How To Create Google Analytics For Blogger In Tamil

Google Analytics 

பிளாக்கர் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் அவர்களது பிளாக்கிற்கு Google Analytics Page உருவாக்குவது மிக அவசியமாகும். இந்த கூகிள் அனலிடிக்ஸ் பக்கத்தில் உங்களது பிளாக்கரில் விசிட் செய்யும் பார்வையாளர்களை பற்றிய தொழில்நுட்ப விஷயங்களை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். உதாரணத்திற்கு உங்கள் பிளாக்கிற்கு ஒருவர் வருகிறார் என்றால் அவர் இந்த நாட்டிலிருந்து, இந்த மொபைலை பயன்படுத்தி, நேரடியாகவோ அல்லது Keyword போட்டு கூகுளில் தேடி வருகிறாரா என்பன போன்ற பல்வேறு தகவல்களை நீங்கள் இந்த கூகுள் அனலிடிக்ஸ் பக்கத்தில் காணமுடியும். மேலும் உங்கள் பிளாக்கரில் Bounce Rate,Impression,Session Duration போன்ற தொழில்நுட்ப தகவல்களை நீங்கள் அறிய முடியும். இவை மட்டுமல்லாது இந்த கூகுள் அனலிடிக்ஸ் பக்கத்தில் மேலும் பல்வேறு விதமான தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.இந்த கூகிள் அனலிடிக்ஸ் பக்கம் உங்கள் பிளாக்கருக்கு எவ்வாறு உருவாக்குவது என்று இங்கு பார்ப்போம். 

Create Google Analytics 

How To Create Google Analytics For Blogger In Tamil
How To Create Google Analytics For Blogger In Tamil

முதலாவதாக கூகுள் அனலிடிக்ஸ் இணையதளத்தில் உங்கள் பிளாக்கருக்கு என்று ஒரு அக்கவுண்ட் உருவாக்க வேண்டும். கூகுள் அனலிட்டிக்ஸ் இணையதளம் சென்றவுடன் முதல் பக்கத்தில் நீங்கள் உருவாக்கி இருக்கும் அக்கௌன்ட் பற்றிய விவரங்கள் கொடுக்க வேண்டும். முதலாவதாக Account Name கொடுத்து கீழே உள்ள Next பட்டனை கிளிக் செய்யவும். அடுத்த பக்கத்தில் 3 Option கொடுக்கப்பட்டிருக்கும் அதில் Web,Apps,Apps and web இவ்வாறு இருக்கும். இதில் முதல் Option Web- ஐ செலக்ட் செய்து கீழேயுள்ள Next பட்டனை கிளிக் செய்யவும். அடுத்ததாக மூன்றாவது பக்கத்தில் உங்களது இணையதளத்தின் பெயர், இணையதளத்தின் URL முகவரி,Industry Category,Time Zone ஆகியவை கேட்கப்பட்டிருக்கும். இதில் இணையதளத்தில் பெயர் உங்கள் பிளாக்கரில் டைட்டில் கொடுக்க வேண்டும். அடுத்ததாக Website Url Option-இல் உங்கள் பிளாக்கரின் URL முகவரி கொடுக்க வேண்டும். இதற்கு அடுத்து பிளாக்கர் என்ன கேட்டகிரி என்று தேர்வு செய்ய வேண்டும். அதற்கு அடுத்ததாக Time Zone Option-இல் India செலக்ட் செய்து கொள்ளவும் அல்லது நீங்கள் எந்த நாட்டில் இருந்து இந்த பிளாக்கர் உருவாக்கி இருக்கிறீர்களோ அந்த நாட்டின் பெயரை செலக்ட் செய்யவும். இந்த பக்கத்தில் காட்டப்பட்டிருக்கும் அனைத்தும் பூர்த்தி செய்தவுடன் கீழே உள்ள Create பட்டனை கிளிக் செய்யவும். 

How To Create Google Analytics For Blogger In Tamil
How To Create Google Analytics For Blogger In Tamil

இதற்கு அடுத்து கூகுள் அனலிட்டிக்ஸ் பக்கத்தில் Agreement காண்பிக்கப்படும். இதில் உங்களது நாட்டின் பெயரை தேர்வு செய்து கொள்ளவும். அடுத்ததாக இதற்கு கீழே உள்ள Agreement Tick Box - ஐ டிக் செய்து கொள்ளவும். கடைசியாக கீழே இருக்கும் I Accept பட்டனை கிளிக் செய்யவும். இப்பொழுது உங்கள் பிளாக்கருக்கு என்று Google Analytics Propert Id உருவாக்கப்பட்டுவிட்டது. இதனை தற்போது உங்கள் திரையில் காண்பிக்கும் பக்கத்தில் காண முடியும். இதனை அடுத்து Tracking ID கீழே Global Tag Code கொடுக்கப்பட்டிருக்கும். இந்த கூகுள் அனலிட்டிக்ஸ் Tracking Id தான் உங்கள் பிளாக்கர் கான Google Anaytics property id ஆகும். இந்த கூகுள் அனலிடிக்ஸ் ஐடி எடுத்து உங்கள் பிளாக்கரில் Setting Option சென்று அங்குள்ள Google Analytics Id பகுதியில் Paste செய்ய வேண்டும். இதற்கு அடுத்ததாக Global tag Code காப்பி செய்து உங்கள் பிளாக்கரில் உள்ள Theme Option Edit HTML Option கிளிக் செய்து அதிலுள்ள "<head>" கீழே Paste செய்ய வேண்டும். 

