Create New Blogger
கூகுளில் ஒரு ஜி மெயில் ஐடி இருந்தால் போதும் நீங்களும் இலவசமாக Blogger உருவாக்கிவிடலாம். ஒரு ஜிமெயில் ஐடி கீழ் 100 பிளாக் வரை உருவாக்கிக் கொள்ளலாம். நீங்கள் எந்த ஒரு Device மூலமாகவும் இந்த பிளாக்கர் உருவாக்குவதோடு Mobile- க்கு என்று Playstore- இல் பிளாக் கண்ட்ரோல் செய்வதற்கு தனியே Application கூகுள் நிறுவனத்தால் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பிளாக்கர் உருவாகும் பொழுது Title, Display Name இறுதியாக உங்கள் பிளாக்கர் Name ( URL ) நீங்கள் கொடுக்க வேண்டும். அவ்வாறு பிளாக்கர் URL கொடுக்கும் பொழுது அதே பெயரில் வேறு ஒரு நபர் உருவாக்கி இருக்கும்பட்சத்தில் உங்களால் அதை உருவாக்க இயலாது. உங்களுக்கென்று தனித்துவமாக நீங்கள் ஒரு பெயரினை தேர்வு செய்தோம் உருவாக்க வேண்டும். இந்த வீடியோவில் ஒரு ஜிமெயில் ஐடி வைத்து கூகுள் பிளாக்கரில் எப்படி ஒரு பிளாக்கர் உருவாக்குவது என்பதைப் பற்றி தெளிவாகக் கூறியுள்ளேன்.
Blogger Basic Videos
எனது யூடியூப் சேனலில் உள்ள வீடியோக்கள் அல்லாது இந்த இணையதளத்தில் தற்பொழுது பிளாக்கரில் Update செய்ததற்கு ஏற்ப Blogger Basic வீடியோக்களை உருவாக்கியுள்ளேன். இது கண்டிப்பாக பிளாக் ஆரம்பிக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தப் பகுதியில் மொத்தம் 30 வீடியோக்கள் வரவுள்ளன. அவ்வப்பொழுது இந்த இணையதளத்தின் ஐ பார்வையிட்டு Blogger Basic Update வீடியோக்களை நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். ஒரு பிளாக் ஆரம்பிப்பதில் இருந்து அது எப்படி உருவாக்குவது, எப்படி டெம்ப்ளேட் இன்ஸ்டால் செய்வது, டொமைன் எப்படி வாங்குவது, டொமைன் எப்படி இணைப்பது என பல்வேறு தலைப்புகளில் இந்த வீடியோக்கள் இருக்கும். சுருக்கமாக சொல்லப்போனால் நீங்கள் ஒரு பிளாக் போஸ்ட் போடுவதற்கு முன்பு எந்த அளவிற்கு உங்களுடைய பிளாக்கர் பிழையில்லாமல் உருவாக்க வேண்டும் என்பதை வீடியோக்களாக இந்த இணையதளத்தில் கொடுக்க இருக்கிறேன். இந்த வாய்ப்பினை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் நீங்களும் ஒரு சிறந்த பிளாக்கர் ஆக உருவாகலாம்.