How To Get Adsense Approval With 30 Days For Blogger And WordPress

How To Get Adsense Approval With 30 Days For Blogger And WordPress

Blog Adsense Approval With 30 Days

இணையதளம் வைத்திருக்கும் அனைவருக்கும் மிகப்பெரிய கனவாக இருப்பது இந்த Google Adsense Approval ஆகும். இதில் சிலர் கூகுளின் இலவச பிளாக்கர் வைத்திருப்பார்கள், மற்றும் பலர் WordPress வைத்திருக்கக் கூடும். இதில் அனைவருக்கும் அவர்களுக்கு இணையதளத்திற்கு கூகுளின் Adsense Approval கிடைக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து இணையதளத்தை நடத்திக் கொண்டிருப்பார்கள். கூகுளில் முதலில் தமிழ் மொழிக்கு என்று Adsense Approval கொடுக்கப்படவில்லை, ஆனால் தற்பொழுது உங்கள் இணையதளம் தமிழ் மொழியில் எழுதி இருந்தாலும் அதை கூகுள் அனுமதித்து Adsense Approval கொடுக்கிறார்கள். இந்நிலையில் தற்பொழுது அதிக தமிழ் பிளாக்கர் உருவாகியிருக்கிறார்கள். இதில் அனைவருக்கும் அவர்களது இணையதளத்திற்கு Adsense கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். கூகுளின் சட்ட திட்ட வரை முறைகளுக்கு உட்பட்டு உங்கள் பிளாக்கர் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக Approval கொடுப்பார்கள். இந்த பதிவில் எப்படி உங்கள் இணையதளத்திற்கு 30 நாட்களில் Adsense Approval வாங்குவது என்பது பற்றி பார்ப்போம்.

Basic Blog Setting

நீங்கள் பிளாக்கர் அல்லது WordPress வைத்திருந்தாள் இரண்டிற்கும் சில அடிப்படை Setting செய்ய வேண்டியது அவசியமாகும். உதாரணத்திற்கு Privacy Policy,T&C,Diclaimer போன்ற Pages உருவாக்கியிருப்பது என்பது கட்டாயமாகும். இது மட்டும் இல்லாது சில SEO Setting பண்ணுவது என்பது ஒரு இணையதளத்திற்கு அடிப்படைத் தேவையாக இருக்கிறது. உங்கள் இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் ஒரு பயனாளருக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் கொடுப்பது என்பது உங்கள் இணையதளம் ஒரு பயனாளருக்கு எந்த அளவிற்கு இலகுவாக இருக்கிறது என்பதை நீங்கள் Google- இக்கு உணர்த்த முடியும். முறையாக உங்கள் இணையதளத்திற்கு Navigation அமைப்பது,Copyright Content இல்லாமல் இருப்பது போன்ற அம்சங்கள் இருப்பது கட்டாயமாகும்.

Blog With Domain Or Without Domain

அதிக நபர்களால் கேட்கப்படும் கேள்விகளில் இதுவும் ஒன்று, அதாவது Google Adsense வாங்க வேண்டுமென்றால் பிளாக்கரில் Domain Add பண்ண வேண்டுமா என்பதாகும். கூகுள் உங்களுக்கு எவ்விதக் கட்டணமும் இல்லாமல் ஒரு ஜிமெயில் ஐடி மூலம் இலவசமாக பிளாக் உருவாக்குவதற்கான வசதியை செய்திருக்கிறது. இதில் நீங்கள் ஒரு பிளாக் உருவாக்கி அதில் தரமான, செய்திகளை பகிர கூடிய வகையில், மற்றவருக்கு பயன்படும் வகையில் உங்களது பிளாக் போஸ்ட் இருப்பின் விரைவில் உங்களுக்கு Adsense கிடைத்துவிடும். அவ்வாறான பிளாக்கின் Domain Add செய்திருந்தாலும் அல்லது செய்யாவிட்டாலும் உங்களுக்கு Adsense Approval கிடைத்துவிடும். சிலர் அவர்களது இணைய தளத்தின் முகவரி அனைவராலும் இயக்கப்பட வேண்டும் என்பதற்காக Domain வாங்கி Add செய்வார்கள், இவ்வாறு நீங்கள் உங்கள் பிளாக்கருக்கு Domain Add செய்வதன் மூலம் பிறர் மனதில் உங்கள் பிளாக்கர் பெயர் ஞாபகம் இருப்பதோடு, பிற்காலத்தில் உங்கள் பிளாக்கரை WordPress மாற்ற விரும்பினால் கட்டாயம் நீங்கள் ஆரம்பத்தில் Domain Add செய்திருக்க வேண்டும்.

How Many Posts On Blog

அடுத்ததாக அனைவருக்கும் வரக்கூடிய முக்கியமான கேள்வி Adsense Approval வாங்குவதற்கு ஒரு பிளாக்கரில் எத்தனை Blog Post போட்டிருக்க வேண்டும் என்பதாகும். இதை குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் எழுதும் ஒவ்வொரு பிளாக் போஸ்ட் குறைந்தபட்சம் 450 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதிகபட்சம் எவ்வளவு வார்த்தைகள் வேண்டுமானாலும் நீங்கள் எழுதிக் கொள்ளலாம். எந்த அளவிற்கு உங்களது பிளாக் போஸ்ட் மிக நீண்ட வார்த்தைகளால் எழுதப்படுகிறது- ஓ அந்த அளவிற்கு மதிப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த முறையில் நீங்கள் போஸ்ட் எழுத இருக்கிறீர்கள் என்றால் குறைந்தபட்சம் 25-35 பிளாக் போஸ்ட் போட வேண்டும். கண்டிப்பாக உங்கள் போஸ்டில் Copyright இருத்தல் கூடாது. ஒட்டுமொத்தமாக உங்கள் இணையதளத்தில் அனைத்து பிளாக் போஸ்ட் சேர்த்து 15,000 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இங்கு குறிப்பிடுவது தோராயமான மதிப்பாகும். இதைவிட உங்கள் பிளாக் போஸ்ட் ஒட்டுமொத்த வார்த்தைகள் அதிகமாக இருக்கும் வகையில் உருவாக்கி பின் Adsense Apply செய்யுங்கள்.

How Many Views On Blog

இதற்கு அடுத்து ஒரு பிளாக்கரில் நாளொன்றுக்கு எத்தனை Views வரவேண்டும் அல்லது ஒட்டுமொத்தமாக எத்தனை Views பெற்றிருக்க வேண்டும் என்கிற கேள்வியாகும். இதில் முக்கியமாக நாள் ஒன்றுக்கு உங்கள் இணையதளத்தில் குறைந்தபட்சம் 100 Views வரவேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட காலம் வரை அதாவது ஒரு ஒரு மாத காலம் வரை இந்த அளவில் Views உங்கள் பிளாக்கருக்கு வந்து கொண்டிருக்கிறது என்றால் போதுமானதாகும். ஒரு பிளாக் ஆரம்பித்து ஆரம்ப காலகட்டத்தில் அனைவரும் சமூக வலைதளங்களில் அவர்களது பிளாக் போஸ்ட் Share செய்வார்கள், ஆரம்பத்தில் அனைவரும் அவர்களின் பிளாக்கிற்கு Organic Views கொண்டு வருவது என்பது மிக சிரமமாக இருக்கும். உங்கள் பிளாக்கிற்கு Adsense Approval கிடைக்கும் வரை சமூக வலைதளங்களில் Share செய்வது தவறொன்றுமில்லை. எப்பொழுது உங்கள் பிளாக்கிற்கு Adsense கிடைக்கிறதோ அது முதல் சமூக வலைதளங்களில் Share வைத்துக்கொள்வது Invalid Traffic,Invalid Clicks,Adlimit பிரச்சனைகளை தவிர்க்க உதவியாக இருக்கும்.

How Many Days ( Adsense Apply )

ஒரு பிளாக் ஆரம்பித்து எத்தனை நாட்களுக்கு பிறகு Adsense Apply செய்ய வேண்டும் என்கிற கேள்வி அனைவராலும் அதிக அளவில் கேட்க படுவதாகும். நாம் ஆரம்பத்தில் கூறியதுபோல் உங்கள் பிளாக்கருக்கு Domain Add செய்தும் செய்யாமலும் நீங்கள் Adsense Apply செய்து கொள்ளலாம். ஒரு பிளாக் ஆரம்பித்து குறைந்தபட்சம் 30-45 நாட்கள் கழித்து Adsense Apply செய்வது சிறப்பாக இருக்கும். இந்த குறிப்பிட்ட கால இடைவேளையில் நீங்கள் உங்கள் பிளாக்கரில் போடப்படும் அனைத்து போஸ்ட் கூகுளில் Index ஆக வதோடு அதன்மூலம் சில Organic Views கிடைக்கப்பெறுவீர்கள். நாம் முன்பு கூறியது போல் உங்கள் பிளாக்கருக்கு என்று சில குறைந்தபட்ச Views என்பது அடிப்படைத் தேவையாகும். ஒருவேளை உங்கள் பிளாக்கரில் Domain Add செய்திருந்தால் அந்த Domain Add செய்த நாளிலிருந்து குறைந்தபட்சம் 30 நாட்கள் கழித்து Adsense Apply செய்வது சிறப்பாகும்.

Conclusion

இங்கே நாம் கூறியிருப்பதை மிக தெளிவாக புரிந்து கொண்டு ஒரு பிளாக் ஆரம்பித்து Adsense Apply செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு Approval கிடைக்கும். மேலும் உங்கள் பிளாக்கரில் நீங்கள் போஸ்ட் எழுதுவதை தொடர்ந்து வழக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால் உங்கள் பிளாக் Review செய்யப்படும் பொழுது நீங்கள் எந்த அளவிற்கு உங்கள் பிளாக்கரில் Continue ஆக பிளாக் போஸ்ட் போடுகிறீர்கள் என்பதையும் கவனிப்பார்கள். இங்கே நாம் கூறிய அனைத்து தகவல்களும் என்னுடைய அனுபவத்தில் கூறப்பட்டதாகும். Adsense Approval வாங்கும் முறையும், அனுபவமும் ஒவ்வொரு நபருக்கும் அது மாறுபட்டதாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *