How To Fix Website Adsense Adlimit

How To Fix Website Adsense Adlimit

March 2, 2021 1 By admin

Adsense Adlimit

பிளாக்கர் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றுதான் இந்த Adsense Adlimit பிரச்சனையாகும். உங்கள் பிளாக்கருக்கு Adsense அப்ரூவல் கிடைத்த பிறகு பிளாக்கரில் போடும் ஒவ்வொரு போஸ்ட் பல சமூக வலைதளங்களில் ஷேர் செய்வீர்கள். இங்கு நீங்கள் ஷேர் செய்வது தவறொன்றுமில்லை. மாறாக நீங்கள் ஷேர் செய்த பிளாக் போஸ்ட் ஒரு நபரால் எவ்வளவு நிமிடங்கள் பார்க்கப்படுகிறது என்பதே இங்கே முக்கியமாகும். உதாரணத்திற்கு உங்கள் பிளாக்கர் போஸ்ட் 300 வார்த்தைகளில் உள்ளடக்கியதாக இருப்பின், அதனைப் படிப்பதற்கு எடுத்துக்கொள்ளும் கால அளவு 1 நிமிடத்திற்கும் குறைவாக அமைந்துவிடும். மேலும் உங்கள் பிளாக்கர் வருகை தரும் ஒரு பயனாளர் பிளாக்கரில் உள்ள பல்வேறு பக்கங்களை அவர் விரும்பி பார்க்கும் சமயத்தில் அவர் உங்கள் பிளாக்கரில் தங்கியிருக்கும் கால அளவு சரி செய்யப்படுகிறது. ஆக ஒரு பயனாளர் உங்கள் பிளாக்கர் வருகிறார் என்றால் அவர் பல்வேறு பக்கங்களையும், சில நிமிடங்களையும் செலவிட வேண்டியது கட்டாயமாகிறது. எனவே உங்கள் பிளாக்கர் எந்த அளவிற்கு பயனாளருக்கு ஏற்றவாறு கட்டமைக்கப்படுகிறது அந்த அளவிற்கு இந்த Adlimit பிரச்சினையை நீங்கள் தவிர்க்கலாம்.

How To Solve Adlimit

இந்த Adlimit பிரச்சனை சமூக வலைதளங்களில் மட்டும் ஷேர் செய்வதனால் மட்டும் வரக்கூடிய பிரச்சனையாக கருதமுடியாது. ஏனெனில் உங்களது பிளாக்கர் ஒரு பயனாளருக்கு பயன்படக்கூடிய வகையில் இல்லாத பட்சத்திலும் இந்த Adlimit பிரச்சனையை நீங்கள் சந்திக்க நேரிடும். ஒரு நபர் எந்த Source மூலமாகவும் உங்கள் பிளாக்கருக்கு வருகை தருகிறார் என்றால் அவர் உங்கள் பிளாக்கரில் எத்தனை பக்கங்களையும், எவ்வளவு மணி நேரங்களையும் செலவிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த Adlimit பிரச்சனை உங்கள் பிளாக்கருக்கு வந்துவிட்டது என்றால் நீங்கள் தொடர்ந்து உங்கள் பிளாக்கரில் போஸ்ட் கண்டிப்பாக எழுத வேண்டும். இங்கு பல பிளாக்கர்கள் Adlimit வந்தவுடன் முற்றிலுமாக அவர்களது பிளாக்கரில் பிளாக் போஸ் போடுவதை நிறுத்திவிடுகிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் புது பயனாளர்கள் வருகை தருவது மிகவும் குறைந்துவிடுகிறது. இதனால் உங்கள் பிளாக்கரில் Adlimit பிரச்சனை ஒருமாத காலம் ஆனாலும் சரி செய்யப்படாமல் நீட்டிக்கப்படுகிறது. ஆகவே உங்கள் பிளாக்கருக்கு Adlimit பிரச்சினை வந்துவிட்டால் பிளாக்கரில் போஸ்ட் போடுவதை நிறுத்திவிடாதீர்கள்.

How To Click More Pages By User

ஒரு பயனாளர் உங்கள் பிளாக்கர் வந்து போஸ்ட் படிக்கிறார் என்றால் குறைந்தபட்சம் 1000 வார்த்தைகளுக்கு மேல் உங்கள் போஸ்ட் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். மேலும் அந்த பிளாக் போஸ்ட் படிப்பதற்கும் சுலபமாக இருக்குமாறு எழுதுங்கள். இதை தவிர்த்து அந்த பிளாக் போஸ்டில் சில Images Add செய்வது ஒரு பயனாளர் ஐ அதையே பக்கத்தில் சில நிமிடங்கள் செலவிடுவதற்கு பயன்படுத்தும் ஒரு யுக்தியாக அமைகிறது. இதைப்போல் நீங்கள் அந்த ப்ளாக் போஸ்டில் வீடியோ பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் உங்கள் பிளாக்கரில் போடும் ஒவ்வொரு பிளாக் போஸ்ட் ஒரு பயனாளர் கிளிக் செய்யும் வகையில் அதன் டைட்டில்,Thumbnail அமைய வேண்டும். இவ்வாறு சில யுக்தி கையாள்வதன் மூலம் ஒரு பயனாளர் ஐ அதிக நேரம் உங்கள் பிளாக்கரில் செலவிட வைக்கமுடியும். இவை அனைத்தும் உங்கள் பிளாக்கருக்கு பாசிட்டிவாக அமைகிறது.

Share Post On Social Media

ஒரு பிளாக்கர் போஸ்ட் எழுதியவுடன் அதனை நீங்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்வது தவறொன்றுமில்லை. அதே சமயத்தில் உங்கள் பிளாக்கர் ஒரு பயனாளர் வருகிறார் என்றால் அவர் பிளாக்கரில் உள்ள பல்வேறு பக்கங்களை செய்து படிக்கும் வகையில் உங்கள் பிளாக்கரை வடிவமைத்துக் கொள்ளுங்கள். சரியாக Menu,Navigation,Links கொடுப்பது சிறந்ததாகும். மேலும் ஒவ்வொரு பிளாக்கர் போஸ்டில் Internal Link கொடுப்பதன் மூலம் ஒரு பயனாளர் உங்கள் பிளாக்கரில் உள்ள பல்வேறு பக்கங்களை கிளிக் செய்து பார்ப்பதற்கு வாய்ப்பாக அமைகிறது.