How To Choose Custom Domain

How To Choose Custom Domain – Blogger Basic

Custom Domain

உங்கள் பிளாக்கருக்கு Custom Domain இணைக்கும் போது மட்டுமே நீங்கள் எதிர்காலத்தில் உங்கள் பிளாக்கரை WordPress மாற்றுவதற்கு வசதியாக இருக்கும். மேலும் உங்கள் பிளாக்கருக்கு என்று தனித்துவம் எதிர்பார்க்கும் பட்சத்தில் நீங்கள் கண்டிப்பாக Custom Domain வாங்க வேண்டும். அவ்வாறு நீங்கள் Custom Domain வாங்குவதற்கு முன்பு Custom Domain என்றால் என்ன, அதில் எத்தனை வகைகள் உள்ளன(Types), எதை வாங்கினால் உங்கள் பிளாக்கருக்கு நல்லது போன்ற பல்வேறு விஷயங்களை இந்த வீடியோவில் விளக்கியுள்ளேன். நீங்கள் ஒரு டொமைன் வாங்கும் பொழுது கண்டிப்பாக Generic Top Level Domain தேர்ந்தெடுப்பது மிக சரியான ஒன்றாகும். இந்த வீடியோவில் gTLD,ccTLD என்றால் என்ன, அதன் எடுத்துக்காட்டுகள் என பல்வேறு அம்சங்களை விளக்கியுள்ளேன். நீங்கள் உங்கள் பிளாக்கருக்கு Custom Domain வாங்குவதாக இருந்தால் கண்டிப்பாக இந்த வீடியோ பார்த்துவிட்டு வாங்கும்பொழுது மிகத் தெளிவான விளக்கத்துடன் வாங்குவீர்கள்.

Blogger Basic Videos

எனது யூடியூப் சேனலில் உள்ள வீடியோக்கள் அல்லாது இந்த இணையதளத்தில் தற்பொழுது பிளாக்கரில் Update செய்ததற்கு ஏற்ப Blogger Basic வீடியோக்களை உருவாக்கியுள்ளேன். இது கண்டிப்பாக பிளாக் ஆரம்பிக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தப் பகுதியில் மொத்தம் 30 வீடியோக்கள் வரவுள்ளன. அவ்வப்பொழுது இந்த இணையதளத்தின் ஐ பார்வையிட்டு Blogger Basic Update வீடியோக்களை நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். ஒரு பிளாக் ஆரம்பிப்பதில் இருந்து அது எப்படி உருவாக்குவது, எப்படி டெம்ப்ளேட் இன்ஸ்டால் செய்வது, டொமைன் எப்படி வாங்குவது, டொமைன் எப்படி இணைப்பது என பல்வேறு தலைப்புகளில் இந்த வீடியோக்கள் இருக்கும். சுருக்கமாக சொல்லப்போனால் நீங்கள் ஒரு பிளாக் போஸ்ட் போடுவதற்கு முன்பு எந்த அளவிற்கு உங்களுடைய பிளாக்கர் பிழையில்லாமல் உருவாக்க வேண்டும் என்பதை வீடியோக்களாக இந்த இணையதளத்தில் கொடுக்க இருக்கிறேன். இந்த வாய்ப்பினை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் நீங்களும் ஒரு சிறந்த பிளாக்கர் ஆக உருவாகலாம்.

Related Posts

3 thoughts on “How To Choose Custom Domain – Blogger Basic

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *