Blog Tips
நீங்கள் உருவாக்கும் பிளாக்கர் வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கு மிகவும் சுலபமான Blog Tips இங்கே சொல்லப் போகிறேன். ஒரு பிளாக்கர் உருவாகுவதற்கு முன்பே நீங்கள் எதைப்பற்றி அந்த பிளாக்கரில் எழுதி இருக்கிறீர்கள் என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். குறிப்பிட்ட ஒரு கேட்டகிரி தேர்வு செய்திருந்தால் முழுமையாக அந்த பிளாக்கரில் போடும் ஒவ்வொரு போஸ்ட் அந்த கேட்டகிரி சார்ந்ததாகவே இருக்குமாறு எழுத வேண்டும். ஒரு கேட்டகிரி ஆரம்பித்து அதில் பல்வேறு அம்சங்கள் கொண்ட பிளாக் போஸ்ட் போடும்போது உங்கள் பிளாக்கர் கூகுளில் இடம்பிடிப்பது சற்று சவாலாக அமைகிறது. இருப்பினும் உங்கள் இணையதளத்திற்கு Domain Authority அதிகம் இருப்பின் இவை ஒரு பிரச்சினையாக இருப்பதில்லை. நீங்கள் பிளாக் ஆரம்பித்து சிறிது நாட்களே இருக்கும் பட்சத்தில் தனித்து ஒரு கேட்டகிரி அடிப்படையில் உங்கள் பிளாக்கர் அமைந்திருப்பது சிறப்பாக இருக்கும்.
Niche Blog Tips
நான் முன்பு கூறியது போல் எந்த கேட்டகிரியில் உங்களது பிளாக்கர் எழுதி இருக்கிறீர்கள் என்பதை மிகத் தெளிவாக ஆரம்பிப்பது சிறந்ததாகும். சில கேட்டகிரி பிளாக்கர் அதனுள் பல்வேறு Sub category உள்ளடக்கியதாக இருக்கும். உதாரணத்திற்கு வெப்சைட் என்று எடுத்துக்கொண்டால் அதில் SEO,Backlink,Traffic Etc… என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருப்பது அதன் அவசியமாகும். இதில் குறிப்பிட்டு உங்கள் பிளாக்கர் SEO பற்றி மட்டுமே அல்லது Backlink பற்றி மட்டுமே இருப்பின் அவை Micro Niche Blog ஆகும். எனவே ஒரு கேட்டகிரியில் பிளாக் எழுத இருக்கிறீர்கள் என்றால் மிகத்தெளிவாக எந்த கேட்டகிரியில் எழுதி இருக்கிறீர்கள் என்று தீர்மானித்து எழுதுவது சிறப்பாகும்.
Topic Blog Tips
இதில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட கேட்டகிரியில் பிளாக் போஸ்ட் எழுத தொடங்குவதாக இருப்பின் முதலில் மக்கள் குறிப்பிட்டு நீங்கள் எழுதும் கேட்டகிரியில் எந்த Topics Content தேடுகிறார்கள் என்பதை தெரிந்துகொண்டு எழுதுவது அவசியமாகும். ஒரு குறிப்பிட்ட கேட்டகிரி பற்றி உங்களுக்கு அதிகம் தெரிந்திருக்கும் பட்சத்தில் அதில் இன்றைய தேதியில் மக்கள் எதை தேடுகிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்துகொண்டு பிளாக் போஸ்ட் எழுதுவது அவசியமாகும். அல்லது நீங்கள் எழுதும் Topic Content- க்கு எப்படி SEO Keyword பயன்படுத்த வேண்டும் என்று துல்லியமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
Competitor topics ( Competitor Keywords )
இந்த இன்டர்நெட் தளத்தில் நீங்கள் ஒரு பிளாக்கர் எழுதிக் கொண்டிருக்கும் இதே நேரத்தில் பல்வேறு இணையதளங்கள் உங்கள் பிளாக்கர் போல் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு நீங்கள் இன்று எழுதவிருக்கும் ஒரு பிளாக் போஸ்ட் வேறு ஒரு இணையதளத்தில் இதற்கு முன்பே எழுதப்பட்ட ஒன்றாக இருக்கலாம் அல்லது இனிமேல் வேறு ஒரு இணையதளத்தில் எழுத இருக்கும் ஒரு போஸ்ட் ஆக இருக்கலாம். இதற்கு மத்தியில் நீங்கள் இன்று எழுத இருக்கும் உங்கள் பிளாக்கர் போஸ்ட் தனித்துவம் பெறவேண்டுமென்றால் அதற்கு உங்கள் இணையதளத்திற்கு இணையான (Competitor) Topic Content போடும் இணையதளத்தில் பயன்படுத்தும் keywords மற்றும் எந்த Topics பற்றி அந்த இணையதளத்தில் எழுதப்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இவ்வாறு Competitor Keywords (or) Topics தெரிந்து கொள்வதற்கு இன்டர்நெட்டில் பல்வேறு இணையதளங்கள் உள்ளன.
