![]() |
How To Create SEO Meta Tag For Blogger In Tamil |
SEO Meta Tag
பிளாக்கர் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் அவர்கள் பிளாக்கருக்கு SEO Setting முறையாக செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். அவ்வாறான வீடியோக்கள் நமது தமிழ் பிளாக்கர்ஸ் யூடியூப் சேனலில் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் பிளாக்கருக்கு நீங்கள் எழுதும் ஒவ்வொரு போஸ்டில் SEO Keywords உடன் எழுதுவது ஒரு முறையாகும். இதற்கு அடுத்ததாக உங்கள் பிளாக்கரில் Setting Option-ல் Description,Search Console,Analytics Id கொடுப்பது என்பது வேறு ஒரு SEO முறையாகும். இந்த வரிசையில் அடுத்தது Meta Tag மூலம் உங்கள் பிளாக்கருக்கு நீங்கள் SEO செய்ய முடியும். இந்த முறையில் நீங்கள் ஒரு Java Script Code மூலம் ஒரு SEO Meta Tag உருவாக்க வேண்டும். இந்த Meta Tag Code நேரடியாக உங்கள் பிளாக்கர் Theme Section- இல் கொடுக்க வேண்டும். இவ்வாறான இந்த SEO Meta Tag எவ்வாறு கொடுப்பது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
Benefit Of Meta Tag
இந்த SEO Meta Tag- இல் உங்கள் பிளாக்கருக்கு தேவையான டைட்டில்,Description,Author Name,Robots போன்ற முக்கிய Option நீங்கள் Fill செய்ய வேண்டும். மேலும் இந்த டாக் நேரடியாக உங்கள் பிளாக்கரின் Theme Option- இல் கொடுப்பதால் உங்கள் பிளாக்கரில் SEO Rank உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் ஒரு நபர் keyword Type செய்து கூகுளில் தேடும் பொழுது உங்கள் பிளாக்கரில் முகப்பு பக்கம் காட்டப்படும் பட்சத்தில் நீங்கள் கொடுத்திருக்கும் Description காட்டப்படும். மேலும் நீங்கள் அந்த Description- இல் முக்கிய SEO Keywords போட்டு எழுதும் பொழுது அது உங்கள் பிளாக்கரின் Category என்ன என்பதை கூகுள் புரிந்துகொள்ள முடிகிறது. மேலும் அதில் keyword Meta Tag கொடுப்பதன் மூலம் அதிகப்படியான மக்கள் தேடும் Search Volume Keywords கொடுப்பதால் உங்கள் பிளாக்கர் மேலும் SEO Rank உயர்த்தப்படுகிறது. முடிந்தவரையில் இந்த Description ,Keywords இரண்டுமே கூகுளின் Keyword Planner- இல் இருந்து எடுப்பது மிகச் சரியானதாக இருக்கும். இதில் நீங்கள் என்னென்ன முக்கிய Setting செய்ய வேண்டுமென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1.Title ( Your Blogger Title )
2.Author ( Your Name Or Blogger Title )
3.Description ( Description Of Blogger With Keywords )
4.Keywords ( Tag Keywords With Using Comma )
5.Location ( Type Location " Global " )
6.Robots ( Set Robots As " All " )
Create Meta Tag
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Meta Tag Java Script Code காப்பி செய்து உங்கள் பிளாக்கரில் உள்ள Theme Option Edit Html பேஸ்ட் செய்ய வேண்டும். Edit HTML சென்றவுடன் காப்பி செய்த javaScript Code- ஐ "<head>' Section கீழ் Paste செய்ய வேண்டும். அதற்கு முன்னதாக இந்த Meta Tag- இல் உள்ள Default ஆக இருக்கும் டைட்டில் இருக்குமிடத்தில் உங்கள் பிளாக்கரில் டைட்டிலாக மாற்ற வேண்டும். அடுத்தபடியாக Author Name பகுதியில் உங்கள் பெயர் அல்லது உங்கள் பிளாக்கரில் உள்ள டைட்டிலை கொடுக்கவேண்டும். இதற்கு அடுத்து Description- இருப்பதை டெலிட் செய்து விட்டு உங்கள் பிளாக்கர் எந்த Category என்பதைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு புதிய Description எழுதி மாற்றியமைக்க வேண்டும். அடுத்து உள்ள முக்கிய Keywords Setting-ல் உங்கள் பிளாக்கரில் போடப்படும் போஸ்ட்க்கு ஏற்றவாறு கூகுள் Keyword Planner- இல் தேடி முக்கிய Keywords எழுத வேண்டும். இதற்கு அடுத்து Location Setting- இல் Global என்று போட வேண்டும். கடைசியாக இந்த Meta Tag Code-ல் Robots Setting "All" என்று டைப் செய்ய வேண்டும். தற்பொழுது உங்கள் பிளாக்கருக்கு தேவையான SEO Meta Tag உருவாக்கி விட்டீர்கள்.
0 Comments
Please Don't Post Spam Comments