Non-Copyright Image
பிளாக் வைத்திருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட போஸ்ட் போடும் பொழுது அதற்கு கண்டிப்பாக Image கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.Image Quality அதிகம் உள்ளதை உங்கள் பிளாக்கரில் நீங்கள் பயன்படுத்தும் பட்சத்தில் அது உங்கள் பிளாக்கரில் Site Loading Time- ஐ குறைக்கிறது.இதனாலும் உங்கள் பிளாக்கரில் இமேஜ் போடுவதை குறைப்பது சிறந்ததாகும்.இருப்பினும் சில பிளாக்கர் வைத்திருப்பவர்களுக்கு அவர்களுக்கு போஸ்டில் கண்டிப்பாக இமேஜஸ் கொடுப்பது அவசியமாகிறது. அவ்வாறு நீங்கள் கொடுக்கும் இமேஜ் வேறு ஒரு இணையதளத்தில் இருந்தோ அல்லது மற்றவரது Copyright Image எடுத்து உங்கள் பிளாக்கரில் நீங்கள் பயன்படுத்தும் பொழுது அதற்கு Copyright Claim கொடுக்க முடியும். இதற்கு கூகுளில் Copyright Claim செய்ய முடியும்.இந்த இமேஜை நீங்கள் கூகுள் தேடுதளத்தில் அல்லது இதற்கென தனியாக சேவை வழங்கும் இணைய தளங்களில் நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.இவ்வாறு இருக்கும் சூழ்நிலையில் உங்கள் பிளாக்கருக்கு தேவையான இமேஜை நீங்கள் எவ்வித ஒரு பிரச்சனையும் இல்லாமல் எப்படி எடுப்பது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
Image From Google
![]() |
How To Use Non Copyright Images For Blogger In Tamil |
உங்களுக்கு தேவையான இமேஜை நீங்கள் கூகுளில் டவுன்லோட் செய்துகொள்ள முடியும். இதற்கு நீங்கள் உங்களது கூகுள் குரோம் பிரவுசர் ஐ ஓபன் செய்து அதில் உங்களுக்கு தேவையான இமேஜ் Keyword டைப் செய்து தேடவும். தற்பொழுது கூகுள் தேடுதளத்தில் "All, Books, News, Images, Videos " என்கிறார் Option கொடுக்கப்பட்டிருக்கும். இதில் Images என்கிற பட்டனை கிளிக் செய்யவும் தற்பொழுது உங்கள் திரையில் நீங்கள் தேடிய இமேஜ் காட்டப்படும். தற்பொழுது வலது பக்கத்தில் உள்ள "Tools" Option கிளிக்ஸ் செய்யவும். தற்போது "Size, Color, Type, Time, User Rights" என பல்வேறு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் " User Right " Option கிளிக் செய்தால் அதில் Creative Commons Licenses,Commercial & Other Licenses கொடுக்கப்பட்டிருக்கும். இதில் Creative Commons License option- ஐ கிளிக் செய்து தற்பொழுது உங்கள் திரையில் காட்டப்படும் இமேஜஸ் நீங்கள் டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் இரண்டாவதாக Commercial & Other Licenses கிளிக் செய்தபின்னர் காட்டப்படும் இமேஜ் நீங்கள் பயன்படுத்த முடியாது. இந்த Commercial & Other Licenses Option- இல் காட்டப்படும் அனைத்து இமேஜ் Copyright Images ஆகும். நீங்கள் Creative Common Licenses Option- இல் இருக்கும் இமேஜ் டவுன்லோட் செய்த பிறகு அதனை குறைந்தபட்சம் Modify செய்து பயன்படுத்துவது சிறந்ததாகும்.
Images From Free Sites
உங்கள் பிளாக்கருக்கு தேவையான இமேஜ் நீங்கள் வேறு சில இணையதளங்களில் Royalty Free Images ஆக டவுன்லோட் செய்துகொள்ளலாம். இவ்வாறு சேவை வழங்கும் பல இணையதளங்கள் இன்டர்நெட்டில் உள்ளன. இதில் இவ்வாறு சேவை வழங்கும் இணைய தளங்களில் நீங்கள் இமேஜ் மற்றும் வீடியோக்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம். சிலர் யூடியூப் சேனல் வைத்திருக்கலாம் உங்களுக்கு தேவையான Royalty Free Videos நீங்கள் இங்கிருந்து இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்த இணைய தளங்களில் கொடுக்கப்படும் வீடியோக்கள் சேனலுக்கு Intro வீடியோவாகவும் அல்லது அதை வைத்து உங்களுக்கு தேவையான முழு வீடியோக்களையும் நீங்கள் உருவாக்க முடியும். மேலும் உங்கள் யூடியூப் சேனலுக்கு தேவையான Thumbnail Image இங்கிருந்து நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ள முடியும். இவ்வாறான இணையதளங்களில் இருந்து இமேஜ் டவுன்லோட் செய்வதற்கு முன்பு அந்த இமேஜ்க்கு வேறு ஏதேனும் Terms And Conditions கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளவும். சில இமேஜ் டவுன்லோட் செய்து பயன்படுத்துவதற்கு முன்பு அந்த இமேஜ் அந்த இணையதளங்களில் பதிவேற்றம் செய்த நபருக்கு நீங்கள் Credit தருமாறு கேட்டுக் கொண்டாள் அதனை மறக்காமல் உங்கள் பிளாக்கரில் இமேஜ் போடும் இடத்தில் அதனை குறிப்பிடவும். இவ்வாறு சேவை வழங்கும் இரண்டு இணையதளங்கள் பெயர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
Images With Credit
![]() |
How To Use Non Copyright Images For Blogger In Tamil |
இந்த முறையில் பயன்படுத்தும் இமேஜ்க்கு நீங்கள் எந்த இணையதளத்தில் இமேஜ் டவுன்லோட் செய்கிறீர்களோ அந்த இணையதளத்தின் முகவரியை அதற்கு நீங்கள் Credit ஆக கொடுக்க வேண்டும். பொதுவாக நீங்கள் உங்கள் இமேஜ் கூகுளில் தேடும் பொழுது உங்களுக்கு தேவையான இமேஜ் ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் இருக்கும் பட்சத்தில் அதனை அந்த இமேஜ் வைத்திருக்கும் உரிமையாளருக்கு Credit கொடுத்து நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். உதாரணத்திற்கு நீங்கள் ஒரு இமேஜ் கூகுளில் தேடுகிறீர்கள் என்றால் ஒரு தளத்தில் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம் . தற்பொழுது நீங்கள் அந்த இமேஜ் கிளிக் செய்யும் பொழுது அது ஒரு இணையதளத்திற்கு சென்று விடும். அவ்வாறு நீங்கள் தேடும் இமேஜ் அந்த இணையதளத்தில் இருக்கும்பொழுது நீங்கள் அந்த இமேஜை டவுன்லோட் செய்த பிறகு உங்கள் பிளாக்கரில் நீங்கள் பயன்படுத்தலாம். அந்த இமேஜை நீங்கள் உங்கள் பிளாக்கரில் பயன்படுத்தும் பட்சத்தில் இமேஜ்க்கு கீழே "Credit :tamilbloggers.xyz" என்று நீங்கள் Credit செய்து கொள்ளலாம். இந்த Credit Option- இல் கூடுதலாக அந்த இணையதளம் வைத்திருக்கும் உரிமையாளரின் பெயர் சேர்ப்பது சிறந்ததாகும். முடிந்தவரை இந்த Image With Credit Method தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் நீங்கள் ஒரு இணைய தளத்திலிருந்து இமேஜ் எடுத்து உங்கள் பிளாக்கரில் பயன்படுத்தும் பொழுது அதன் உரிமையாளர் நீங்கள் Credit கொடுத்தாலும் உங்கள் பிளாக்கருக்கு Copyright Claim கொடுக்க முடியும். இது அவரவர் மனநிலையைப் பொருத்து அமையக் கூடியதாகும்.
0 Comments
Please Don't Post Spam Comments