How To Create Search Console For Blogger In Tamil

How To Create Search Console For Blogger In Tamil

Search Console 

உங்கள் பிளாக்கருக்கு Search Console Page உருவாக்குவதன் மூலம் உங்கள் பிளாக்கரில் போஸ்ட் செய்யும் ஒவ்வொரு போஸ்ட் கூகுளில் நீங்கள் Index செய்ய முடியும். மேலும் உங்கள் பிளாக்கரில் தொழில்நுட்ப ரீதியிலான தவறுகளை இந்த Search Console பக்கத்தில் பார்த்துக் கொள்ளலாம். அது மட்டுமல்லாது உங்கள் பிளாக்கரில் என்ன மாதிரியான Performance நடக்கிறது என்பது போன்ற தகவல்களை இங்கு காண முடியும். உங்கள் பிளாக்கரில் போஸ்ட் செய்யும் ஒரு போஸ்ட் Automatic ஆக Index ஆகவில்லை என்றால் Search Console பயன்படுத்தி Manual ஆக Index செய்ய முடியும். இவ்வாறு உங்கள் பிளாக்கர் வளர்ச்சிக்கும் அதன் தொழில்நுட்ப தவறுகளையும் சுட்டிக்காட்டும்போது தளமாக இந்த Search Console செயல்படுகிறது. கூகுள் பிளாக் உருவாக்கும் ஒவ்வொருவரும் அவரவர் பிளாக்கருக்கு கண்டிப்பாக இந்த Search Console Page உருவாக்குவது கட்டாயமாகும். இந்த பதிவில் எப்படி இந்த பேஜ் உருவாக்குவது பற்றி தெளிவாக பார்ப்போம். 

Create Search Console Page 

கூகுளில் ” Search Console ” என்ற தேடும்போது முதல் இணையதளமாக இந்த இணையதளம் காண்பிக்கப்படும். அதனைக் கிளிக் செய்து உங்கள் பிளாக்கருக்கு தேவையான சர்ச் கன்சோல் Page உருவாக்கமுடியும். நீங்கள் எந்த ஜிமெயில் ஐடி- இல் பிளாக்கர் உருவாக்கி இருக்கிறீர்களோ அதே ஜி மெயில் ஐடியில் தான் இந்த சர்ச் கன்சோல் பேஜ் உருவாக்க வேண்டும். இதை உருவாக்குவதற்கு முன்பு நீங்கள் எந்த Gmail ID-ல் உங்கள் பிரவுசரில் Login செய்து உள்ளீர்கள் என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். தற்பொழுது நீங்கள் இந்த சர்ச் கன்சோல் Page வந்தவுடன் முதலாவதாக உங்கள் இணைய தளத்தின் முகவரி கொடுக்க வேண்டும். இதில் உங்கள் இணைய தளத்தின் முகவரி 2 முறைகளில் கொடுக்க முடியும். உதாரணத்திற்கு ” Domain” மற்றும் “URL Prefix” ஆகிய இரு Option இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் Domain Option- இல் உங்கள் இணையதளத்தின் முகவரி கொடுக்க விரும்பினால் அது “tamilbloggers.xyz” என்று கொடுக்க வேண்டும். அல்லது URL Prefix Option- இல் முகவரி கொடுக்க விரும்பினால் அவை ” https://www/tamilbloggers.xyz ” என்று கொடுக்க வேண்டும். இவற்றில் ஏதாவது ஒன்றில் உங்கள் இணையதளத்தின் முகவரி கொடுத்து கீழே உள்ள Continue பட்டனை கிளிக் செய்து உங்கள் பிளாக்கருக்கு Search Console Page உருவாக்க வேண்டும். 

How To Create Search Console For Blogger In Tamil
How To Create Search Console For Blogger In Tamil

அவ்வாறு உருவாகிய உடன் திரையில் ” Ownership auto verified ” என்கிற மெசேஜ் காட்டும். இதிலுள்ள Go property என்கிற Option கிளிக் செய்தால் உங்கள் பிளாக்கருக்கு உருவாக்கிய Search Console Page Dashboard சென்றுவிடும். தற்பொழுது உங்கள் Dashboard- இல் உங்கள் பிளாக்கர் சம்பந்தமான Overview,Performance,Coverage போன்ற தகவல்கள் பெறமுடியும். இந்த Page உருவாக்கிய உடன் இதில் எவ்வித தகவலும் ஆரம்பத்தில் Empty ஆக இருக்கும். குறைந்தபட்சம் 24 மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை முதல் தகவல்(Reports) தெரிய கால அளவு எடுத்துக் கொள்ளும். 

Overview 

How To Create Search Console For Blogger In Tamil
How To Create Search Console For Blogger In Tamil

பொதுவாக இதில் உங்கள் பிளாக்கரில் Performance , Coverage, Enchancement போன்ற தகவல்கள் ஒரு Overview ஆக ஒரே பக்கத்தில் காட்டும். இந்த Reports நீங்கள் தனித்தனியாக பார்க்க விரும்பினாலும் இதற்கென்று தனியாக Performance,Coverage,Enhancements போன்ற தகவல்களை நீங்கள் தனித்தனியே இடது பக்கத்தில் கிளிக் செய்வதன் மூலம் பார்க்க முடியும். இதில் உங்கள் பிளாக்கரில் எத்தனை கிளிக் செய்துள்ளார்கள் ஆகிய தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும். மேலும் உங்கள் பிளாக்கரில் தொழில்நுட்ப ரீதியிலான தவறுகளை இந்த Coverage Option கிளிக் செய்வதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். பெரும்பாலும் இதில் காண்பிக்கப்படும் பிரச்சினைகள் அனைத்தும் சில அடிப்படை புரிதலுக்கு பின்பு இதில் எவை உங்கள் பிளாக்கரில் தவறு செய்துள்ளீர்கள், எவை உங்கள் பிளாக்கருக்கு பிரச்சனை இல்லை என்பன போன்ற Reports கொடுக்கப்பட்டிருக்கும். இந்த Coverage பக்கத்தில் காண்பிக்கப்படும் அனைத்துமே உங்கள் பிளாக்கருக்கு பிரச்சனைகள் தான் என்று முடிவு எடுக்க வேண்டிய அவசியமில்லை. 

URL Inspection 

How To Create Search Console For Blogger In Tamil
How To Create Search Console For Blogger In Tamil

இதில் நீங்கள் உங்கள் பிளாக்கரில் இருக்கும் ஒவ்வொரு போஸ்ட் URL லிங்க் எடுத்து இதில் காட்டப்பட்டிருக்கும் ஒரு Search Box – இல் கொடுத்து கிளிக் செய்வதன் மூலம் அந்த போஸ்ட் Index ஆகிவிட்டதா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள முடியும். மேலும் ஒரு குறிப்பிட்ட போஸ்ட் கூகுளில் Index ஆகவில்லை என்றாலும் இதனை பயன்படுத்தி அந்த போஸ்ட்- ஐ நீங்கள் Manual ஆக Index பண்ண முடியும். மேலும் குறிப்பிட்ட அந்த போஸ்ட்- இல் உள்ள மற்ற தவறுகள் என்ன என்பதைப்பற்றி ஒரு Report ஆக பார்க்க முடியும். நீங்கள் இதில் URL Inspection செய்யும் ஒவ்வொரு போஸ்ட்- இன் Coverage,Mobile Usability,Breadcrumbs போன்ற தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம். பொதுவாக உங்கள் பிளாக்கரில் போடும் ஒவ்வொரு போஸ்ட் Automatic ஆக Index ஆகிவிடும், இவ்வாறு அதற்கு முதலில் அந்த போஸ்ட் Search Console page ஆல் Crawlers செய்து Update செய்யப்பட வேண்டும். அதற்கு அடுத்ததாக அந்த குறிப்பிட்ட போஸ்ட் Index ஆகுவதற்கு மூன்றிலிருந்து ஏழு நாட்கள் வரை கால அளவு எடுத்துக் கொள்ளும். 

Sitemap 

How To Create Search Console For Blogger In Tamil
How To Create Search Console For Blogger In Tamil

அடுத்ததாக இதில் உங்கள் பிளாக்கருக்கு Sitemap URL லிங்க் கொடுக்க வேண்டும். இதனுடன் உங்கள் பிளாக்கருக்கு என்று Atom லிங்க் கொடுக்க வேண்டும். இவை இரண்டும் கொடுத்தால் மட்டுமே உங்கள் பிளாக்கரில் உள்ள அனைத்து போஸ்ட் இந்த சர்ச் கன்சோல் page- இல் Update செய்யப்படும். உங்கள் பிளாக்கில் உள்ள தவறுகள் சம்பந்தமான அனைத்து அறிவிப்புகளும் உங்களால் இந்த Search Cosnole பக்கத்தில் பார்க்க முடியும். இந்த Sitemap Link கொடுப்பதற்கு முன்பாக முதலில் உங்கள் பிளாக்கருக்கு Custom Robots.txt உருவாக்க வேண்டும். இந்த Custom robots.txt  ( labnol.org/blogger/sitemap ) என்கிற இணையதளத்தில் உருவாக்கிக் கொள்ளலாம். அந்த இணைய தளம் சென்றவுடன் முதலில் உங்கள் பிளாக்கர் முகவரி போட்டு உருவாக்க வேண்டும். குறிப்பாக இந்த Custom Robots.txt உருவாக்குவதற்கு முன்பு உங்கள் பிளாக்கரில் குறைந்தபட்சம் இரண்டு போஸ்ட் Publish செய்துவிட்டு உருவாக்க வேண்டும். 

How To Create Search Console For Blogger In Tamil
How To Create Search Console For Blogger In Tamil

இந்த Custom robots.txt உருவாக்கிய உடன் அதனை உங்கள் பிளாக்கர் Setting க்ளிக் செய்து அதில் ” crawlers And Indexing ” Option கீழுள்ள ” enable custom robots.txt” Enable செய்து custom robots.txt option- இல் Paste செய்ய வேண்டும். பின்பு உங்கள் Search Console Page – இல் உள்ள Sitemap Option- இல் sitemap link மற்றும் Atom Link கொடுக்க வேண்டும். இந்த Sitemap Link உங்கள் பிளாக்கரின் முழு முகவரியுடன் இணைந்து இருக்கும் உதாரணத்துக்கு “sitemap.xml ” . இதேபோன்று ஒரு பிளாக்கருக்கு உருவாக்கிய custom robots.txt code- இல் உள்ள “atom” Link ஐ Copy செய்து இந்த sitemap- இல் தரவேண்டும். இந்த Search Console பக்கத்தில் மேலே கூறிய Sitemap Setting மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இவ்வாறு உருவாக்கும் Sitemap உங்கள் பிளாக்கரில் நடக்கும் மாற்றங்கள், பிளாக்கரின் தொழில்நுட்ப தகவல்கள், தொழில்நுட்ப பிரச்சனைகள் மற்றும் பல்வேறுவிதமான அடிப்படைத் தகவல்களை ஒரு Report ஆக கொடுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *