YouTube will deducting US taxes from creators who don’t live in the US

YouTube will deducting US taxes from creators who don’t live in the US

March 10, 2021 0 By admin

YouTube Tax Info

YouTube Channel வைத்திருக்கும் அனைவருக்கும் நேற்று 09-03-2021 அன்று இரவு ஒரு இமெயில் அனுப்பப்பட்டிருக்கும். அந்த ஈமெயிலில் May 31,2021 தேதிக்குள் உங்களது Tax Info உடனடியாக Fill செய்ய வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது. இந்த Tax Info உங்களது யூட்யூப் சேனல் இருக்கும் Adsense Account- இல் Fill செய்ய வேண்டும். ஒருவேளை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் Tax Info Fill செய்யவில்லை என்றால் உங்கள் ஒட்டுமொத்த யூடியூப் வருமானத்திலிருந்து 24% பிடித்தம் செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இதைத் தவிர்க்க வேண்டுமென்றால் வரும் சில வாரங்களுக்குள் உங்களது Tax சம்பந்தப்பட்ட தகவல்களை Adsense Account சென்று கொடுக்க வேண்டும் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த U.S Tax Info பற்றிய முழு தகவல்களை இங்கு பார்ப்போம்.

Why This Tax ( U.S IRS )

அமெரிக்க நாட்டின் Internal Revenue Code ( IRS ) சட்ட விதியின் படி அமெரிக்கா அல்லாது பிறநாடுகளில் வாழும் YouTube Creators இந்த Tax Info கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த IRS Tax 0%-30% வரை இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது உங்களது யூடியூப் சேனலில் உள்ள எந்தெந்த வீடியோக்களை அமெரிக்காவில் வாழும் மக்கள் பார்க்கிறார்களோ அதன் மூலம் கிடைக்கப்பெறும் வருமானத்தில் 0%-30% Tax ஆக எடுத்துக்கொள்ளப்படும். இந்த நடைமுறை அமெரிக்க நாட்டில் கட்டாய சட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலுள்ள YouTube Creators ஏற்கனவே இந்த Tax செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். தற்பொழுது இந்த சட்டம் அமெரிக்கா தவிர்த்து பிற நாடுகளில் வாழும் YouTube Creators வருமானத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தெளிவாக கூற வேண்டுமென்றால் உங்களது வீடியோக்களை ஒரு அமெரிக்க நபர் பார்த்து அதன் மூலம் கிடைக்கப்பெறும் வருமானத்தில் இந்த Tax எடுத்துக்கொள்ளப்படும்.

How will Your Earnings Be Impacted?

உங்களது யூடியூப் சேனலில் இருக்கும் வீடியோக்களில் எந்தந்த பகுதிகளில் ( அல்லது செயல்களில் ) இந்த Tax எடுத்துக்கொள்ளப்படும் என்று பார்ப்போம். ஒரு அமெரிக்க வாழ் நபர் உங்களது வீடியோக்களில் தெரியும் Ad Views,YouTube Premium,Super Chat,Super Stickers,Channel Membership ஆகியவற்றில் பங்கு எடுத்துக்கொள்வதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் இந்த Tax எடுத்துக்கொள்ளப்படும்.

How To Fill Tax Info

உங்கள் யூடியூப் சேனலில் விளம்பரங்கள் தெரிந்து அதன் மூலம் நீங்கள் பணம் வருகிறது என்றால் கட்டாயம் நீங்கள் உங்கள் Adsense Account- ல் இந்த Tax Info Fill செய்ய வேண்டும். இதை எவ்வாறு செய்வது என்பதைப் பற்றி கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இதேபோல் ஒவ்வொரு நாட்டிலும் இந்த Tax போடப்பட்டால் கண்டிப்பாக ஒவ்வொரு யூடியூப் சேனல் வைத்திருக்கும் நபர்கள் கட்டாயம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள்.