமும் அதன் Renewal பண மதிப்பு எவ்வளவு என்று தெரிந்து வாங்க வேண்டும். ஒரு கஸ்டம் டொமைன் நீங்கள் வாங்கும் பொழுது முதலில் ஒரு வருடத்திற்கு உங்களுக்கு கொடுக்கப்படும். 

பின்பு ஒரு வருடம் கழித்து நீங்கள் ஒவ்வொரு வருடமும் அதற்கு பணம் செலுத்தி உங்கள் கஷ்டம் டொமைனை நீங்கள் Renewal செய்துகொள்ளவேண்டும். உங்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் கஷ்டம் டொமைனை ஆரம்பத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்கள் சேர்த்து முன்னதாகவே அதற்கு பணம் செலுத்தி நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

Add Custom Domain 

முதலில் நீங்கள் எந்த பிளாக்கரில் உங்கள் கஸ்டம் டொமைன் இணைக்க இருக்கிறீர்களோ அதன் Settings கிளிக் செய்ய வேண்டும். பின்பு அதில் Publishing Option- இல் உள்ள Custom Domain Option- ஐ கிளிக் செய்யவும். நீங்கள் முன்னதாக வாங்கிய கஸ்டம் டொமைன் URL- ஐ இங்கு டைப் செய்ய வேண்டும். அவ்வாறு டைப் செய்யும்பொழுது முதலில் (www) இணைத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு இந்த பிளாக்கரின் கஸ்டம் டொமைன் பெயர் tamilbloggers.xyz ஆகும். இதை நீங்கள் Custom Domain Option- இல் www.tamilbloggers.xyz என்று டைப் செய்ய வேண்டும். அவ்வாறு இணைக்கும் பொழுது முதலில் Error Message காண்பிக்கும். அதில் நீங்கள் கஸ்டம் டொமைன் வாங்கிய இணையதளத்தில் உங்கள் கஸ்டம் டொமைன் முகவரிக்கு DNS Setting கொடுக்கப்பட்டிருக்கும் அதில் சென்று சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கும். 

How To Add Custom Domain For Blogger In Tamil
How To Add Custom Domain For Blogger In Tamil

அதில் CNAME Setting- இல் 2 Setting செய்யவேண்டுமென்று கூறப்பட்டிருக்கும். மேலும் 4 IP Address கூகுளின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அதனை Copy செய்து உங்கள் பிளாக்கரின் DNS Setting- இல் Paste செய்ய வேண்டும். இந்த அனைத்து DNS Settings முடிந்தவுடன் தற்பொழுது உங்கள் பிளாக்கர் Settings Custom Domain- இல் உள்ள Save பட்டனை கிளிக் செய்யவும். தற்போது உங்களது கஸ்டம் டொமைன் இணைக்கப்பட்டுவிட்டது. இந்த 4 Ip Address – ம் DNS Setting- இல் “A” Record பகுதியில் சேவ் செய்ய வேண்டும். 

How To Add Custom Domain For Blogger In Tamil
How To Add Custom Domain For Blogger In Tamil

பின்பு உங்கள் பிளாக்கர் Settings- இல் உள்ள Publishing Option சென்று அங்கு உள்ள Redirect Domain Option- ஐ Enable செய்ய வேண்டும். அதன் பிறகு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் HTTPS, HTTPS redirect Options- ஐ Enable செய்ய வேண்டும். இத்துடன் கஸ்டம் டொமைன் Setting முடிந்துவிட்டது. உங்கள் ப்ளாக்கரில் கஸ்டம் டொமைன் இணைந்த பின்பு குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் கழித்து உங்கள் பிளாக்கர் தற்போதுள்ள கஸ்டம் டொமைன் URL-ல் Open ஆகிறதா என்று சரிபார்த்துக் கொள்ளவும். நீங்கள் கஸ்டம் டொமைன் இணைத்த பின்பு குறைந்தபட்சம் இருபது நிமிடங்கள் காத்திருக்கவும். கஸ்டம் டொமைன் இணைத்தவுடன் நீங்கள் உங்கள் பிளாக்கரை செக் செய்யும் பொழுது சரியாக வேலை செய்யாது. குறைந்தபட்சம் 20 நிமிடம் காத்திருந்து பின் உங்கள் பிளாக்கர் URL- செக் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *