What Are The Blogger Eligibility For Adsense Approval In Tamil

What Are The Blogger Eligibility For Adsense Approval In Tamil

What Are The Blogger Eligibility For Adsense Approval In Tamil
What Are The Blogger Eligibility For Adsense Approval In Tamil

Adsense Approval Eligibility 

இன்று பலரும் வெப்சைட் ஆரம்பித்து அதில் பணம் சம்பாதிக்கும் எண்ணத்தோடு ஆரம்பிக்கிறார்கள். இதில் பணம் சம்பாதிக்க கூகுளின் Adsense முக்கிய பங்கு வகிக்கிறது. பலர் தங்களுக்கு வெப்சைட்-க்கு ஆட்சென்ஸ் கிடைக்க நீண்ட நாட்கள் முயற்சி செய்து அதில் வெற்றியும் சிலர் தோல்வியும் அடைகிறார்கள். கூகுளின் Adsense Approval வாங்குவது என்பது மிக சுலபமாக இருக்கும் ஒரு விஷயமாக இருக்கும் பட்சத்தில் அதில் பலரும் தோல்வியடைய சில காரணங்கள் இருக்கின்றன. 

இந்த காரணங்கள் பெரும்பாலும் அவர்களது பிளாக்கரில் இருக்கும் தொழில்நுட்ப பிரச்சினைகளாகும். ஒருவருக்கு கூகுளின் ஆட்சென்ஸ் நிராகரிக்கப்படும் போது அதற்கு என்ன காரணங்கள் என்று கண்டறிவது மிகக் கடினமான ஒன்றாக பலருக்கும் இருக்கிறது. இந்த பதிவில் உங்கள் பிளாக்கர் என்னென்ன தகுதிகள் இருக்கும் பட்சத்தில் Adsense Approval கிடைக்கும் என்று பார்ப்போம். 

Blogger SEO Setup 

ஒரு பிளாக்கர் உருவாக்கிய உடன் அதில் முக்கியமாக SEO Setup முக்கிய பங்காகும். இவற்றில் Google Analytics ID உருவாக்குவது,Description கொடுப்பது,Custom Domain Add செய்வது,Search Console Page உருவாக்குவது,Meta Tag எழுதுவது என்றுபல முக்கிய Settings உள்ளன. இவை அனைத்தும் உங்கள் பிளாக்கரில் SEO Rank அதிகரிப்பதற்கு உதவியாக இருக்கும், மற்றும் ஒரு பிளாக்கர் என்று எடுத்துக்கொண்டால் இவை அனைத்தும் முறையாக கொடுப்பது அடிப்படை Setting ஆகும். 

Google Analytics ID உருவாக்குவதன் மூலம் உங்கள் பிளாக்கரில் எத்தனை நபர்கள் வருகிறார்கள் என்று தெரிந்துகொள்ள முடியும். மேலும் உங்கள் இணையதளம் வரும் நபர்கள் எந்த நாட்டிலிருந்து எந்த Device மூலம் உங்கள் போஸ்ட்- ஐ படிக்கிறார் என்று தெரிந்துகொள்ள இயலும். மேலும் இதில் Viewers சம்பந்தமான பல்வேறு தகவல்களை உங்கள் பிளாக்கருக்கு என்று உருவாக்கிய Google Analytics Page- இல் தெரிந்து கொள்ள இயலும். இந்த Google Analytics தகவல்கள் அனைத்தும் உங்கள் பிளாக்கரின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். 

உங்கள் பிளாக்கருக்கு Description எழுதுவது என்பது பிளாக்கரில் category என்ன என்று கூகுளுக்கு புரிய வைக்க முடியும். மற்றும் உங்களது இணையதளம் கூகுளில் தெரியும் பொழுது இந்த Desciprion தான் பிளாக்கர் URL கீழே இருக்கும். உங்கள் பிளாக்கரில் என்ன Category- இல் போஸ்ட் போடுகிறீர்கள் என்பதை சொல்லும் விதமாகவும் இந்த Description அமையும். 

ஒரு பிளாக்கருக்கு Custom Domain என்பது மிக முக்கிய ஒன்றாகும். உங்கள் பிளாக்கரின் அடையாளம் என்பது நீங்கள் என்ன பெயரில் கஸ்டம் டொமைன் Add செய்கிறீர்கள் என்பதை பொருத்து அமையும். உங்கள் Viewers- க்கு உங்கள் இணையதளத்தின் முகவரியை ஞாபகம் வைத்துக்கொள்ள இந்த கஸ்டம் டொமைன் மிக உதவியாக இருக்கும். மேலும் உங்கள் இணையதளத்தின் SEO Rank-க்கும் பேருதவியாக இது அமைகிறது. 

Search Console Page உங்கள் பிளாக்கருக்கு கட்டாயமாக உருவாக்க வேண்டும். இவற்றின் முக்கிய வேலை உங்கள் பிளாக்கரில் எத்தனை போஸ்ட் போடுகிறீர்கள் என்று Crawl செய்து Data Report உருவாக்கி கூகிளில் உங்களது ஒவ்வொரு போஸ்ட்- இம் Index செய்ய வைக்கிறது. ஒரு நபர் ஒரு Keyword டைப் செய்து தேடும்பொழுது உங்களது போஸ்ட் முதல் பக்கத்தில் காண்பிக்கப் படுவது இந்த Search Console மூலமாகும். மேலும் உங்கள் பிளாக்கரில் என்னென்ன தவறுகள் இருக்கிறது என்று Data Report வைத்துக்கொள்வோம். உங்கள் பிளாக்கரில் உள்ள தவறுகள் மற்றும் பிளாக்கரில் சரி செய்ய வேண்டிய முக்கிய Reports உங்களுக்கு காண்பிக்கும். 

Meta Tag என்பது உங்கள் பிளாக்கரில் என்னென்ன போஸ்ட் போடுகிறீர்கள் என்பதை மிகச் சுருக்கமாக Tags முறையில் கொடுக்கலாம். இந்த Tags உங்கள் பிளாக்கரில் SEO Setting-ல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த Meta Tags மிகச்சரியாக கொடுக்கும் பட்சத்தில் உங்கள் பிளாக்கர் எதிர்காலத்தில் அதிக Traffic பெறுவதற்கு உதவியாக இருக்கும். இவற்றில் எழுதும் Tags அனைத்தும் Search Volume அதிகம் உள்ள Keywords போட்டு எழுதுவது உங்கள் இணையதளத்தின் SEO Rank தரத்தை உயர்த்த உதவியாக இருக்கும். 

Blogger Design 

உங்கள் பிளாக்கரில் என்ன டெம்பிளேட் பயன்படுத்தினாலும் அதில் உங்கள் பிளாக்கருக்கு என்று Privacy Policy,Terms And Conditions ,Contact,About,Disclaimer Pages கட்டாயமாக இருக்க வேண்டும். மேலும் உங்கள் பிளாக்கருக்கு என்று Social Media Page வைத்துக்கொள்வது Adsense Approval வாங்க நம்பிக்கையாக இருக்கும். உங்கள் பிளாக்கரில் Sidebar பகுதியில் Follow By Email,Popular Post,Labels இருக்குமாறு உருவாக்குவது ஒரு Viewr-க்கு பிளாக்கரில் என்னென்ன தலைப்பில் போஸ்ட் இருக்கிறது என்று பார்க்க வசதியாக இருக்கும். மேலும் உங்கள் பிளாக்கரை Follow செய்ய ஏதுவாக இருக்கும். 

பிளாக்கரின் Main Menu Section-ல் உங்கள் பிளாக்கரில் இருக்கும் ஏதாவது ஒரு Label லிங்கை கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுப்பது ஒரு பயனாளருக்கு உங்கள் பிளாக்கரில் உள்ள Category- ஐ எடுத்துக் காண்பிப்பது போல் அமையும். இந்த Main menu-ல் எத்தனை Menu வேண்டுமானாலும் உருவாக்கி கொள்ளலாம். 

Blogger Content 

உங்கள் பிளாக்கரில் எழுதும் ஒவ்வொரு போஸ்ட் குறைந்தபட்சம் 450 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்குமாறு எழுத வேண்டும். வேறு ஒரு இணைய தளத்திலிருந்து Copy செய்து உங்களது பிளாக்கரில் Paste செய்யக்கூடாது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் உங்களது ஆட்சென்ஸ் நிராகரிக்கப்படும். மேலும் வேறு ஒரு இணைய தளத்தில் உள்ள Content Copy செய்து Rewrite மாற்றம் செய்து உங்களது பிளாக்கரில் போடக்கூடாது. இவை அனைத்தும் Google Adsense Policy -க்கு எதிரானதாகும். உங்கள் பிளாக்கில் உள்ள ஒவ்வொரு போஸ்ட் நீங்களே சொந்தமாகவும், தகவல் பரிமாறிக் கொள்வதாகவும் இருக்க வேண்டும்.

இவை அனைத்தும் உங்கள் பிளாக்கரில் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்கள் பிளாக்கருக்கு Adsense Approval கிடைப்பது மிக சுலபமாகும். மேலும் உங்கள் பிளாக்கரில் தினமும் போஸ் போடுவதன் மூலம் உங்கள் பிளாக்கரை Active ஆக வைத்துக்கொள்ள முடியும். நீங்கள் Adsense Apply செய்யப் போகிறீர்கள் என்றால் உங்கள் பிளாக்கரில் தொடர்ந்து போஸ்ட் செய்திருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *