How To Add Custom Domain Into Blogger – Blogger Basic

Add Custom Domain Into Blogger

உங்களது பிளாக்கருக்கு என்று Hostinger இணைய தளத்தில் வாங்கிய Custom Domain– ஐ எப்படி இணைப்பது என்று இந்த வீடியோவில் விளக்கியுள்ளேன். இவ்வாறு டொமைன் இணைக்கும் பொழுது SSL ( Secure Sockets Layer ) வாங்குவது அவசியம் இல்லை. ஏனெனில் கூகுளில் நீங்கள் பிளாக்கர் உருவாக்கும்போது அதனுடன் HTTS Default ஆக இணைந்திருக்கும். இந்த டொமைன் இணைக்கும் பொழுது நீங்கள் டொமைன் வாங்கிய இணையதளத்தில் Domain DNS Setting கொடுக்கப்பட்டிருக்கும், அதில் சில Settings சரியாக செய்ய வேண்டும். அதில் என்னென்ன Settings செய்ய வேண்டுமென்று இந்த வீடியோவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். இந்த வீடியோவை நீங்கள் முழுவதுமாக பார்த்து எவ்வித தவறில்லாமல் சரியா உங்களது Custom Domain- ஐ பிளாக் கருடன் இணைக்கலாம்.

Blogger Basic Videos

எனது யூடியூப் சேனலில் உள்ள வீடியோக்கள் அல்லாது இந்த இணையதளத்தில் தற்பொழுது பிளாக்கரில் Update செய்ததற்கு ஏற்ப Blogger Basic வீடியோக்களை உருவாக்கியுள்ளேன். இது கண்டிப்பாக பிளாக் ஆரம்பிக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தப் பகுதியில் மொத்தம் 30 வீடியோக்கள் வரவுள்ளன. அவ்வப்பொழுது இந்த இணையதளத்தின் ஐ பார்வையிட்டு Blogger Basic Update வீடியோக்களை நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். ஒரு பிளாக் ஆரம்பிப்பதில் இருந்து அது எப்படி உருவாக்குவது, எப்படி டெம்ப்ளேட் இன்ஸ்டால் செய்வது, டொமைன் எப்படி வாங்குவது, டொமைன் எப்படி இணைப்பது என பல்வேறு தலைப்புகளில் இந்த வீடியோக்கள் இருக்கும். சுருக்கமாக சொல்லப்போனால் நீங்கள் ஒரு பிளாக் போஸ்ட் போடுவதற்கு முன்பு எந்த அளவிற்கு உங்களுடைய பிளாக்கர் பிழையில்லாமல் உருவாக்க வேண்டும் என்பதை வீடியோக்களாக இந்த இணையதளத்தில் கொடுக்க இருக்கிறேன். இந்த வாய்ப்பினை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் நீங்களும் ஒரு சிறந்த பிளாக்கர் ஆக உருவாகலாம்.

See also  Blogger SEO Setting PART-1 - Blogger Basic

3 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *