How To Add Custom Domain For Blogger In Tamil

Custom Domain

பிளாக் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் Custom Domain Add செய்வது பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். உங்கள் பிளாக்கருக்கு என்று கஸ்டம் டொமைன் Add செய்யும்போதுதான் தனித்துவம் பெறுகிறது. உங்கள் பிளாக்கர் விசிட் செய்யும் ஒவ்வொரு நபருக்கும் பிளாக்கரின் பெயர் மனதில் பதிந்து வைத்துக் கொள்வதற்கு கஸ்டம் டொமைன் மிக முக்கிய ஒன்றாகும். இந்த கஸ்டம் டொமைன் நீங்கள் என்ன தலைப்பில் போஸ்ட் எழுதுகிறீர்கள் என்பதைப் பற்றி சொல்லும் விதமாக அமைய வேண்டும். இது மட்டுமல்லாது சரியான கஸ்டம் டொமைன் தேர்வு செய்யும் பொழுது அது உங்கள் பிளாக்கருக்கு SEO Rank,Views அதிகப்படுத்தவும் உதவிசெய்கிறது. பெரும்பாலும் இந்த கஸ்டம் டொமைன் .com , .in, .net, .org ஆகியவை பலராலும் உபயோகப்படுத்தப்படுகிறது. இவை அனைத்தும் Top Level Domain ஆக அங்கீகரிக்கப்பட்ட வையாகும். நீங்கள் உங்கள் பிளாக்கருக்கு Adsense Apply செய்யும் பொழுது கூகுள் நிறுவனம் இம்மாதிரியான Top Level Domain களுக்குத்தான் முக்கியத்துவம் தருகிறது. இவ்வாறு நீங்கள் வாங்கிய கஸ்டம் டொமைன் எவ்வாறு உங்கள் பிளாக்கரில் இணைப்பது பற்றி விரிவாகப் பார்ப்போம்.

Buy Custom Domain

தனித்துவம் வாய்ந்த இந்த கஸ்டம் டொமைன் வாங்குவதற்கு பல இணையதளங்கள் சேவை வைத்துள்ளன. இதில் குறிப்பாக Godaddy,Big Rock, Namecheap போன்ற இணையதளங்கள் உங்களுக்கு கஷ்டம் டொமைனை வழங்குகின்றன. நீங்கள் கஸ்டம் டொமைன் வாங்கும் பொழுது அந்த இணையதளத்தின் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கொள்வது மிக முக்கியமாகும். மேலே கூறிய மூன்று இணையதளத்தில் நீங்கள் கஸ்டம் டொமைன் வாங்கும் பொழுது எவ்வித பணபரிமாற்ற பிரச்சனைகளும் அல்லது ஏமாற்றப்படும் சூழ்நிலையோ உருவாகாது. அவ்வாறு உங்களுக்கு பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் நீங்கள் அந்த இணையதளத்தில் உள்ள கஸ்டமர் சர்வீஸ் என்னை தொடர்பு கொண்டு அல்லது Chat Message செய்து உங்களது கஸ்டம் டொமைன் பிரச்சனை சரி செய்து கொள்ளலாம். ஒரு கஸ்டம் டொமைன் வாங்குவதற்கு முன்பு அதன் விலை மற்றும் ஒவ்வொரு வருடமும் அதன் Renewal பண மதிப்பு எவ்வளவு என்று தெரிந்து வாங்க வேண்டும். ஒரு கஸ்டம் டொமைன் நீங்கள் வாங்கும் பொழுது முதலில் ஒரு வருடத்திற்கு உங்களுக்கு கொடுக்கப்படும்.

பின்பு ஒரு வருடம் கழித்து நீங்கள் ஒவ்வொரு வருடமும் அதற்கு பணம் செலுத்தி உங்கள் கஷ்டம் டொமைனை நீங்கள் Renewal செய்துகொள்ளவேண்டும். உங்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் கஷ்டம் டொமைனை ஆரம்பத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்கள் சேர்த்து முன்னதாகவே அதற்கு பணம் செலுத்தி நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *