Reasons Behind Adsense Adlimit Problem

Reasons Behind Adsense Adlimit

Adlimit

உங்கள் இணையதளத்திற்கு Adsense Approval வாங்கி வைத்திருந்தால் கட்டாயம் நீங்கள் Adlimit பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இந்த Adlimit பிரச்சினை வரும் பட்சத்தில் உங்களது இணையதளத்தில் தெரியும் விளம்பரங்கள் நிறுவனத்தால் நிறுத்தி வைக்கப்படும். அல்லது குறைந்த அளவிலான விளம்பரங்கள் இணையதளத்தில் காட்டப்படும். இதன் மூலம் உங்களது வருமானம் கணிசமாக குறைக்கப்படுகிறது. இந்த Adlimit பிரச்சனை உங்களின் கவனக்குறைவினால் மற்றும் சரியான இணையதளத்தை பற்றியான புரிதல் இல்லாத காரணத்தினாலும் ஏற்படக்கூடும். இந்த பிரச்சனை எந்தெந்த காரணங்களால் ஏற்படக்கூடும் என்று விரிவாகப் பார்ப்போம்.

Reasons Behind Adlimit

Invalid Traffic

இந்த Adlimit பிரச்சனை உங்களது இணைய தளத்திற்கு எங்கிருந்து Traffic வருகிறது என்பதைப் பொருத்தும், அதன்மூலம் ஏற்படும் Site ENgagement பொருத்தம் ஏற்படுகிறது. இங்கு பலருக்கும் அவர்களது இணையதளத்திற்கு பல்வேறு Source- இல் இருந்து பயனாளர்கள் வருகிறார்கள். அவர்கள் உங்களது இணையதளத்தில் எத்தனை பக்கங்கள் பார்க்கிறார்கள் மற்றும் எத்தனை நிமிடங்கள் உங்களது இணையதளத்தில் செலவிடுகிறார்கள் என்பதைப் பொருத்து இந்த Adlimit வரக்கூடும். இங்கு உங்களது இணைய தளத்திற்கு எந்த Source- இல் இருந்தும் Traffic கொண்டு வருவது ஒரு பிரச்சனை இல்லை. அதே சமயத்தில் அந்த Traffic Source மூலம் வரும் பயனாளர்கள் Activity இங்கு முக்கிய விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் ஒரு PAID Traffic மூலம் (Google Ads,FB Ads) உங்களது இணைய தளத்திற்கு Traffic கொண்டு வருகிறீர்கள் என்றால் அதனை நீங்கள் தொடர்ந்து செய்ய நேரிடும். இடையில் நீங்கள் நிறுத்தப்படும் பொழுது அது உங்களது இணைய தளத்திற்கு ஒரு பிரச்சினையாக மாறக்கூடும். உள்ளது இணையதளத்திற்கு உண்மையில் Organic Traffic , Social Traffic வரும் பட்சத்தில் இந்த PAID Traffic தேவையில்லாத ஒன்றாகும்.

உங்கள் சமூக வலைதள பக்கத்தில் இருந்து ( FB Page, Twitter Page Etc..) உங்கள் இணையதளத்திற்கு Traffic கொண்டு வருகிறீர்கள் என்றால் அதனை நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். இங்கு பல பேர் அவர்களது இணையதளத்தில் ஒரு போஸ் போட்டவுடன் அதனை சமூக வலைதளப் பக்கத்தில் ஷேர் செய்வார்கள். இதனைப் போன்று நீங்களும் செய்கிறீர்கள் என்றால் அதனைத் தொடர்ந்து செய்யுங்கள். அதே சமயத்தில் உங்களுக்கென்று நீங்கள் உருவாக்கிய ஒரு சமூக வலைதளப் பக்கத்தில் உங்களது பிளாக் போஸ்ட் Share செய்வது எந்த ஒரு பிரச்சனையும் உங்கள் இணையதளத்திற்கு ஏற்படுத்தாது. உங்கள் இணையதளத்திற்கு Adsense Earning வரவில்லை என்று உங்கள் நண்பரின் சமூக வலைதள பக்கத்திலும் அல்லது ஏதாவது முன்பின் தெரியாத சமூக வலைதள பக்கத்திலும் Share செய்து அதன் மூலம் கிடைக்கப்பெறும் Traffic உங்களுக்கு Adlimit ஏற்படுத்தக்கூடும். அதே சமயத்தில் உங்களது இணைய தளத்திற்கு Organic Traffic எந்த அளவில் வந்தாலும் அது எந்த ஒரு பிரச்சனையும் உங்கள் இணையதளத்திற்கு ஏற்படுத்தப் போவதில்லை.

இங்கு அனைவரும் செய்யும் மிகப் பெரிய தவறு அவர்களது பிளாக் போஸ்ட்டை அவர்களுக்கே தெரியாத பல்வேறு சமூக வலைதளப் பக்கத்தில் இஷ்டம் போல் Share செய்து விடுகிறார்கள். இதன் மூலம் குறிப்பிட்ட அந்த நேரத்தில் அவர்களது இணையதளத்திற்கு Traffic மற்றும் Earning அதிகரித்தாலும் சிறிது நாட்களுக்குப் பிறகு அவர்களது இணையதளத்திற்கு Adlimit பிரச்சனை வரக்கூடும். இங்கு எங்கிருந்து உங்கள் இணையதளத்திற்கு Traffic கொண்டு வருகிறீர்கள் என்பது பிரச்சினை இல்லை, எப்படி கொண்டு வருகிறீர்கள் மற்றும் அதன் மூலம் Site Engagement என்ன நடக்கிறது என்பதே முக்கியமாக கருதப்படுகிறது.

Invalid Clicks

இந்த Adlimit பிரச்சனை Invalid Clicks காரணத்திற்காகவும் ஏற்படக்கூடும். உங்களது இணையதளத்தில் Auto Ads மட்டுமே வைத்திருக்கும் பட்சத்தில் Invalid Clicks ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் உங்களது இணையதளத்தில் Manual Ads ( By Ad Unit ) முறையில் Ads Set செய்திருந்தால் அதை முறையாக செய்யவும். அதிகப்படியான Adsense earning பெற வேண்டும் என்பதற்காக அதிகமான Ads தெரியுமாறு உங்களது இணையதளத்தில் நீங்கள் வைத்தாள் அது Invalid Clicks பிரச்சனை ஏற்படுத்தக்கூடும். ஒரு பக்கத்தில் அதிகபட்சம் 3 முதல் 5 Ads இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

Stop Adlimit

உங்களது இணையதளத்தில் போடப்படும் பிளாக் போஸ்ட் சரியான முறையில் உங்களுக்கு என்று நீங்கள் உருவாக்கிய சமூக வலைதள பக்கத்தில் மட்டுமே Share செய்யுங்கள். மேலும் Organic Traffic எந்த அளவிற்கு உங்களால் அதிக படுத்த முடியும் என்று கற்றுக்கொள்ளுங்கள்

5 thoughts on “Reasons Behind Adsense Adlimit Problem”

  1. Sir please help me this problem how to fix

    We’ve found policy violations on that are preventing your site from being approved:

    .Low value content

    Your site does not yet meet the criteria of use in the Google publisher network. For more information, review the following resources:

    .Minimum content requirements
    .Make sure your site has unique high quality content and a good user experience
    .Webmaster quality guidelines for thin content
    .Webmaster quality guidelines

  2. Pingback: Can I Tell My Website Link To Others ? - Tamil Bloggers

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *