Website Broken Link Checker For Blogger In Tamil

Website Broken Link Checker

Website Broken Link Checker மூலம் உங்களது பிளாக்கரில் எத்தனை ப்ரோக்கன் உள்ளது என்று கண்டுபிடிக்க முடியும். பொதுவாக உங்கள் பிளாக்கரில் நீங்கள் ஒரு டவுன்லோட் லிங்க் அல்லது வேறு ஒரு இணையதளத்திற்கு செல்லும் லிங்க் கொடுத்து பின்னர் அது ப்ரோக்கன் லிங்க் ஆக மாறும் பொழுது உங்களது பிளாக்கரின் தரம் குறைக்கப்படுகிறது. பொதுவாக இம்மாதிரியான லின்க் பெரும்பாலும் அப்ளிகேஷன் டவுன்லோட் வெப்சைட் மற்றும் சாப்ட்வேர் டவுன்லோட் வெப்சைட் அல்லது ஏதாவது ஒரு டவுன்லோட் லிங்க் உங்களது இணையதளத்தில் நீங்கள் கொடுத்த பின்பு குறிப்பிட்ட அந்த அப்ளிகேசன் அல்லது சாஃப்ட்வேர் சம்பந்தப்பட்ட இணையதளத்தில் நீக்கப்பட்டால் அது ப்ரோக்கர் லிங்க் ஆக உங்களது பிளாக்கரில் மாறிவிடுகிறது. ஒரு நபர் குறிப்பிட்ட அந்த அப்ளிகேசன் அல்லது சாஃப்ட்வேர் டவுன்லோட் செய்யும் லிங்க் கிளிக் செய்யும்பொழுது அது அவருக்கு ப்ரோக்கன் லிங்க் ஆக தெரிகிறது. உங்கள் பிளாக்கரில் இம்மாதிரியான ப்ரோக்கன் லிங்க் இருப்பதை நீங்கள் ஆன்லைனில் தெரிந்து கொள்ள முடியும்.

Broken Link Problem

உங்கள் பிளாக்கரில் ப்ரோக்கன் லிங்க் இருப்பதன் மூலம் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்பதை இங்கு பார்ப்போம். உங்களது இணையதளத்தில் அப்ளிகேஷன் அல்லது சாஃப்ட்வேர் Download Button லிங்க் கொடுக்கிறீர்கள் என்றால் நீங்கள் கவனிக்க வேண்டியது டவுன்லோட் செய்ய வேண்டிய அந்த குறிப்பிட்ட பைல் இருக்கும் லிங்க் எப்பொழுதும் ஓபன் ஆக வேண்டும். இல்லை என்றால் கண்டிப்பாக உங்களது பிளாக்கரில் இந்த ப்ரோக்கன் லிங்க் உருவாக்கப்பட்டு விடும். இதன் மூலம் குறிப்பிட்ட அந்த டவுன்லோட் லிங்க் கொடுக்கப்பட்ட அந்த போஸ்ட் ஆன்லைனில் சரி பார்க்கும் பொழுது அந்த போஸ்ட் ப்ரோக்கன் லிங்க் இருப்பதாக உங்களுக்கு காட்டப்படும். 

சில சமயங்களில் நீங்கள் வேறு ஒரு இணையதளத்திற்கு செல்லும் லிங்க் உங்களது போஸ்டில் கொடுக்கப்பட்டு அந்த லிங்க் உள்ள இணையதளம் நீக்கப்பட்டு விட்டால் அது ப்ரோக்கன் லிங்க் ஆக உங்களது பிளாக்கரில் மாறுகிறது. இவ்வாறு ஒன்றிற்கு மேற்பட்ட ப்ரோக்கன் லிங்க் உங்களது பிளாக்கரில் இருக்கும் பட்சத்தில் உங்களது பிளாக்கர் SPam Website ஆக கருதப்படும். கூகுள் உங்கள் பிளாக்கரில் போடும் அம்மாதிரியான போஸ்ட் முக்கியத்துவம் கொடுக்காமல் Rank கொடுக்காமல் பின்னோக்கி தள்ளிவிடும். இதன்மூலம் உங்கள் பிளாக்கரில் Views குறைவதோடு எந்த ஒரு போஸ்ட் கூகுளில் Rank செய்யப்படமாட்டாது.

How To Check Website Broken Link Checker

Website Broken Link Checker For Blogger In Tamil
Website Broken Link Checker For Blogger In Tamil

உங்களது பிளாக்கரில் ப்ரோக்கன் லிங்க் இருப்பதை சரி பார்ப்பதற்கு இலவசமாக ஆன்லைனில் பல இணையதளங்கள் சேவை வழங்குகிறது. இதில் குறிப்பாக Brokenlinkcheck இணையதளத்தின் மூலம் உங்களது பிளாக்கரில் உள்ள ப்ரோக்கன் லிங்க் சரிபார்த்துக் கொள்ள முடியும். இந்த ப்ரோக்கன் லிங்க் இணைய தளம் சென்றவுடன் முதலாவதாக உங்கள் இணையதளத்தின் முகவரி கொடுக்க வேண்டும். இதற்கு அடுத்தபடியாக கீழே உள்ள Find Broken Links Option கிளிக் செய்யவேண்டும். தற்பொழுது அடுத்த பக்கத்தில் Security Code டைப் செய்தவுடன் கீழே இருக்கும் Find broken Links Option மறுபடியும் க்ளிக் செய்ய வேண்டும். 
Website Broken Link Checker For Blogger In Tamil
Website Broken Link Checker For Blogger In Tamil

தற்பொழுது உங்கள் பிளாக்கரில் உள்ள ப்ரோக்கன் லிங்க் இருந்தாள் அவை எந்தெந்த போஸ்டில் உள்ளன என்பதை காட்டும். பெரும்பாலும் இந்த ப்ரோக்கன் லிங்க் நீங்கள் கொடுக்கும் லிங்க் அடிப்படையில்தான் அமைகிறது. இந்த Website Broken Link Checker பக்கத்தில் எந்த ஒரு லிங்க் காட்டப்படவில்லை என்றால் உங்களது பிளாக்கர் ப்ரோக்கன் லிங்க் இல்லை என்பதாக நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

How To Solve Website Broken Links

ஒருவேளை இந்த Website Broken Link Checker பக்கத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ப்ரோக்கன் லிங்க் காட்டப்படும் பச்சத்தில் நீங்கள் அதனை மிக சுலபமாக சரி செய்ய முடியும். உங்கள் பிளாக்கரில் அப்ளிகேசன் அல்லது சாப்ட்வேர் அல்லது வேறு ஒரு இணையதளத்திற்கு செல்லும் லிங்க் கொடுக்கப்பட்டிருந்தால் அதனை நீங்கள் குறிப்பிட்ட அந்த போஸ்ட் Edit Option சென்று வேலை செய்யாத அந்த லிங்க் நீக்க படுவதன் மூலம் சரிசெய்ய முடியும். அல்லது கொடுக்கப்பட்ட லிங்க் பதிலாக வேறு ஒரு வேலை செய்யும் லிங்க் கொடுப்பதன் மூலமும் நீங்கள் அதனை சரிசெய்ய முடியும். இவ்வாறு பிளாக்கர் Edit Option சென்று சரிசெய்வது அனைவருக்கும் மிக சுலபமான வழியாகும்.

Post a Comment

0 Comments