How To Setup Adsense Ads On Blogger In Tamil

How To Setup Adsense Ads On Blogger In Tamil

Adsense Ads 

உங்கள் பிளாக்கருக்கு Adsense Ads அப்ரூவல் வாங்கிய பின்பு Enable செய்ய வேண்டும். இதில் இரண்டு வகை விளம்பரங்கள் உள்ளன. அவற்றில் Auto Ads மற்றும் By Ad unit என இரண்டு விதமான விளம்பர அமைப்புகள் ( Settings ) உள்ளது. இவற்றில் Auto Ads Enable செய்வது சுலபமாகும். உங்கள் பிளாக்கர் ஆட்சென்ஸ் அப்ரூவல் வாங்கியவுடன் உங்கள் ஆட்சென்ஸ் பக்கத்திற்கு சென்று இதனை Set செய்ய வேண்டும். கூகுள் தரப்பிலிருந்து இந்த ஆட்டோ ஆட்ஸ் உங்கள் பிளாக்கரில் வைக்கும்பொழுது கூடுதலாக 40% அதிக பணம் விளம்பரம் மூலம் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. By Ad unit Ads உங்கள் பிளாக்கரில் நீங்கள் விரும்பும் இடத்தில் இந்த விளம்பரங்கள் கொடுக்க இயலும். இந்த இரண்டு விளம்பரங்கள் எப்படி உருவாக்க வேண்டும் என்று விரிவாகப் பார்ப்போம். 

Adsense Auto Ads 

இந்த விளம்பரங்கள் தானியங்கி முறையில் உங்கள் பிளாக்கரில் செயல்படும். இதற்கு நீங்கள் Manual ஆக விளம்பரங்களை Set செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. உங்கள் பிளாக்கருக்கு ஆட்சென்ஸ் அப்ளை செய்யும்பொழுது ஒரு Verification Code எடுத்து உங்கள் பிளாக்கரில் Edit HTML செட்டிங்ஸில் கொடுத்து இருப்பீர்கள், உங்கள் பிளாக்கருக்கு அட்சன்ஸ் அப்ரூவல் ஆனபின்பு அந்த Code மூலம் விளம்பரங்கள் தெரியும். இந்த Verification Code கொடுத்தவுடன் உங்கள் ஆட்சென்ஸ் அக்கவுண்டில் Auto Ads Enable செய்ய வேண்டும். 

How To Setup Adsense Ads On Blogger In Tamil
How To Setup Adsense Ads On Blogger In Tamil

சிலருக்கு இந்த Auto Ads ஆட்சென்ஸ் அப்ளை செய்தவுடன் Setup செய்ய இயலாது. இந்த Setting உங்களது ஆட்சென்ஸ் அக்கவுண்டில் உள்ள “Ads” Option- இல் செய்ய வேண்டும். பெரும்பாலும் புதிதாக பிளாக்கருக்கு ஆட்சென்ஸ் அப்ளை செய்பவர்களுக்கு இந்த Setting Disable ஆக இருக்கும். அவர்களுக்கு ஆப்ஷன்ஸ் அப்ரூவல் ஆனவுடன் Auto Ads Set செய்து கொள்ளலாம். நீங்கள் பிளாக்கருக்கு ஆட்சென்ஸ் அப்ளை செய்யும் பொழுது இந்த Auto Ads செய்ய மறந்திருந்தால் பின்னர் அதனை Enable செய்துகொள்ள இயலும். பொதுவாக நீங்கள் Auto Ads Enable செய்தவுடன் அதிகபட்சம் ஒரு மணி நேரத்திற்குள் உங்கள் பிளாக்கரில் விளம்பரம் தெரிய ஆரம்பித்துவிடும். 

Adsense By Ad unit 

இந்த Ad Unit விளம்பரங்கள் நீங்கள் Manual ஆகா சென்று உருவாக்க வேண்டும். இதற்கென்று பிரத்தியேகமாக ஒரு Ads Code உங்கள் ஆட்சென்ஸ் அக்கவுண்டில் உருவாக்க வேண்டும். இம்மாதிரியான விளம்பரங்கள் உருவாக்குவதற்கு உங்கள் ஆட்சென்ஸ் அக்கவுண்டில் உள்ள ” Ads ” Option- க்ளிக் செய்ய வேண்டும். அதில் “By ad unit” என்கிற பட்டனை கிளிக் செய்தவுடன் அடுத்த பக்கத்தில் மூன்றுவிதமான Ad Setting காண்பிக்கப்படும். இவற்றில் Display Ads – In Feed Ads – Article Ads என மூன்றுவிதமான விளம்பர அமைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். 

How To Setup Adsense Ads On Blogger In Tamil
How To Setup Adsense Ads On Blogger In Tamil

நீங்கள் உங்கள் பிளாக்கருக்கு Auto ads செய்திருந்தால் இந்த By Ad unit விளம்பரத்தினை அதிகம் உபயோகப்படுத்தாமல் குறைந்த அளவே தேவையான இடங்களில் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு உங்கள் பிளாக்கர் போஸ்டில் தலைப்பின் கீழும் மற்றும் அந்த போஸ்டின் கடைசி முடிவிலும் கொடுக்கலாம் ( Ads Below Post Title And Post Ending Section ). இதற்கு நீங்கள் Article ads விளம்பரத்தினை உபயோகப்படுத்தலாம். இதில் கொடுக்கப்பட்டிருக்கும் மூன்றுவிதமான விளம்பரத்திற்கும் Ads Code எடுக்கும் முறை ஒரே மாதிரியான தாகும். உதாரணத்திற்கு Article Ads எப்படி எடுக்க வேண்டுமென்று கீழே உள்ள இமேஜில் தெரிந்துகொள்ளலாம். அதே மாதிரியாக மற்ற விளம்பரங்களை நீங்கள் எடுத்துக் கொள்ள இயலும். 

How To Setup Adsense Ads On Blogger In Tamil
How To Setup Adsense Ads On Blogger In Tamil

நீங்கள் ஆர்டிகள் ஆட்ஸ் கொடுக்க வேண்டுமென்றால் உங்களது பிளாக்கரில் உள்ள Themes Setting சென்று Edit HTML கிளிக் செய்ய வேண்டும். அதில் data:post.body என்று தேட வேண்டும். உங்களது ஆர்டிகல் ஆட்ஸ் Code- ஐ இந்த ( data:post.body ) மேலே கொடுக்க வேண்டும் மற்றும் கீழே கொடுக்க வேண்டும். இவ்வாறு இரண்டு இடங்களில் கொடுப்பதன் மூலம் உங்கள் பிளாக்கர் போஸ்டில் அதன் தலைப்பிலும் மற்றும் அந்த போஸ்டின் முடிவிலும் இரண்டு விளம்பரங்கள் தெரியும்.

How To Setup Adsense Ads On Blogger In Tamil
How To Setup Adsense Ads On Blogger In Tamil

இதில் Display Ads விளம்பரத்தினை உங்கள் பிளாக்கரில் Header Ads மற்றும் Home Ads Section- இல் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு நீங்கள் Display Ads கிளிக் செய்து விளம்பர Code உருவாக்க வேண்டும், அவ்வாறு உருவாக்கிய விளம்பர Code- ஐ எடுத்து உங்கள் பிளாக்கரில் Layout Setting சென்று அங்கு உள்ள Header Ads அல்லது Home Ads- இல் கொடுக்கவும். சில பிளாக்கர் டெம்ப்ளேட்- இல் ஹோம் ஆட்ஸ் கொடுப்பதற்கு Option இல்லாமல் இருக்கும் அம்மாதிரியான டெம்ப்ளேட்டில் நீங்கள் ஹோம் ஆட்ஸ் கொடுக்க இயலாது. அதற்கு பதிலாக நீங்கள் Header Ads பயன்படுத்திக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *