Adsense Sellers.json
![]() |
How To Solve Google Adsense Sellers json File In Tamil |
கூகுள் Adsense Account வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் அவர்களது Adsense Approved Account- இல் அனைவரும் கண்டிப்பாக இந்த நோட்டிபிகேஷன் பார்த்து இருப்பீர்கள். அந்த நோடிஃபிகேஷன் " We encourage you to publish your seller information in the Google sellers json file " என்பதுபோல் காட்டப்பட்டிருக்கும். இவ்வாறு இந்த நோட்டிபிகேஷன் வந்தபிறகு Adsense Account வைத்திருக்கும் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் என்று இங்கு பார்ப்போம். முதலில் இந்த நோட்டிபிகேஷன் கடந்த 09-09-2020 தேதி அன்று பெரும்பாலானோர் Adsense வைத்திருப்பவர்களுக்கு காண்பிக்கப்பட்டது . இதை அடுத்து அடுத்தடுத்த நாட்களில் Adsense Account வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் நோடிஃபிகேஷன் காண்பிக்கப்பட்டது. இந்த நோட்டிபிகேஷன் வந்ததின் நோக்கம் விளம்பரதாரர் மற்றும் பப்ளிஷர் இடையே ஒரு Transparency இருக்கவேண்டும் என்பதற்காக மட்டுமே வந்துள்ளது. இதன்மூலம் உங்களது Adsense Account Publisher Id வெளிப்படையாக கூகுளின் Sellers.json பக்கத்தில் அப்டேட் செய்யப்படும்.
What Is Sellers.json
இந்த Sellers.json என்ன என்று பார்ப்பதற்கு முன்பு இது கூகுள் நிறுவனத்திற்கு மட்டும் அல்லாது விளம்பரம் செய்யும் ஒவ்வொரு நிறுவனமும் இந்த முறையை கடைபிடிக்கிறது. அதாவது விளம்பரம் கொடுக்கும் நிறுவனத்திற்கும் அந்த விளம்பரத்தை பப்ளிஷ் செய்யும் நபருக்கும் இடையே எந்த ஒரு ஒளிவு மறைவுமின்றி Tranparency இருக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட ஒன்றுதான் இது. இந்த Sellers.json File- ஐ விளம்பர ஏஜென்ஸி ஆக இருக்கும் ஒவ்வொரு நிறுவனமும் அவர்களது இணையத்தில் அப்டேட் செய்து கொண்டிருக்கிறார்கள். தற்போது வரை இல்லாத இந்த புதிய முறை எதற்காக கொண்டு வந்தது என்று பார்க்கப் போனால் இந்த விளம்பரங்களின் மூலம் லீகல் முறையை தவிர்த்து முறைகேடாக சில நிறுவனங்கள் விளம்பரம் செய்வதில் மோசடி ஏற்படுத்துகின்றன. இதற்கு முன்பு ஒவ்வொரு இணையதளம் வைத்திருக்கும் நபரும் அவர்களது இணையதளத்தின் Settings பக்கத்தில் Ads.txt என்கிற ஒரு Java Script Code Adsense- இல் இருந்து காப்பி செய்து பேஸ்ட் செய்திருப்பீர்கள். இந்த Ads.txt Code-க்கு அடுத்த அப்டேட் முறைதான் இந்த Sellers.json என்று கூறலாம். கூகுளின் இந்த Sellers.json File- இல் Google Ad Manager சேவையை பயன்படுத்தும் பெரிய நிறுவனங்களின் Publisher ID மட்டுமே காட்டப்பட்டு கொண்டிருக்கின்றன. தற்பொழுது இந்த பெரிய நிறுவனங்கள் அல்லாது ஒரு தனி நபர் ஒரு இணையதளம் வைத்திருக்கிறார் என்றால் அவருடைய Google Adsense Publisher ID-ம் இனி கூகுளின் Sellers.json பக்கத்தில் அப்டேட் செய்யப்படும்.
Action To Sellers.json Notification
![]() |
How To Solve Google Adsense Sellers json File In Tamil |
உங்களது Adsense Account பக்கத்தில் மேல்புறம் இந்த நோட்டிபிகேஷன் காட்டப்பட்டிருக்கும் அதற்கு நேராக "Action" என்கிற பட்டனை கிளிக் செய்யவும். இதற்கு அடுத்ததாக கிளிக் செய்தவுடன் ஒரு புதிய பக்கம் காண்பிக்கப்படும் அதில் Publisher ID,Seller ID,Time Zone,Active Products,Seller Information Visibility,Account Status என்கிற பல தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் "Seller Information Visibility" Setting- இல் Default ஆக Confidential என்று தேர்வு செய்யப்பட்டிருக்கும். இதற்கு மாறாக நீங்கள் "Transparency" தேர்வு செய்ய வேண்டும். இதற்கு அடுத்து " Business Domain" என்கிற இடத்தில் நீங்கள் Adsense Approved வாங்கிய இணையதளத்தின் முகவரியை குறிப்பிட வேண்டும். ஒருவேளை நீங்கள் இரண்டிற்கும் மேற்பட்ட இணையதளத்திற்கு Adsense Approved வாங்கி வைத்துள்ளீர்கள் என்றால், அதில் எந்த இணைய தளம் அதிக Views,Earning உள்ளதோ அந்த இணையதளத்தின் முகவரியை குறிப்பிடவும். இதில் நீங்கள் ஒரு இணைய தளத்தின் முகவரி மட்டுமே கொடுக்க முடியும். நீங்கள் முகவரி கொடுத்த பின்பு தற்போது இருக்கும் பக்கத்தில் உங்களது Mouse ஐ வெளியே வைத்து கிளிக் செய்தால் நீங்கள் கொடுத்த முகவரி- ஐ Adsense Save செய்துகொள்ளும்.
YouTube Channel Sellers.json
ஒருவேளை நீங்கள் வெப்சைட் அல்லாது நீங்கள் ஒரு யூடியூப் சேனல் வைத்துள்ளீர்கள் என்றால், உங்களது யூடியூப் சேனலின் முகவரி அதாவது " youtube.com/channel/Channel ID " இவ்வாறு உள்ள உங்கள் சேனல் முகவரியை காப்பி செய்து அங்கு பேஸ்ட் செய்ய வேண்டும். நீங்கள் ஒரு Adsense Account- இல் யூடியூப் சேனல் மற்றும் இணையதளங்கள் வைத்துள்ளீர்கள் என்றால் முதலில் நீங்கள் உங்களது யூடியூப் சேனல் முகவரியை கொடுத்து Save செய்ய வேண்டும். இதற்கு அடுத்ததாக உங்களது இணையதளத்தின் முகவரியை கொடுத்து Save செய்ய வேண்டும். இவ்வாறு நீங்கள் உங்கள் யூடியூப் சேனல் மற்றும் இணையதளத்திற்கு Seller.json Setting முடித்து விட்டீர்கள் என்றால் அது கூகுளின் Seller.json இணைய பக்கத்தில் விரைவில் அப்டேட் செய்யப்படும்.
0 Comments
Please Don't Post Spam Comments