What Are H1, H2, H3, H4 Tags
![]() |
What Is Blogger Heading H1 H2 H3 H4 Tags In Tamil |
உங்கள் பிளாக்கரில் போஸ்ட் எழுதும்போது மிக முக்கியமாக Blogger Heading Tags பற்றி தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். ஒரு பிளாக்கர் போஸ்டில் அதனுடைய மேஜர் டைட்டில், டைட்டில், சப்டைட்டில், மைனர் டைட்டில் பற்றி தெரிந்து வைத்திருப்பது மிக முக்கியமாகும். பொதுவாக ஒரு பிளாக் போஸ்ட் எழுதுவதற்கு முன்பு டைட்டில் என்பதை நாம் இங்கு H1 டைட்டில் என்று அழைக்கலாம். இதே போன்று அந்த பிளாக்கரில் அடுத்து எழுதவிருக்கும் ஒவ்வொரு Paragraph-க்கும் ஒவ்வொரு தலைப்பிட்டு எழுதுவதை வழக்கமாக கொண்டிருப்பின் அது உங்கள் போஸ்ட் SEO Rank செய்ய வழிவகை செய்கிறது. மேலும் இந்த H1,H2,H3,H4 என்பது அந்த போஸ்ட் சம்பந்தமான முக்கிய டைட்டிலை கொண்டு நீங்கள் எழுதும் பொழுது பார்வையாளர்களுக்கு புரியும் விதத்திலும் அதேசமயம் கூகுள் Search Engine-க்கு உங்கள் போஸ்ட் பற்றி சொல்லும் விதமாகவும் அது அமைகிறது. இவ்வாறு டைட்டில் Tags எப்படி பயன்படுத்துவது பற்றி இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
What Is H1 Tag ( Major Heading )
![]() |
What Is Blogger Heading H1 H2 H3 H4 Tags In Tamil |
பிளாக் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பிளாக் போஸ்ட் எழுதும் முன்பு கண்டிப்பாக அதற்கு ஒரு டைட்டில் தயார் செய்து வைத்திருப்பார்கள். முக்கியமாக அந்த டைட்டில் SEO டைட்டிலாக இருப்பது அவசியமாகும். அதிகபட்சம் ஒரு பிளாக் போஸ்ட் டைட்டில் 70 வார்த்தைகளுக்குள் இருப்பது அதன் SEO தரத்தை உயர்த்துகிறது. மேலும் அந்த டைட்டிலில் கூகுளில் தேடும் மிக முக்கிய Keyword போட்டு எழுதுவது அவசியமாகும். அதிலும் அந்த முக்கிய SEO Keyword டைட்டில் ஆரம்பத்தில் எழுதுவது மிகச் சிறப்பாகும். ஒரு பிளாக் போஸ்டில் H1 டைட்டில் என்பது ஒருமுறை மட்டுமே எழுதப்பட வேண்டும். பிளாக்கர் போஸ்ட் ஆரம்பத்தில் சிலர் அந்த போஸ்ட் H1 பதில் எழுதுவது வழக்கமாக கொண்டிருப்பார்கள்.அவ்வாறு எழுதுவது கண்டிப்பாக அந்த பிளக் போஸ்ட் SEO Rank ஆக விடாமல் தடுக்கப்படுகிறது. மேலும் அந்த போஸ்ட் Search Console பக்கத்தில் Duplicate Or Spam போஸ்ட் ஆக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த H1 Tag- ஐ Major Heading என்றும் அழைக்கலாம்.
What Is H2 Tag ( Heading )
ஒரு போஸ்ட் எழுதுவதற்கு முன்பு ஆரம்பத்தில் சிறுசிறு Paragraph ஆக பிரித்து எழுதுவது என்பது பார்வையாளர்களுக்கு புரியும் விதத்தில் அமையப் பெறுகிறது. அவ்வாறு எழுதுவதற்கு மிகவும் உதவியாக இருப்பது இந்த H2 Tag டைட்டில் ஆகும். உதாரணத்திற்கு Adsense பற்றிய தலைப்பில் ஒரு போஸ்ட் எழுதுவதற்கு முன்பு இங்கு நீங்கள் " What Is Adsense " என்கிற தலைப்பை H2 டைட்டிலாக பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு உங்கள் H1 டைட்டிலில் இடம்பெறும் முக்கிய SEO Keyword இந்த H2 டைட்டிலில் இடம்பெற செய்வது படிப்பதற்கும், கூகுள் புரிந்துகொள்வதற்கும் மிக உதவியாக அமைகிறது. இந்த H2 டைட்டில் என்பது உங்களது பிளாக் போஸ்டில் நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ள முடியும். சிலர் அவர்களது பிளாக் போஸ்டில் செய்முறை விளக்கங்களை எழுதும் பொழுது கண்டிப்பாக இந்த H2 Tag டைட்டில் வைத்து எழுதுவது அனைவருக்கும் புரியும் விதத்தில் அமைவதற்கு உதவிசெய்கிறது. இதனை Heading Tag என்றும் அழைக்கலாம்.
What Is H3 Tag ( Subheading )
இந்த H3 Tag டைட்டில் என்பது வகைப்பாடுகளை பிரித்து எழுதுவதற்கு மிகவும் அவசியமாகிறது. உதாரணத்திற்கு " Types Of Ads " என்கிற டைட்டிலை நீங்கள் H3 Tag டைட்டிலாக பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது ஒரு பிளாக் போஸ்டில் நீங்கள் எழுதும் Content சில வகைப்பாடுகளை எழுத இருக்கிறீர்கள் என்றால் அதன் டைட்டிலை நீங்கள் H3 Tag ஆக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு பயன்படுத்துவது ஒரு செய்முறை விளக்க பிளாக் போஸ்ட்-க்கு மிக அவசியமாக கருதப்படுகிறது. இந்த H3 Tag டைட்டிலை Subheading என்றும் அழைக்கலாம்.
What Is H4 Tag ( Minor Heading )
உங்கள் பிளாக் போஸ்டில் H3 Tag-க்கு விளக்கம் எழுதுவதற்கு மிக உதவியாக இருப்பது இந்த H4 Tag டைட்டில் ஆகும். உங்கள் பிளாக் போஸ்டில் குறிப்பிட்டிருக்கும் வகைப்பாடுகள் என்ன என்ன என்பதை வகைப்படுத்தவும் விளக்கங்கள் எழுதவும் மிக உதவியாக அமைகிறது. உதாரணத்திற்கு H3 Tag ( Types Of Ads ) உள்ளதை வகைப்படுத்த வேண்டுமென்றால் "a.Display Ads" "b.Video Ads" இவ்வாறு எழுதலாம். இந்த Display Ads மற்றும் Video Ads H4 Tag டைட்டிலாக பயன்படுத்த வேண்டும். இங்கு உதாரணத்திற்கு இரண்டு வகை மட்டுமே கூறப்பட்டுள்ளன, உங்களது பிளாக் போஸ்டில் இதற்கு மேற்பட்ட H4 Tag டைட்டில் பயன்படுத்த வேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த H4 Tag டைட்டிலை நீங்கள் Minor Heading டைட்டில் என்றும் அழைக்கலாம்.
0 Comments
Please Don't Post Spam Comments