How To Create Privacy Policy, T&C, Disclaimer, Contact, About – Blogger Basic

How To Create Privacy Policy, T&C, Disclaimer, Contact, About – Blogger Basic

May 1, 2021 0 By admin

Privacy Policy, T&C , Disclaimer, Contact, About Pages

ஒரு பிளாக் வைத்திருந்தாள் கண்டிப்பாக அந்த பிளாக்கிற்கு Privacy Policy, T&C , Disclaimer, Contact, About Pages வைத்திருக்க வேண்டும். இவற்றை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி இந்த வீடியோவில் விளக்கியுள்ளேன். உங்கள் இணையதளத்திற்கு வரும் ஒரு பயனாளர் எவ்வாறு உங்களது இணையதளத்தை உபயோகப்படுத்த வேண்டும், அவர்களிடமிருந்து எவ்வித தகவல்களை நீங்கள் பெறுகிறீர்கள், உங்களை எப்படி Contact செய்வது, உங்களைப்பற்றிய தகவல் ஆகியவற்றைக் கூறும் ஒரு பதிவு தகவலாக இந்த Pages இருக்கிறது. நீங்கள் உங்கள் பிளாக்கரை Adsense Apply செய்யும்பொழுது உங்கள் இணையதளத்திற்கு என்று Privacy Policy, Disclaimer Etc.. இருக்கிறதா என்பதை கூகுள் நிறுவனம் கண்காணிக்கிறது. இந்த Pages சாதாரண ஒரு பிளாக்கருக்கு ஒரு மாதிரியும், இதுவே உங்களது பிளாக்கர் Ecommerce, Business Site என்றால் அம்மாதிரியான இணையதளத்திற்கு இந்த Privacy Policy, Disclaimer தன்மைகள் மாறும். எனவே உங்களது பிளாக்கர் எந்த பயன்பாட்டிற்கு என்பதை முதலில் உறுதி படுத்திக்கொண்டு அதற்கு ஏற்றவாறு உங்கள் இணையதளத்திற்கு Privacy Policy, T&C , Disclaimer, Contact, About Pages உருவாக்குங்கள். இந்த வீடியோவில் அனைவரும் பயன்படுத்தும் ஒரு கூகுள் பிளாக்கிற்கு Pages எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாக விளக்கி உள்ளேன்.

Blogger Basic Videos

எனது யூடியூப் சேனலில் உள்ள வீடியோக்கள் அல்லாது இந்த இணையதளத்தில் தற்பொழுது பிளாக்கரில் Update செய்ததற்கு ஏற்ப Blogger Basic வீடியோக்களை உருவாக்கியுள்ளேன். இது கண்டிப்பாக பிளாக் ஆரம்பிக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தப் பகுதியில் மொத்தம் 30 வீடியோக்கள் வரவுள்ளன. அவ்வப்பொழுது இந்த இணையதளத்தின் ஐ பார்வையிட்டு Blogger Basic Update வீடியோக்களை நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். ஒரு பிளாக் ஆரம்பிப்பதில் இருந்து அது எப்படி உருவாக்குவது, எப்படி டெம்ப்ளேட் இன்ஸ்டால் செய்வது, டொமைன் எப்படி வாங்குவது, டொமைன் எப்படி இணைப்பது என பல்வேறு தலைப்புகளில் இந்த வீடியோக்கள் இருக்கும். சுருக்கமாக சொல்லப்போனால் நீங்கள் ஒரு பிளாக் போஸ்ட் போடுவதற்கு முன்பு எந்த அளவிற்கு உங்களுடைய பிளாக்கர் பிழையில்லாமல் உருவாக்க வேண்டும் என்பதை வீடியோக்களாக இந்த இணையதளத்தில் கொடுக்க இருக்கிறேன். இந்த வாய்ப்பினை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் நீங்களும் ஒரு சிறந்த பிளாக்கர் ஆக உருவாகலாம்.