
Website Title: | |
Author: | |
Description: | |
Keywords*: | |
* Separate with commas | |
Your Meta-Tags. Copy
and paste into the Head section of your HTML document
SEO Tag
உங்கள் பிளாக்கரில் நீங்கள் எழுதும் ஒவ்வொரு போஸ்ட் SEO Keywords போட்டு எழுதப்பட்டாலும் அவை பிளாக்கர் போஸ்ட் மட்டுமே SEO Rank அடைய வகை செய்யும். இதற்கு அடுத்ததாக உங்கள் இணைய தளத்திற்கு நீங்கள் SEO Rank செய்ய வேண்டுமென்றால் அதனை நீங்கள் ஒரு HTML Code வடிவத்தில் கொடுக்கலாம். அதில் உங்கள் பிளாக்கரின் முக்கிய Setting அதாவது Title,Description,Keywords மற்றும் பல அமைப்புகள் ஒரு HTML Code வடிவத்தில் உருவாக்கி அதனை நீங்கள் <head> கீழே கொடுக்க வேண்டும். இவ்வாறு உருவாக்கவேண்டிய HTML Code- ஐ Tag வடிவமாக கொடுப்பதற்கு " Meta Tag " என்று அழைப்பார்கள். இதனை நீங்கள் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள Tool மூலம் மிக சுலபமாக உருவாக்கிக்கொள்ள முடியும்.
Meta Tag
ஒவ்வொரு பிளாக்கரில் Meta Tag கொடுப்பது என்பது உங்களது பிளாக்கரின் SEO Rank மேம்படுத்த உதவுகிறது. இதற்கு முந்தைய பதிவில் இந்த Meta Tag Manual ஆக எப்படி உருவாக்கி அதனை உங்கள் பிளாக்கரில் கொடுப்பது என்பது பற்றி விளக்கி இருந்தோம். உங்கள் பிளாக்கரில் நீங்கள் Setting பகுதியில் டைட்டில், டிஸ்கிரிக்ஷன், Meta Tag ஆகியவை கொடுத்து இருப்பீர்கள். இதே Settings- ஐ உங்கள் பிளாக்கரில் ஒரு Code ஆக கொடுப்பதற்கு பெயர் Meta Tag ஆகும். இதனை நீங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள Tool மூலம் தேவையான விவரங்களை கொடுத்து உருவாக்கிக் கொள்ள முடியும். இதில் உங்கள் பிளாக்கர் டைட்டில்,Description,Author,Robots,Distribution,Keywords ஆகிய விவரங்களை கொடுத்து நீங்கள் உருவாக்கிக் கொள்ள முடியும். இவ்வாறு இந்த Meta Tag உருவாக்கி உங்கள் பிளாக்கரில் கொடுப்பதன் மூலம் பிளாக்கரின் SEO தரம் உயர்த்தப்படுகிறது. ஒருவர் கூகுளில் keyword போட்டு தேடும்பொழுது அதற்கு சம்பந்தமான போஸ்ட் உங்கள் பிளாக்கரில் இருக்கும்பட்சத்தில் அவை கூகுளின் தேடுதளத்தில் முதற்பக்கத்தில் காட்டும். அவர் முதற்பக்கத்தில் காட்டப்படும் பொழுது உங்கள் Meta Tag- இல் என்ன Description கொடுத்துள்ளீர்கள் என்பதை காட்டும். அதுமட்டுமல்லாது ஒருவர் தேடும் Keyword உங்களது Description-இல் இருக்கும் பொழுது உங்களது இணையதளம் முதலில் காட்டுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
Meta Tag Generator
இந்த பக்கத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள Tool மூலம் நீங்கள் உங்கள் பிளாக்கருக்கு Meta Tag Automatic ஆக உருவாக்கிக்கொள்ள முடியும். இந்த Tool- இல் கேட்கப்பட்டுள்ள Titile,Description,Author,Keywords,Distribution,Robots போன்ற விவரங்களை கொடுத்தவுடன் கீழே இருக்கும் " Create " என்கிற பட்டனை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் உங்கள் பிளாக்கருக்கு தேவையான Meta Tag தானாக உருவாகி விடும். இதில் டைட்டில் என்கிற பகுதியில் உங்கள் பிளாக்கருக்கு நீங்கள் என்ன டைட்டில் கொடுத்துள்ளீர்கள் என்று பார்த்து அதனை டைப் செய்யவும் . அடுத்ததாக உங்கள் பிளாக்கருக்கு என்று Author Name கொடுத்துள்ளீர்கள் என்றால் அதனை டைப் செய்யலாம் அல்லது நீங்களாக ஒரு பெயர் கொடுக்கலாம். இதற்கு அடுத்து Description எழுத வேண்டும், இவை பெரும்பாலும் உங்கள் பிளாக்கரில் எம்மாதிரியான பிளாக் போஸ்ட் போடுகிறீர்கள் என்பதைப் பொருத்து எழுத வேண்டும். கடைசியாக Keywords என்பது Single Words ஆக கொடுப்பதாகும்.
![]() |
Automatic SEO Meta Tag Generator For Blogger In Tamil |
இதில் எழுதப்படும் Keywords- ஐ நீங்கள் கூகுளின் Keyword Planner- இல் இருந்து எடுத்துக்கொள்ளலாம். பெரும்பாலும் கூகுள் Keyword Planner- இல் Low Competition keywords மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும். இதற்கு அடுத்தபடியாக Distribution பகுதியில் "Global,Local,Intern Use" ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கும். இதில் நீங்கள் " Global " என்று தேர்வு செய்து கொள்ளவும். இறுதியாக "Robots" Setting- இல் "All,None,No Index,Follow,No Follow" ஆகிய Option கொடுக்கப்பட்டிருக்கும். இதில் Robots பகுதியில் "All"- ஐ செலக்ட் செய்யவும். இவை அனைத்தும் கொடுக்கப்பட்ட பின்பு இறுதியாக கீழே உள்ள "Create" பட்டனை கிளிக் செய்தவுடன் உங்கள் பிளாக்கருக்கு தேவையான "Meta Tag" உருவாக்கப்பட்டு விடும். இதனை நீங்கள் உங்கள் பிளாக்கர் Theme Option- உள்ள Edit Html கிளிக் செய்து "<head>" Section கீழே பேஸ்ட் செய்ய வேண்டும்.
0 Comments
Please Don't Post Spam Comments