How Big Website Earn More Adsense Earning

How Big Website Earn More Adsense Earning

March 19, 2021 2 By admin

Adsense Earning

பிளாக்கர் ஆரம்பித்த ஒவ்வொருவருக்கும் Adsense Earning என்பது முக்கியமான ஒன்றாகும். இங்கு பெரும்பாலும் பணம் ஈட்டுவதற்காக இந்த இணையதளத்தை ஆரம்பிக்கிறார்கள். மற்ற பெரிய இணையதளங்கள் எவ்வாறு அதிக அளவில் பணத்தை சம்பாதிக்கிறார்கள் என்ற சந்தேகம் பலருக்கும் புதிராக இருக்கும். நீங்கள் புரிந்து கொண்ட வரையில் அம்மாதிரியான பெரிய இணையதளத்திற்கு Organic Views அதிகமாக வருவதன் மூலம் அவர்கள் அதிகமாக பணத்தை சம்பாதிக்கிறார்கள் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால் Adsense Earning என்பது உங்கள் இணையதளத்திற்கு வரும் Traffic எங்கிருந்து வந்தாலும் நீங்கள் உங்கள் இணையதளத்தில் சம்பாதிக்க முடியும்.

Big Website Earning

நீங்கள் நினைத்துக் கொண்டு இருக்கும் மிகப்பெரிய இணையதளங்கள் அனைத்தும் மற்ற சமூக வலைதளங்களில் அதிகமான Followers வைத்திருப்பார்கள். உதாரணத்திற்கு சினிமா சம்பந்தமான ஒரு யூடியூப் சேனல் அவர்களுக்கு என்று ஒரு Facebook Page,Twitter Pages,Instagram Page Etc…. ஆகியவற்றை வைத்திருப்பார்கள். அதுமட்டுமல்லாது அந்த சமூக வலைதளங்களில் அதிகமான Followers வைத்திருப்பார்கள். ஒரு இணையதளத்திற்கு Organic Traffic மூலம் வரும் Adsense Earning விட சமூக வலைதளங்கள் மூலம் கிடைக்கும் Traffic மூலம் வரும் Adsense Earning குறைவாக இருக்கும். இருப்பினும் இந்த இணையதளத்திற்கு அதிகப்படியான Views கிடைக்கும்போது Adsense Earning அதிகமாக கிடைக்கும். இம்மாதிரியான பெரிய இணையதளங்கள் அவர்களுக்கு சமூக வலைதளங்கள் பக்கத்திலிருந்து மிக சுலபமாக அவர்களது இணையதளத்திற்கு Social Traffic கொண்டுவருகிறார்கள். பிறகு ஏன் இந்த இணையதளத்திற்கு Adlimit வரவில்லை என்ற கேள்வி உங்களில் பலருக்கும் வரக்கூடும். ஒரு இணையதளத்தில் வரும் பயனாளர்(User) அந்த இணையதளத்தில் பல்வேறு பக்கங்களை பார்ப்பதன் மூலம் இந்த Adlimit பிரச்சினை தடுக்கப்படுகிறது.

இம்மாதிரியான பெரும்பாலான மிகப்பெரிய இணைய தளத்திற்கு Organic Traffic விட Social Traffic ஏ அதிகமாக கிடைக்கும். இதுமட்டுமல்லாது அவர்களது இணையதளம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்களாக இருக்கும். இதன் மூலம் அவர்கள் எதார்த்தமாக அவர்களது இணையதளத்திற்கு வரும்போது நபரை அவர்களால் அதிக பக்கங்களை கிளிக் செய்ய வைக்க முடியும்.

How To Increase Your Website Earning

உங்களது இணையதளம் ஒரு பொழுதுபோக்கு செய்திகளை போடும் இணையதளமாக இருக்கும்பட்சத்தில் நீங்கள் மிக சுலபமாக சமூக வலைதளம் மூலம் உங்கள் இணையதளத்திற்கு Traffic கொண்டு வர முடியும். பல்வேறு சமூக வலைதள பக்கங்களில் Pages உருவாக்கி அங்கு Followers அதிகப்படுத்துங்கள். அதன் மூலம் உங்கள் இணைய தளத்திற்கு Traffic கொண்டு வருவதற்கு முயற்சி செய்யுங்கள்.

ஒருவேளை உங்களது இணையதளம் கல்வி சார்ந்த அல்லது தொழில்நுட்ப செய்திகளை பகிரும் ஒரு இணையதளமாக இருக்கும்பட்சத்தில் உங்கள் இணைய தளத்தில் போடும் ஒவ்வொரு போஸ்ட் SEO செய்து வெளியிடுங்கள். மிகச்சரியான Trending உள்ள Keywords பயன்படுத்துங்கள். நீங்களும் உங்களுக்கு என்று பல்வேறு சமூக வலைதள பக்கங்களில் Pages உருவாக்கி அதன்மூலம் உங்கள் இணையதளத்திற்கு Social Traffic கொண்டு வர முயற்சி செய்யுங்கள். இதில் நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது அவ்வாறு சமூக வலைதள பக்கங்களில் மூலம் உங்கள் இணைய தளத்திற்கு வரும் பயனாளர்கள்(Users) உங்கள் இணையதளத்தில் பல்வேறு பக்கங்களில் கிளிக் செய்து பார்க்கவேண்டும். அதற்கு ஏற்றார்போல் உங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் Blog Post இருக்க வேண்டும். கிளிக் செய்யக்கூடிய வகையில் Thumbnail, Title கொடுங்கள். பயனாளர்களுக்கு புரியும் வகையில் போஸ்ட் எழுத கற்றுக் கொள்ளுங்கள்.

ஒரு இணையதளத்திற்கு முதலில் எப்படி Traffic கொண்டுவருவது என்பதை கற்றுக் கொண்டுவிட்டால் இந்த Adsense Earning என்பது தானாக அதிகரிக்கும். உங்கள் இணைய தளத்திற்கு வரும் நபர்களுக்கு ஏற்றவாறு விளம்பரங்கள் ஒவ்வொரு பக்கத்திலும் காட்டப்படும். அவை பெரும்பாலும் உங்கள் பிளாக் போஸ்ட் Content- க்கு ஏற்றவாறு தொடர்பான விளம்பரங்கள் காட்டப்படும். உங்களது இணையதளத்திற்கு வரும் பயனாளர்கள் அம்மாதிரியான அவர்களுக்கு தொடர்பான விளம்பரங்களை க்ளிக் செய்து பார்ப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். இதன் மூலம் உங்களுடைய Adsense Earning அதிக படுத்தப்படும். அதே நேரத்தில் High CPC Keywords பயன்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்.