Adsense ID Verification

How To Do Adsense ID Verification

Adsense ID Verification

நீங்கள் யூடியூப் சேனல் அல்லது இணையதளம் வைத்திருந்தால் கண்டிப்பாக நீங்கள் Google Adsense Account உருவாக்கி இருப்பீர்கள். இதில் $10 அடைந்தவுடன் நீங்கள் ID Verification செய்ய வேண்டும். மிகச் சரியான முறையில் இந்த ID Verification எப்படி செய்வது என்பதைப் பற்றி பார்க்க இருக்கிறோம். நீங்கள் யூடியூப் சேனல் அல்லது இணையதளம் வைத்திருந்து அதை Google Adsense உடன் இணைத்து இருக்கும்பட்சத்தில் இந்த ID Verification என்பது இரண்டிற்கும் பொதுவானதாகும். முதலில் ID Verification செய்த பின்புதான் Pin Verification செய்ய முடியும்.

ID Verification Instruction

Adsense ID Verification
Adsense ID Verification

உங்களது Adsense ID Verification- க்கு நீங்கள் அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட ஒரு ID Card Upload செய்ய வேண்டும். இதில் அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட Passport, Voter ID, License, PAN card என இவற்றில் ஏதாவது ஒன்றினை ஸ்கேன் செய்து அப்லோட் செய்ய வேண்டும். முதலில் நீங்கள் $10 அடைந்தவுடன் உங்கள் Adsense Account Home Page- ல் “Your Payments Are Currently Hold. Action Is Required To Release payment” என்று மெசேஜ் காட்டும். அதற்கு நேரே “Action” பட்டனை கிளிக் செய்து “Verify Now” Option கிளிக் செய்து நீங்கள் ஏற்கனவே ஸ்கேன் செய்து வைத்துள்ள ID Card அப்லோட் செய்ய வேண்டும்.

Adsense ID Verification
Adsense ID Verification

நீங்கள் உங்களது ID card அப்லோட் செய்வதற்கு முன்பு Adsense Account– இல் கொடுக்கப்பட்ட பெயர், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என சரி பார்த்துக் கொள்ளவும். மேலும் ID Card அப்லோட் செய்வதற்கு முன்பு பெயர், முகவரியில் ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால் திரையில் தெரியும் Pensil Option கிளிக் செய்து மாற்றிக்கொள்ளலாம். நீங்கள் அப்லோட் செய்ய இருக்கும் ID Card- இல் என்ன பெயர் உள்ளதா அதே முறையில் தான் உங்கள் Adsense Account- லும் இருக்க வேண்டும். ஒருமுறைக்கு இருமுறை இதை சரியாக சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

Adsense ID Verification
Adsense ID Verification

தற்பொழுது கீழே இருக்கும் Upload பட்டனை கிளிக் செய்து நீங்கள் ஏற்கனவே ஸ்கேன் செய்து வைத்துள்ள ID Card அப்லோட் செய்யுங்கள். இவ்வாறு அப்லோட் செய்த பின்பு உங்களது ID Card Image வடிவத்தில் சிறிதாக காண்பிக்கப்படும். அனைத்தும் சரியாக முடித்தபின்பு கீழே இருக்கும் “Submit” பட்டனை கிளிக் செய்யுங்கள். தற்பொழுது திரையில் “Your identity verification is in progress. please allow a few days for verification” என்கிற மெசேஜ் காண்பிக்கப்படும்.

Adsense ID Verification
Adsense ID Verification

இவ்வாறு மெசேஜ் காண்பிக்கப்பட்ட பின்பு ஓரிரு நாட்களில் உங்களது ஈமெயில் ஐடிக்கு மெயில் அனுப்பப்படும். நீங்கள் சரியான முறையில் இந்த ” ID Card” அப்லோட் செய்திருக்கும் பட்சத்தில் ஒரு சில நிமிடங்களில் கூட உங்களது ID Verification முடிந்துவிடும். அதற்கான இமெயில் உடனுக்குடன் உங்களுக்கு அனுப்பப்படும்.

Passport – Front & Back Page ( Please Refer Your Friends )

Voter ID – Front & Back Page

License – Front & Back Page

PAN Card – Front Page

*Aadhar Card Is Not Accept By Google Adsense.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *