Can I Tell My Website Link To Others ?

can i tell my site link to others

Can I Tell My Site Link To Others?

இணையத்தில் பிளாக்கர் பெரும்பாலோர் பயப்படும் ஒரு விஷயம் தங்களின் இணையதளத்தின் முகவரியை பிறரிடம் கூறும் பொழுது அவர்களால் தனது இணையதளத்திற்கு பிரச்சனை வரக்கூடும் என்ற விஷயம்தான். இன்றைய சூழ்நிலையில் ஒருவரிடம் பகை இல்லாத பட்சத்திலும் அவர் மூலம் நமது Blooger அல்லது WordPress இணையத்திற்கு பிரச்சனை வரக்கூடும் என்ற அச்சம் அனைவர் மனதிலும் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் மிகப்பெரிய Bloggers, மற்றும் மற்றவர்களால் பாதிக்கப்பட்டவர்களின் உரையாடல்களை கேட்டறிந்த பிறகு இம்மாதிரியான ஒரு அச்சம் கண்டிப்பாக அனைவரிடத்திலும் இருக்கிறது. தனி நபர் ஒருவர் உங்களது இணையதளத்தை முடக்க முடியும் என்கிற விஷயம் உண்மையானதே. அதே சமயத்தில் உங்களது இணைய தளத்திற்கு எண்ணற்ற பயனாளர்கள், நல்ல ஒரு Engagement உங்களது இணைய தளத்திற்கு இருக்கும்பட்சத்தில் ஒரு தனிப்பட்ட நபர் ஆல் அவ்வளவு எளிதாக உங்கள் இணையதளத்தை முடக்கவும் முடியாது.

சரி எனது இணையதளத்தை பிறரிடம் நான் கூறுவதால் எனது இணையதளத்திற்கு எவ்விதத்தில் நன்மைகள் மற்றும் தீமைகள் இருக்கிறது என்று நீங்கள் கேட்கும் பட்சத்தில் அதனை இங்கு விளக்க உள்ளேன்.

முதலில் நன்மைகளைப் பார்த்துவிடுவோம். உங்கள் இணைய தளத்தை நீங்கள் சமூக வலைதளத்தின் பக்கங்களின் மூலமாகவும், உங்களுக்குத் தெரிந்த நண்பர்களுக்கு சொல்லியும், ஆன்லைனில் இருக்கும் பல்வேறு Promotion சேவைகளை பயன்படுத்தியும், அல்லது ஆன்லைன் நண்பர்களிடம் சொல்லியும் உங்களது இணைய தளத்திற்கு நீங்கள் Traffic வரும் பட்சத்தில் அது உங்களது இணையதளத்திற்கு நன்மையை ஏற்படுத்தும். மேலும் அவ்வாறு உங்களது இணைய தளத்திற்கு வரும் பயனாளர்கள் மூலம் உங்களது இணையதளத்தில் பல்வேறு பக்கங்கள் கிளிக் செய்யப்பட்டு அதன் மூலம் உங்களது இணையதளத்திற்கு நல்ல ஒரு Engagement கிடைக்கப்பெற்றால் அது உங்கள் இணையதளத்திற்கு நன்மையே ஆகும். மேலும் இம்மாதிரியான பயனாளர்கள் ஆல் உங்கள் இணையதளத்தின் Bouncerate (40%-70% ) கிடைக்கப்பெறுவீர்கள். இது மட்டுமில்லாமல் வெவ்வேறு Location பகுதியிலிருந்து உங்களுக்கு Traffic கிடைக்கப்பெறுவீர்கள். இவை அனைத்துமே உங்கள் இணையதளத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும்.

அடுத்ததாக உங்கள் இணையதளத்தை மற்றவர்களிடம் சொல்வதன் மூலம் ஏற்படும் சிறு தீமைகளை பார்ப்போம். உங்களிடம் பகைமை ஏற்பட்ட தனி நபர் மட்டுமே இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்த தனிநபர் மூலம் உங்களது இணையதளத்தில் அதிக விளம்பரங்கள் கிளிக் செய்யப்பட்டு அதுவே உங்கள் இணையதளத்திற்கு Adlimit வர வைப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆகவே இங்கு நீங்கள் உங்கள் இணையதளத்தின் மூலம் பணம் சம்பாதிக்க கட்டாயமாக உங்கள் இணையதளத்திற்கு அதிக Traffic தேவைப்படுகிறது. உங்கள் இணையதளத்திற்கு அதிக பயனாளர்களை முடிந்த அளவில் நீங்கள் Intrest Based Audience – ஐ கொண்டு வருவதற்கு முயற்சி செய்யுங்கள். உங்களது பயனாளர்கள் சமூக வலைதள பக்கங்களில் மூலமாகவோ, அல்லது Organic Search Click மூலமாகவோ எப்படி வேண்டுமானாலும் உங்கள் இணையதளத்திற்கு பயனாளர்களை நீங்கள் கொண்டு வரலாம். எப்பொழுது உங்கள் இணையதளத்திற்கு எண்ணற்ற Traffic வருகிறதோ அப்போது ஒரு தனிப்பட்ட நபர்கள் கூட உங்களது இணையதளத்தை அவ்வளவு எளிதாக முடக்கிவிட முடியாது என்பதே உண்மை. எனவே உங்களது இணையதளத்தில் ஒவ்வொரு பயனாளர்களுக்கு அவர்கள் படிக்கும் வகையில், புரிந்து கொள்ளும் வகையில் பயனுள்ள விஷயங்களை எழுதுங்கள். எங்கள் இணையதளத்திற்கு என்று சமூக வலைதள பக்கங்களை உருவாக்கி Intrest based Audience – ஐ கொண்டு வாருங்கள். அதே சமயத்தில் உங்கள் இணையதளத்தில் SEO பயன்படுத்தி அதற்கு ஏற்றவாறு Content எழுத கற்றுக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் இணையதளத்திற்கு Organic Traffic கிடைக்கப்பெறுவீர்கள்.

1 thought on “Can I Tell My Website Link To Others ?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *