How Many Ads Setup To Get More Adsense Earning

How Many Ads Setup To Get More Adsense Earning

March 8, 2021 1 By admin

Adsense Ads

நீங்கள் வைத்திருக்கும் இணையதளத்தில் எத்தனை விளம்பரங்கள் தெரியுமாறு கொடுத்தால் அதிகம் சம்பாதிக்க முடியும். Adsense Ads Earning என்பது பல்வேறு அடிப்படை விஷயங்களில் இருந்து மாறுபடும். உதாரணத்திற்கு அதிக Ads இணையதளத்தில் வைத்தாள் அதிகம் சம்பாதிக்கலாம் என்பது அனைவரின் கணக்காகும். உண்மையில் அப்படி அதிகமான விளம்பரங்கள் வைத்தாலும் நீங்கள் எதிர்பார்த்த பணத்தை சம்பாதிப்பது என்பது சற்று கடினமாகவே இருக்கும். முதலில் உங்கள் பிளாக்கரில் அன்றாட நிகழ்வுகள் என்ன நடக்கிறது என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதனை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்றால் முதலில் உங்களது இணையதளத்தின் Analytics Reports சென்று பார்க்க வேண்டும். இங்கே நீங்கள் ஒரு நபர் எங்கிருந்து வருகிறார், எந்த Source மூலம் உங்கள் இணைய தளத்திற்கு வருகிறார், எந்த Device பயன்படுத்துகிறார் என்பன போன்ற பல்வேறு Reports புரிந்து கொள்ள முடியும். இங்கே நீங்கள் எண்ணற்ற Ads உங்கள் இணையதளத்தில் வைப்பதன் மூலம் அதிகம் சம்பாதிக்கலாம் என்கிற எண்ணம் அனைத்து நேரத்திலும் உண்மையாக இருப்பதில்லை. வேறு என்னென்ன காரணங்களால் உங்கள் இணையதளத்தில் வருமானத்தை அதிகரிக்கலாம் என்பது பற்றி பார்ப்போம்.

How Many Ads Setup

உங்கள் இணையதளத்தில் அதிகபட்சம் 3 முதல் 4 Ads வைத்தாலே நீங்கள் நினைத்த பணத்தை விட அதிகம் சம்பாதிக்க முடியும். இங்க விளம்பரங்களின் எண்ணிக்கை பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. மாறாக உங்கள் இணையதளத்தில் தெரியும் விளம்பரங்களை சிறிதளவை கொடுத்தாலும் அதிகம் சம்பாதிக்கலாம். உதாரணத்திற்கு Header Ads -1 , Sidebar Ad-1,Post Inside Ads-2 இந்த முறையில் உங்கள் இணையதளத்தில் விளம்பரங்கள் இருந்தாலே போதுமானது. குறிப்பாக இதில் Header Ads அதிக CPC கொண்டதாக இருக்கும். உங்கள் இணையதளத்தில் விளம்பரங்களை நீங்கள் Auto Ads இல்லாமல் By Ad Units மூலம் உருவாக்குகிறீர்கள் என்றால் அதில் Header Ads Responsive ஆக உருவாக்குங்கள். மீதமுள்ள Sidebard Ads, Post Inside Ads இவை இரண்டும் Square Ads ஆக 300×250 Pixel Size- இல் உருவாக்கி பயன்படுத்துங்கள். இவ்வகையான விளம்பரங்கள் உங்களுக்கு அதிகப்படியான CPC விளம்பரங்களை காட்டும்.

True Of Adsense Earning

உண்மையில் உங்கள் இணையதளத்தில் அதிகப்படியான Page Views மற்றும் Ads Clicks நடைபெறும் பொழுது தான் நீங்கள் அதிகம் சம்பாதிக்க முடியும். இதில் எந்த நாட்டிலிருந்து உங்கள் இணையதளத்திற்கு மக்கள் வருகிறார்கள், எத்தனை Ads Clicks எந்த நாட்டிலிருந்து வந்தன என்பதைப் பொருத்து உங்கள் Adsense Earning அமையும். மேலும் இதில் அவரு உங்களுக்கு வரும் Website Traffic எந்த முறையில் அதாவது Social Traffic ஆக வருகிறதா அல்லது Organic Traffic ஆக வருகிறதா என்பதைப் பொருத்தும் உங்கள் வருமானம் மாறுபடும். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் Social Traffic மூலம் வரும் வருமானத்தைவிட Organic Traffic மூலம் வரும் Adsense Earning அதிகமாக இருக்கும். முடிந்தவரையில் உங்கள் இணையதளத்திற்கு Oraganic Traffic கொண்டு வருவதற்கு முயற்சி செய்யுங்கள்.

User Intrest Ads

ஒரு இணையதளத்தில் தெரியும் பெரும்பாலான விளம்பரங்கள் User Intrest Based விளம்பரங்கள்தான் அதிகம் காட்டப்படும். உதாரணத்திற்கு உங்கள் Browser- இல் எதைப் பற்றி நீங்கள் அதிகம் தேடுகிறீர்கள் என்பதைப் பொருத்து நீங்கள் ஒரு இணையதளத்திற்கு செல்லும் பொழுது நீங்கள் தேடிய keywords அடிப்படையாகக் கொண்டுதான் அந்த இணையதளத்தில் உங்களுக்கு விளம்பரங்கள் காட்டப்படும். மீதமுள்ள விளம்பரங்கள் அதை இணையதளத்தில் எந்த மாதிரியான கேட்டகிரியில் போஸ்ட் எழுதி இருக்கிறார்கள் என்பதைப் பொருத்து அதற்கேற்றவாறு விளம்பரங்கள் காட்டப்படும். இந்த முறையை அடிப்படையாகக் கொண்டு பார்த்தாள் இதிலும் உங்கள் Adsense Earning மாறுபடும்.

Country Based CPC

உங்கள் இணையதளத்திற்கு எந்த நாட்டிலிருந்து மக்கள் அதிகம் வருகிறார்கள் என்பதைப் பொருத்து இந்த CPC மாறுபடும். உதாரணத்திற்கு India-$ 0.25, United States-$1-$3, Singapore-$0.30 Etc.. இதுபோன்று ஒவ்வொரு நாட்டைப் பொருத்தம் இந்த CPC மாறுபடுகிறது. உங்கள் இணையதளத்திற்கு பெரும்பாலான மக்கள் இந்தியாவில் இருந்து வருகிறார்கள் என்றார் அதிகபட்சம் உங்களுக்கு $0.25 CPC கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இது மட்டுமே உங்கள் CPC உயர்வதற்கு காரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அதிக Page Views மற்றும் Ads Click ஏற்பட்டாலும் இந்த CPC உயர்வதற்கு காரணமாக அமையக்கூடும்.