Right SEO Keywords
ஒரு போஸ்ட் எழுத இருக்கிறீர்கள் என்றால் அதில் பயன்படுத்தும் SEO Keywords மிக முக்கியமானதாகும். அவ்வாறு பயன்படுத்தும் அந்த Keyword அனைவராலும் தேடப்படும் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். மேலும் அதன் Search Volume,Keyword Difficulty போன்றவற்றை சரியான மதிப்பீடு உங்களுக்கு தேர்வு செய்ய தெரிந்திருக்க வேண்டும். பொதுவாக ஒரு Keyword நீங்கள் தேர்வு செய்ய இருக்கிறீர்கள் என்றால் அதன் மதிப்பு 1000 மேல் இருக்க வேண்டும். அதேபோல் Keyword Difficulty Score 0-39 உள் இருக்க வேண்டும். இங்கே நான் கூறியது நீங்கள் இப்பொழுதுதான் பிளாக்கர் ஆரம்பித்து தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் மேலே சொன்ன மதிப்பு பொருத்தமாக இருக்கும்.
Content Writing
நீங்கள் எழுத இருக்கும் ஒரு போஸ்ட் குறைந்தபட்சம் 400 வார்த்தைகள் இருக்குமாறு எழுத வேண்டும். மேலும் அதில் நீங்கள் Relevant Keywords பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் முக்கியமாக உங்களது பிளாக் போஸ்ட் டைட்டில் எதை அடிப்படையாக கொண்டு அமைகிறதோ அதைப் பற்றிதான் உங்கள் முழு போஸ்ட் பிரதானமாக இருக்க வேண்டும். டைட்டில் வேறு நீங்கள் எழுத இருக்கும் போஸ்ட் தன்மையின் அடிப்படை வேறொன்றாக இருப்பின் அது உங்கள் போஸ்ட் Relevancy இல்லாததாக கூகுள் எடுத்துக்கொள்ளும். மேலும் அந்த பிளாக் போஸ்டில் Internal Link,External Link பயன்படுத்துவது உங்கள் இணையதளத்தின் Domain Authority அதிகப்படுத்தும். பிளாக் போஸ்டில் பயன்படுத்தும் புகைப்படங்களுக்கு ( Images ) கண்டிப்பாக Alt Text,Title Txt பயன்படுத்த வேண்டும். அவ்வாறு பயன்படுத்தும் Text- இல் முக்கிய SEO Keyword இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
Readability
ஒரு போஸ்ட் எழுத இருக்கிறீர்கள் என்றால் அது உங்கள் பயன்பாட்டாளர்கள்- க்கு கண்டிப்பாக புரியும் விதத்தில் இருக்க வேண்டும். நீங்கள் சொல்ல இருக்கும் விஷயங்களை சுற்றிவளைத்து கூறி இருப்பின் அது பயன்பாட்டிற்கு ஆர்வத்தை குறைப்பதோடு அவர் உங்கள் இணைய தளம் விட்டு உடனே செல்வதற்கும் வாய்ப்பாக அமையும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் உங்கள் இணையதளத்தின் Bounce Rate அதிக படுத்தப்படும். மேலும் கூகுள் விரும்புவதும் நீங்கள் எதைப்பற்றி எழுதுகிறீர்கள் என்பதை நேரடியாக தெளிவாக எழுதினால் மட்டுமே அதனால் புரிந்து கொள்ள முடியும். இன்னும் மிக தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் உங்களது பிளாக் போஸ்ட் புதிர் போலில்லாமல் புரியும் படி இருத்தல் அவசியமாகும்.