Google Analytics Home 

இந்த கூகுள் அனலிட்டிக்ஸ் முகப்பு ( Home ) பக்கத்தில் பல்வேறுவிதமான Menu கொடுக்கப்பட்டிருக்கும். இதில் Home Menu- இல் உங்கள் பிளாக்கரில் கடந்த ஒரு வாரத்தில் எத்தனை Users,Session,Bounce,Session Duration போன்ற தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். இதற்கு அடுத்ததாக Real Time Option கிளிக் செய்தவுடன் இந்த பக்கத்தில் உங்களுக்கு தற்போது Live ஆக எத்தனை user உங்கள் பிளாக்கரை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள முடியும். மேலும் அவர்கள் என்ன நாட்டில் இருந்து பார்க்கிறார்கள், உங்கள் பிளாக்கரில் எந்த பக்கத்தினை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், எந்த Referral Link மூலம் வந்தார்கள், எந்த Keyword கூகுளில் தேடி வந்தார்கள் என்பன போன்ற பல்வேறு தகவல்கள் Live ஆக பார்க்க முடியும். இதுமட்டுமல்லாது Real Time பக்கத்தில் Users Location,Traffic,Content,Events,Conversion போன்ற பல்வேறு தகவல்களை நீங்கள் உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும். 

How To Create Google Analytics For Blogger In Tamil
How To Create Google Analytics For Blogger In Tamil

இதற்கு அடுத்ததாக Audience Menu கிளிக் செய்து உங்கள் பிளாக்கரில் இதுவரைக்கும் எத்தனை user வந்தார்கள் என்பதை பார்த்துக் கொள்ள முடியும். மேலும் அதில் Active User எத்தனை பேர், அவர்கள் பயன்படுத்தி வந்த மொபைல், எந்த Content படித்தார்கள், அவர்கள் வயது என்ன,Intrests என்ன என்பன போன்ற பல்வேறு தகவல்கள் இங்கு பெற முடியும். இந்த தகவல்கள் அனைத்தும் உங்கள் பிளாக்கரில் வளர்ச்சிக்கும், உங்கள் பிளாக்கரில் மேம்படுத்தவும் மிகவும் உதவிகரமாக இருக்கும். உங்கள் பிளாக்கருக்கு வரும் users பற்றிய முழுமையான விபரங்களை நீங்கள் தெரிந்து கொள்வதன் மூலம் அவர்களுக்கு என்ன மாதிரியான போஸ்ட் போட வேண்டும் என்று நீங்கள் முழுமையாக தெரிந்துகொள்ள முடியும். மேலும் உங்கள் பிளாக்கரில் நடக்கும் தேவையற்ற Invalid Clicks,Bounce rate பற்றிய விவரங்களை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். எந்த நாட்டில் எத்தனை Users உங்கள் பிளாக்கிற்கு வருகை தந்தார்கள் மற்றும் அதனால் ஏற்படும் Bounce rate மதிப்பு தெரிந்துகொள்ள முடியும். இதற்கு அடுத்ததாக உங்கள் பிளாக்கரில் ஒட்டுமொத்தமாக Users எவ்வளவு நேரம் தங்கி படிக்கிறார்கள் என்பன போன்ற தகவல்களை நீங்கள் Session Duration பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.

How To Create Google Analytics For Blogger In Tamil
How To Create Google Analytics For Blogger In Tamil

இந்த கூகிள் அனலிடிக்ஸ் பிளாக்கர் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் அவர்களுக்கு என்று உருவாக்குவது Adsense Apply செய்வதற்கு முக்கியமாகும்.Adsense Apply செய்யும்பொழுது இந்த கூகிள் அனலிடிக்ஸ் பக்கத்தினை கூகுள் நிறுவனம் உங்கள் பிளாக்கருக்கு உருவாக்கி இருக்கிறீர்களா என்று சரிபார்த்துக் கொள்ள முடியும். இதுமட்டுமல்லாது இது பிளாக்கர் வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் மட்டுமல்லாது நீங்கள் ஒரு Wordpress வைத்திருந்தாலும் இந்த கூகுள் அனலிடிக்ஸ் பக்கம் கண்டிப்பாக உருவாக்கியிருக்க வேண்டும்.

Post a Comment

2 Comments

  1. bro 2 blogger vachurken. 2 blogkum orey analiytics id than kuduthuruken. 2kum thani thaniya open pannamua illa oru id irunthaley pothuma

    ReplyDelete

Please Don't Post Spam Comments