Free Blogspot
கூகுளில் நீங்கள் Free Blogspot உருவாக்க முடியும். அதை சமயத்தில் Domain Add செய்யாத இந்த பிளாக்கருக்கு நீங்கள் Adsense Approval வாங்க முடியும். அதாவது எவ்வித செலவும் இன்றி நீங்கள் ஒரு பிளாக்கர் உருவாக்கி அதன்மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்க முடியும். கூகுள் நிறுவனம் உங்களது பிளாக்கரில் நீங்கள் எந்த அளவிற்கு Professional ஆக எழுதுகிறீர்கள் என்பது பொறுத்து உங்கள் பிளாக்கருக்கு Adsense Approval தருவார்கள். இங்கு நீங்கள் உங்கள் பிளாக்கருக்கு Domain Add செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் கூகுள் நிறுவனம் அதை பிரதானமாக எடுத்துக்கொள்வதில்லை.
Domain Added Blogger
உங்கள் பிளாக்கருக்கு Domain Add கட்டாயமா எனக் கேட்டீர்கள் ஆனால், கண்டிப்பாக இல்லை. அதே சமயத்தில் எதிர்காலத்தில் உங்களது பிளாக்கரை நீங்கள் WordPress மாற்றம் இருக்கிறீர்கள் என்றால் கட்டாயம் Adsense Apply செய்வதற்கு முன்பே Domain Add செய்தாக வேண்டும். உண்மையில் இந்த Domain என்பது உங்களது பிளாக்கருக்கு ஒரு முகவரியாகவும், மக்கள் தேடும் ஒரு Keyword ஆக பயன்படுகிறது. மேலும் உங்கள் பிளாக்கருக்கு என்று தனித்துவம் வேண்டுமெனில் நீங்கள் ஆரம்பத்தில் Domain Add செய்து கொள்ளலாம். இதுமட்டுமல்லாது எதிர்காலத்தில் உங்களது Main Domain- இல் இருந்து Subdomain உருவாக்க நினைக்கிறீர்கள் என்றால் கட்டாயம் நீங்கள் ஆரம்பத்தில் Domain Add செய்திருக்க வேண்டும். உங்கள் பிளாக்கரில் எதிர்காலத்தில் என்னவெல்லாம் செய்ய நினைக்கிறீர்களோ அதற்கு ஏற்றவாறு Domain Add செய்ய வேண்டுமா, அல்லது தேவையில்லையா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.
Blogger Basic Videos
எனது யூடியூப் சேனலில் உள்ள வீடியோக்கள் அல்லாது இந்த இணையதளத்தில் தற்பொழுது பிளாக்கரில் Update செய்ததற்கு ஏற்ப Blogger Basic வீடியோக்களை உருவாக்கியுள்ளேன். இது கண்டிப்பாக பிளாக் ஆரம்பிக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தப் பகுதியில் மொத்தம் 30 வீடியோக்கள் வரவுள்ளன. அவ்வப்பொழுது இந்த இணையதளத்தின் ஐ பார்வையிட்டு Blogger Basic Update வீடியோக்களை நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். ஒரு பிளாக் ஆரம்பிப்பதில் இருந்து அது எப்படி உருவாக்குவது, எப்படி டெம்ப்ளேட் இன்ஸ்டால் செய்வது, டொமைன் எப்படி வாங்குவது, டொமைன் எப்படி இணைப்பது என பல்வேறு தலைப்புகளில் இந்த வீடியோக்கள் இருக்கும். சுருக்கமாக சொல்லப்போனால் நீங்கள் ஒரு பிளாக் போஸ்ட் போடுவதற்கு முன்பு எந்த அளவிற்கு உங்களுடைய பிளாக்கர் பிழையில்லாமல் உருவாக்க வேண்டும் என்பதை வீடியோக்களாக இந்த இணையதளத்தில் கொடுக்க இருக்கிறேன். இந்த வாய்ப்பினை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் நீங்களும் ஒரு சிறந்த பிளாக்கர் ஆக உருவாகலாம்.
Nice bro