Adsense EarningLearn Adsense & Earn Money

How To Add Social Media Links – Blogger Basic

Add Social Media Links

உங்கள் பிளாக்கரில் Social Media Links எப்படி கொடுப்பது என்பது பற்றி இந்த வீடியோவில் விளக்கியுள்ளேன். உங்கள் பிளாக்கருக்கு என்று உருவாக்கிய சமூக வலைதள பக்கங்களின் லிங்க் பிளாக்கரில் Top Bar, Sidebar, Footer என உங்கள் Blogger Template ஏற்றவாறு கொடுக்கலாம். உங்கள் பிளாக்கருக்கு என்று தனித்துவமாக நீங்கள் உருவாக்கிய சமூக வலைதள பக்கங்களில் மூலம் உங்கள் பிளாக்கருக்கு Backlink உருவாகுவதற்கும் வித்தாக அமைகிறது. மேலும் உங்கள் பிளாக்கருக்கு தேவையான பயனாளர்களை ( Social Traffic ) நீங்கள் சமூக வலைதள பக்கங்களில் மூலம் கொண்டு வர முடியும். மேலும் இவ்வாறான உங்கள் பிளாக்கருக்கு என்று சமூக வலைதளப் பக்கங்கள் உருவாக்குவதன் மூலம் அது உங்கள் பிளாக்கரின் நம்பகத்தன்மையை ( Content Trust ) அதிகரிக்கிறது. இதன் மூலமும் உங்கள் பிளாக்கரின் Domain Authority அதிக படுத்தப்படுகிறது. இந்த வீடியோவில் சமூக வலைதள பக்கங்களின் Page Link எப்படி பிளாக்கரில் Add செய்வது, ஒரு குறிப்பிட்ட YouTube Video Link எப்படி Add செய்வது என்பதைப் பற்றி தெளிவாக விளக்கியுள்ளேன்.

See also  Blogger SEO Setting PART-1 - Blogger Basic

Blogger Basic Videos

எனது யூடியூப் சேனலில் உள்ள வீடியோக்கள் அல்லாது இந்த இணையதளத்தில் தற்பொழுது பிளாக்கரில் Update செய்ததற்கு ஏற்ப Blogger Basic வீடியோக்களை உருவாக்கியுள்ளேன். இது கண்டிப்பாக பிளாக் ஆரம்பிக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தப் பகுதியில் மொத்தம் 30 வீடியோக்கள் வரவுள்ளன. அவ்வப்பொழுது இந்த இணையதளத்தின் ஐ பார்வையிட்டு Blogger Basic Update வீடியோக்களை நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். ஒரு பிளாக் ஆரம்பிப்பதில் இருந்து அது எப்படி உருவாக்குவது, எப்படி டெம்ப்ளேட் இன்ஸ்டால் செய்வது, டொமைன் எப்படி வாங்குவது, டொமைன் எப்படி இணைப்பது என பல்வேறு தலைப்புகளில் இந்த வீடியோக்கள் இருக்கும். சுருக்கமாக சொல்லப்போனால் நீங்கள் ஒரு பிளாக் போஸ்ட் போடுவதற்கு முன்பு எந்த அளவிற்கு உங்களுடைய பிளாக்கர் பிழையில்லாமல் உருவாக்க வேண்டும் என்பதை வீடியோக்களாக இந்த இணையதளத்தில் கொடுக்க இருக்கிறேன். இந்த வாய்ப்பினை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் நீங்களும் ஒரு சிறந்த பிளாக்கர் ஆக உருவாகலாம்.

See also  How To Add Custom Readers To Blogger - Blogger Basic

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *