How To Change Blogger Template – Blogger Basic

How To Change Blogger Template – Blogger Basic

April 16, 2021 2 By admin

Change Blogger Template

ஒரு பிளாக்கர் நீங்கள் உருவாக்கும் பொழுது அதில் Default ஆக கூகுளின் Blogger Template தானாக இன்ஸ்டால் செய்யப்படும். இந்த கூகுள் டெம்ப்ளேட் Customize செய்யக்கூடிய வகையில் இருந்தாலும் பெரும்பாலானோர் இதை விரும்புவதில்லை. இதில் நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு Coloring, Advance Features இருப்பதில்லை. எனவே அனைவரும் Third Party Blogger Template – ஐ விரும்பி அவர்களுக்கு பிளாக்கரில் இன்ஸ்டால் செய்கிறார்கள். இவ்வாறு இந்த வீடியோவில் Maxseo Blogger Template எப்படி இன்ஸ்டால் செய்வது என்பது பற்றி விளக்கியுள்ளேன். பிளாக்கர் டெம்ப்ளேட் மாற்றுவதற்கு முன்பு மிக சரியான டெம்ப்ளேட்டை தேர்ந்தெடுத்து மாற்றுங்கள். அதே சமயத்தில் அடிக்கடி உங்களது பிளாக்கர் டெம்ப்ளேட்- ஐ மாற்றாதீர்கள். அதுமட்டுமில்லாமல் உங்களது Blogger என்ன கேட்டகிரி என்பதை பொருத்து அதற்கு ஏற்றவாறு உள்ள ப்ளாக்கர் டெம்ப்ளேட்டை இன்ஸ்டால் செய்யுங்கள்.

Blogger Basic Videos

எனது யூடியூப் சேனலில் உள்ள வீடியோக்கள் அல்லாது இந்த இணையதளத்தில் தற்பொழுது பிளாக்கரில் Update செய்ததற்கு ஏற்ப Blogger Basic வீடியோக்களை உருவாக்கியுள்ளேன். இது கண்டிப்பாக பிளாக் ஆரம்பிக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தப் பகுதியில் மொத்தம் 30 வீடியோக்கள் வரவுள்ளன. அவ்வப்பொழுது இந்த இணையதளத்தின் ஐ பார்வையிட்டு Blogger Basic Update வீடியோக்களை நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். ஒரு பிளாக் ஆரம்பிப்பதில் இருந்து அது எப்படி உருவாக்குவது, எப்படி டெம்ப்ளேட் இன்ஸ்டால் செய்வது, டொமைன் எப்படி வாங்குவது, டொமைன் எப்படி இணைப்பது என பல்வேறு தலைப்புகளில் இந்த வீடியோக்கள் இருக்கும். சுருக்கமாக சொல்லப்போனால் நீங்கள் ஒரு பிளாக் போஸ்ட் போடுவதற்கு முன்பு எந்த அளவிற்கு உங்களுடைய பிளாக்கர் பிழையில்லாமல் உருவாக்க வேண்டும் என்பதை வீடியோக்களாக இந்த இணையதளத்தில் கொடுக்க இருக்கிறேன். இந்த வாய்ப்பினை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் நீங்களும் ஒரு சிறந்த பிளாக்கர் ஆக உருவாகலாம்.