Ads Responsive Blogger Template – Blogger Basic

Ads Responsive Blogger Template – Blogger Basic

April 11, 2021 0 By admin

Ads Responsive Blogger Template

இந்த வீடியோவில் Ads Responsive Blogger Template எவை என்று கூறியுள்ளேன். உங்கள் பிளாக்கருக்கு Template என்பது மிக முக்கியமான ஒன்றாகும். உண்மையில் ஒரு நல்ல Customized template பயன்படுத்தும்போது அது உங்கள் பிளாக்கருக்கு எல்லாவிதத்திலும் பயனாக இருக்கிறது. இந்த Template பொறுத்துதான் உங்கள் இணையதளத்தில் Speed , User Experience அமைகிறது. எந்த அளவிற்கு உங்களது இணையதளம் வேகமாக செயல்படுகிறதோ ( Loading Speed ) அந்த அளவிற்கு ஒரு பயனாளர் உங்களது இணையதளத்தில் அதிக நேரம் செலவிட வாய்ப்பாக அமைகிறது. மேலும் High CPC விளம்பரங்கள் உங்களது இணையதளம் எந்த அளவிற்கு வேகமாக இருக்கிறது என்பதைப் பொறுத்து கூட மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு பல்வேறு விஷயங்கள் இந்த Blogger Template- இல் உள்ளது. எனவே மிக சரியான பிளாக்கர் டெம்ப்ளேட்- ஐ தேர்ந்தெடுப்பது அவசியமாகிறது. இந்த வீடியோவில் எந்த டெம்ப்ளேட் பயன்படுத்தலாம், அது எங்கிருந்து டவுன்லோட் செய்யலாம் என அனைத்தும் விளக்கியுள்ளேன்.

Blogger Basic Videos

எனது யூடியூப் சேனலில் உள்ள வீடியோக்கள் அல்லாது இந்த இணையதளத்தில் தற்பொழுது பிளாக்கரில் Update செய்ததற்கு ஏற்ப Blogger Basic வீடியோக்களை உருவாக்கியுள்ளேன். இது கண்டிப்பாக பிளாக் ஆரம்பிக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தப் பகுதியில் மொத்தம் 30 வீடியோக்கள் வரவுள்ளன. அவ்வப்பொழுது இந்த இணையதளத்தின் ஐ பார்வையிட்டு Blogger Basic Update வீடியோக்களை நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். ஒரு பிளாக் ஆரம்பிப்பதில் இருந்து அது எப்படி உருவாக்குவது, எப்படி டெம்ப்ளேட் இன்ஸ்டால் செய்வது, டொமைன் எப்படி வாங்குவது, டொமைன் எப்படி இணைப்பது என பல்வேறு தலைப்புகளில் இந்த வீடியோக்கள் இருக்கும். சுருக்கமாக சொல்லப்போனால் நீங்கள் ஒரு பிளாக் போஸ்ட் போடுவதற்கு முன்பு எந்த அளவிற்கு உங்களுடைய பிளாக்கர் பிழையில்லாமல் உருவாக்க வேண்டும் என்பதை வீடியோக்களாக இந்த இணையதளத்தில் கொடுக்க இருக்கிறேன். இந்த வாய்ப்பினை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் நீங்களும் ஒரு சிறந்த பிளாக்கர் ஆக உருவாகலாம்.