Blog Post Title
ஒவ்வொரு போஸ்ட் டைட்டில் என்பது அந்த போஸ்ட் எதைப்பற்றியது என்பதை புரிய வைக்கச் செய்யும் ஒரு முயற்சியாகும். உங்களது டைட்டில் ஒருவரை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்க வேண்டும். மேலும் அதில் Keyword டைட்டிலில் முதலில் வருமாறு இருப்பது மிகச் சிறப்பாகும். சில சமயங்களில் பல்வேறு இணையதளங்களில் ஒரு குறிப்பிட்ட போஸ்ட் அதன் டைட்டிலில் SEO Keyword இல்லாமல் இருப்பினும் கூட அது கூகுளில் இடம் பெற்றிருக்கும். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் அந்த டைட்டில் அனைவராலும் கவர்ந்திழுக்கும் வகையில் அமையப் பெற்றிருக்கும். அவ்வாறு சிறப்பம்சம் கொண்ட டைட்டிலுடன் SEO Keyword இருக்குமாறு நீங்கள் எழுதும் பட்சத்தில் அது அனைவராலும் கிளிக் செய்யப்படலாம்.
On-Page SEO
ஒரு பிளாக் போஸ்ட் எழுதுவதற்கு முன்பு அதில் On-Page SEO செய்யப்பட வேண்டும் என்பதே நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இதில் உங்கள் பிளாக் போஸ்ட் டைட்டில்,Search Description,Image Alt Text,Link Building etc.. ஆகியவை உள்ளடக்கியதாகும். இவற்றை நீங்கள் மிக சரியாக பின்பற்றும் பொழுது அந்த பிளாக் போஸ்ட் SEO Content ஆக மாற்றப்படுகிறது. இவ்வாறாக அந்த குறிப்பிட்ட போஸ்ட் கூகுளில் ரேங்க் செய்யப்படுகிறது.
Write Everyday
ஒரு பிளாக்கர் ஆரம்பித்து சிலநாட்களில் அதனை மிக வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியாது. இதற்கு நீங்கள் பல மாதங்கள் உண்மையாக கடினமாக உழைக்க நேரிடும். தொடர்ந்து உங்கள் பிளாக்கரில் நீங்கள் இடைவிடாது போஸ்ட் போடும் பட்சத்தில் கூகுள் ரங்க் முதல் இடத்தில் பிடிப்பது சாத்தியமாகிறது. இதுமட்டுமல்லாது உங்களது பிளாக்கர் Adsense Apply செய்வதாக இருந்தால் நீங்கள் தொடர்ந்து உங்கள் பிளாக்கரில் போஸ்ட் எழுதி இருக்க வேண்டும். ஒரு பிளாக்கரில் தொடர்ந்து நீங்கள் போஸ்ட் எழுதும் ஒரு பழக்கத்தை வைத்திருந்தால் மட்டுமே உங்கள் பிளாக்கருக்கு போதுமான Organic Traffic கொண்டுவரமுடியும். இந்த Blog Tips பயன்படுத்தும் பொழுது கண்டிப்பாக உங்களுக்கு பிளாக்கர் இயல்பாகவே வளர்ச்சி அடையும்.
5 thoughts on “Blogger Blog Tips In Tamil”