Blogger Navigation – Blogger Basic

Blogger Navigation – Blogger Basic

April 22, 2021 1 By admin

Blogger Navigation

உங்கள் பிளாக்கரில் வருகை தரும் பயனாளருக்கு ஏற்றவகையில் உங்கள் பிளாக்கரை வடிவமைப்பது தான் Blogger Navigation ஆகும். இதில் Menu , Pages, Links ஆகியவை முக்கிய பங்கு வகிக்கும். அதாவது உங்களது பிளாக்கரில் கொடுக்கப்படும் Menu , Pages , Links அனைத்தும் பயனாளருக்கு புரியும் வகையில், அனைவரும் தேடும் வார்த்தைகளில், கொடுக்கப்பட வேண்டும். மற்றும் Menu Link , Page Links இவற்றில் எதை கிளிக் செய்தாலும் Broken Link இருத்தல் கூடாது. இதை தவிர்த்து உங்களது பிளாக்கரில் உள்ள Sidebar பகுதியில் தேவையானவற்றை மட்டும் Add செய்தால் போதுமானது. உங்களது பிளாக்கரில் கொடுக்கப்படும் ஒவ்வொரு Link- இம் பயனாளருக்கு தெரியும் விதத்தில் கொடுக்கப்பட வேண்டும். மேலும் உங்களது பிளாக் போஸ்டில் Internal Links கொடுப்பது கூட இந்த Navigation பகுதியில் வரும். மொத்தத்தில் உங்களது பிளாக்கர் அனைத்து பயனாளிகளுக்கும் ஒரு நல்ல User Experience கொடுக்கும் வகையில் நீங்கள் உருவாக்க வேண்டும்.

Blogger Basic Videos

எனது யூடியூப் சேனலில் உள்ள வீடியோக்கள் அல்லாது இந்த இணையதளத்தில் தற்பொழுது பிளாக்கரில் Update செய்ததற்கு ஏற்ப Blogger Basic வீடியோக்களை உருவாக்கியுள்ளேன். இது கண்டிப்பாக பிளாக் ஆரம்பிக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தப் பகுதியில் மொத்தம் 30 வீடியோக்கள் வரவுள்ளன. அவ்வப்பொழுது இந்த இணையதளத்தின் ஐ பார்வையிட்டு Blogger Basic Update வீடியோக்களை நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். ஒரு பிளாக் ஆரம்பிப்பதில் இருந்து அது எப்படி உருவாக்குவது, எப்படி டெம்ப்ளேட் இன்ஸ்டால் செய்வது, டொமைன் எப்படி வாங்குவது, டொமைன் எப்படி இணைப்பது என பல்வேறு தலைப்புகளில் இந்த வீடியோக்கள் இருக்கும். சுருக்கமாக சொல்லப்போனால் நீங்கள் ஒரு பிளாக் போஸ்ட் போடுவதற்கு முன்பு எந்த அளவிற்கு உங்களுடைய பிளாக்கர் பிழையில்லாமல் உருவாக்க வேண்டும் என்பதை வீடியோக்களாக இந்த இணையதளத்தில் கொடுக்க இருக்கிறேன். இந்த வாய்ப்பினை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் நீங்களும் ஒரு சிறந்த பிளாக்கர் ஆக உருவாகலாம்.