How To Increase Adsense CPC

How To Increase Adsense CPC

March 3, 2021 2 By admin

High CPC

பிளாக்கர் அல்லது WordPress வைத்திருக்கும் அனைவருக்கும் Adsense CPC அதிகரிக்க வேண்டுமென்று பல்வேறு முயற்சிகளை செய்வீர்கள். இதில் பிளாக்கருக்கு ஒரு CPC ,Wordpress- இக்கு அதிக CPC என்று வேறுபடுத்தி பார்ப்பதற்கு ஒன்றுமில்லை. பெரும்பாலானோர் வெளிநாடுகளிலிருந்து வரும் Traffic மூலம் அதிகம் Adsense Earning பெறலாம் என்று நினைப்பதுண்டு. அதற்கு முதலில் உங்கள் இணையதளம் அவர்களுக்கு ஏற்றவாறு, அவர்கள் விரும்பிப் படிக்கும் தலைப்புகளில் உங்கள் போஸ்ட் இருக்க வேண்டும். மேலும் நீங்கள் எந்த நாட்டு மக்களுக்காக உங்கள் பிளாக் போஸ்ட் எழுதுகிறீர்கஹலோ அதில் அவர்கள் நடைமுறையில் பயன்படுத்தும் வார்த்தைகளோடு எழுதும் பொழுது தான் விரும்பிப் படிப்பார்கள். மேலும் இணையதளம் வைத்திருக்கும் அனைவரும் வெளிநாட்டவருக்கு என்று எழுதுவது என்பது நடைமுறையில் வாய்ப்புகள் குறைவாகும். எனவே உங்கள் பிளாக் போஸ்ட் நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் எழுதும் பட்சத்தில் உங்கள் Adsense CPC எவ்வாறு அதிகப்படுத்துவது என்று பார்ப்போம்.

Increase Adsense CPC:

Page Views

முதலில் உங்கள் இணையதளத்தில் Views அதிகரிக்கச் செய்ய வேண்டும். Adsense அப்ரூவல் கிடைத்த பலருக்கும் ஆரம்பத்தில் மிகக்குறைவான பயனாளர்கள் மட்டுமே வருகை தருவார்கள். இந்த சூழ்நிலையில் உங்கள் இணையதளத்திற்கு தினமும் 300-500 Page Views என்றால் Adsense CPC மிகக் குறைவாகவே இருக்கும். குறைந்தபட்சம் உங்கள் இணையதளத்திற்கு 1000 Page Views மேலே வரும் பட்சத்தில் CPC அதிகரிக்க செய்யும். சில சமயத்தில் குறைவான Page Views வரும்பொழுது கூட சில Ads Click- இக்கு அதிக CPC நீங்கள் பெற்றிருப்பது நடந்திருக்கக் கூடும். உண்மையில் உங்கள் பிளாக்கரில் தினமும் 1000 Page Views மேலே வரும் பொழுது கணிசமாக உங்கள் Adsense CPC உயரும்.

Publish Regular Post

அடுத்ததாக மிக முக்கியமாக உங்கள் இணையதளத்தில் நீங்கள் பண்ண வேண்டியது தினமும் பிளாக் போஸ்ட் எழுத கற்றுக் கொள்ளுங்கள். இவ்வாறு எழுதுவது புது புது நபர்களை உங்கள் பிளாக்கருக்கு Organic- ஆக வரவைப்பதற்கு மிக உதவியாக இருக்கும். இவ்வாறு நீங்கள் தினமும் பிளாக் போஸ்ட் போடுவதன் மூலம் அதிக Page Views பெறுவீர்கள். இதனால் உங்கள் Adsense CPC அதிகரிக்கச் செய்யும்.

High CPC On Particular Time

பொதுவாக காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை உங்கள் Adsense CPC அதிகமாக காணப்படும். இந்த சமயத்தில் நீங்கள் உங்கள் பிளாக்கர் போஸ்ட்- ஐ Publish செய்வதன் மூலம் சிறிதளவு அதிக Earning பெற முடியும். இந்த குறிப்பிட்ட நேரத்தில் அனைவருக்கும் அதிக CPC வருமென்று உறுதியாக கூற இயலாது. ஆனாலும் இதை நீங்கள் முயற்சி செய்து பார்ப்பதில் தவறொன்றுமில்லை.

Increase Natural Ads Clicks

உங்கள் Blogger போஸ்ட் பயனாளருக்கு பயன்படும் வகையிலும், அவர்களுக்கு என்ன தேவையோ அதற்கு ஏற்றவாறு உங்கள் பிளாக் போஸ்ட் அமையும் பட்சத்தில் அதற்கு ஏற்றவாறான விளம்பரங்கள் உங்கள் பிளாக்கரில் காட்டப்படும். எனவே உங்கள் பயனாளர்கள் எதை விரும்புகிறார்கள், எந்த பிளாக் போஸ்ட்-க்கு அதிக Views பெற்றுள்ளது என்பதை கணித்துக் கொண்டு அதற்கு ஏற்றவாறு உங்கள் பிளாக் போஸ்ட் எழுதப் பழகுங்கள். இவ்வாறு எழுதுவதன் மூலம் பயனாளர்கள் விரும்பி விளம்பரங்களை கிளிக் செய்யக்கூடும்.

Organic Traffic

சமூக வலைதளங்களில் உங்கள் பிளாக் போஸ்ட் Share செய்வதன் மூலம் கிடைக்கும் Adsense Earning- ஐ விட Organic Traffic மூலம் வரக்கூடிய Earning அதிகமாக இருக்கும்.Organic Traffic மூலம் வரக்கூடிய பார்வையாளர்கள் விளம்பரங்களை கிளிக் செய்யும் பொழுது அதன் CPC இயல்பாக உயர்த்தப்படும். மேலும் உங்கள் பார்வையாளரை பிளாக்கரில் அதிக நேரம் தங்கி படிப்பதற்கான பிளாக் போஸ்ட் எழுத கற்றுக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் Adsense CPC உயர்த்தச் செய்யலாம்.