How To Make Quality Backlinks For Website

How To Make Quality Backlinks For Website

Backlinks

உங்கள் இணையதளத்திற்கு வேறு ஒரு இணையதளத்தின் மூலம் பயனாளர்களை கொண்டு வருவதற்கு பயன்படும் ஒருவா வழிமுறையே Backlinks ஆகும். இதில் உங்கள் இணையதளத்தில் குறிப்பிட்ட ஒரு போஸ்ட் லிங்க் வேறு ஒரு இணைய தளத்தில் கொடுப்பதன் மூலம் backlinks உருவாக்க முடியும். அல்லது இணையதளத்தில் முகவரியை வேறு ஒரு இணையதளத்தில் கொடுப்பதன் மூலமும் உருவாக்க முடியும். இதுமட்டுமல்லாது இன்னும் பல வழிகளில் உங்கள் இணையதளத்திற்கு Backlinks உருவாக்க இயலும். உதாரணத்திற்கு வேறு ஒரு இணையதளத்திற்கு நீங்கள் சுயமாக ஒரு போஸ்ட் எழுதி அதை இணையதளத்தில் பதி விடுவதன் மூலம் உருவாக்க முடியும்.

Benefits Of Backlinks

இந்த Backlinks உருவாக்குவதன் மூலம் ஏற்படும் பலன்கள் எண்ணற்றவை. இதன் மூலம் உங்கள் இணையதளத்திற்கு பயனாளர்களைக் கொண்டு வருவது மட்டுமல்லாமல் உங்கள் இணையதளத்தின் Domain Authority அதிகப் படுத்தப்படுகிறது. இந்த Domain Authority என்பது உங்கள் இணையதளத்தில் நம்பிக்கைத் தன்மை,Blog Post உண்மைத்தன்மை,Content Relavancy ஆகியவற்றின் தன்மையை உறுதிப்படுத்துவதாக அமைகிறது. அதாவது ஒரு இணையதளத்தில் உங்கள் இணையதளத்தின் முகவரியை Referral ஆக கொடுக்கப்படும் நிலையில் உங்கள் இணையதளத்தின் Quality,Trust,Content Quality ஆகியவை நிர்ணயிக்கப்படுகிறது. இதில் எந்த அளவிற்கு Quality Backlinks உங்கள் இணையதளத்திற்கு உருவாக்குகிறீர்கள் என்பதன் மதிப்பைப் பொருத்து Domain Authority அமையும். இதற்கு அடுத்ததாக Domain Authority அதிகரிக்கும் பட்சத்தில் உங்கள் இணையதளத்தில் பதிவிடப்படும் ஒவ்வொரு போஸ்ட் கூகுள் பக்கத்தில் முதல் பதிவாக காட்டுவதற்கும் அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

How To Make Quality Backlinks

ahrefs site explorer
ahrefs site explorer

Ahrefs Site Explorer Tool மூலம் உங்கள் போட்டியாளர் இணையதளத்தின் முழு விவரங்களை பெற முடியும். அவ்வாறு உங்கள் போட்டியாளர் இணையதளத்தின் முகவரியை அறிந்த பின்பு Ahrefs Site Explorer Tool- இல் அந்த இணையதளத்தின் முழு விவரங்களை காட்டும் பக்கத்தில் இடது புறத்தில் உள்ள Outgoing Links Option- இல் Broken Links – ஐ கிளிக் செய்து பார்த்தால் அந்த இணையதளத்தில் broken Links இருக்கும் பட்சத்தில் காட்டப்படும்.

ahrefs site explorer
ahrefs site explorer

இவ்வாறு உங்கள் போட்டியாளர் இணையதளத்தில் எண்ணற்ற Brokenlinks இருக்கும் பட்சத்தில் அதை எங்கள் இணையதளத்திற்கு Backlinks ஆக மாற்ற முடியும். அதாவது போட்டியாளர் இணையதளத்தில் Brokenlinks இருப்பது அவரது இணையதளத்திற்கு Negative ஆக மாறுகிறது. தெளிவாக குறிப்பிட வேண்டுமென்றால் நீங்கள் ஒரு போஸ்ட் எழுதும் பொழுது அதில் வேறு ஒரு இணையதளத்தின் முகவரியை Reference ஆக வேறு ஒரு இணையதளத்தின் முகவரியை குறிப்பிடுவீர்கள் அதனை ஒரு Anchor Text- இல் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அவர் கொடுத்த Reference Link சில காலத்திற்குப் பிறகு Remove செய்யப்படலாம். அந்நிலையில் உங்களது குறிப்பிட்ட அந்த போஸ்டில் Reference Link நீங்கள் மாற்றி வேறு ஒரு Reference Link கொடுக்க வேண்டும்.

ahrefs site explorer
ahrefs site explorer

இதேபோல்தான் உங்கள் போட்டியாளர் இணையதளத்தில் Broken Link எண்ணற்றவை பல்வேறு போஸ்டில் இருப்பதை இந்த Ahrefs Site Explorer Tool மூலம் நீங்கள் அறிந்துகொள்ள முடியும். அவ்வாறு தெரிந்து கொண்ட பின்பு முதலில் எந்த போஸ்டில் எந்த வார்த்தை போட்டியாளர் இணையதளத்தில் Reference Link கொடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். பின்பு அதற்கு ஏற்ற ஒரு போஸ்ட் உங்கள் இணையதளத்தில் எழுதி அதனை உங்கள் போட்டியாளர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். உங்கள் போட்டியாளர் அதனை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவரது போஸ்டில் உங்கள் இணைய தளத்தில் எழுதப்பட்ட Blog Post Reference Link ஆக கொடுப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. அல்லது நீங்கள் ஏற்கனவே சம்பந்தப்பட்ட போஸ்ட் எழுதியிருந்தாள் அதனைக் கூட உங்கள் போட்டியாளருக்கு இமெயில் அல்லது அவரது இணையதளத்தில் உள்ள Contact Form மூலம் தெரியப்படுத்தலாம்.இவ்வாறு 5 முதல் 10 இணைய தளம் வரை நீங்கள் முயற்சி செய்யலாம். இவ்வாறு உருவாக்கப்படும் Backlinks உங்கள் இணையதளத்தின் Domain Authority மற்றும் Backlinks எண்ணிக்கையை மிக அதிக அளவில் அதிகப்படுத்தும். இந்த வழிமுறையில் உங்கள் போட்டியாளரை அணுகுவது உங்களுக்கும் உங்கள் போட்டியாளர் இணைய தளத்திற்கும் அதிக பலன்கள் கிடைக்கும் என்பதே உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *