What Is Permalink
உங்கள் பிளாக்கரில் எழுதும் ஒவ்வொரு போஸ்ட்-க்கும் Permalink முக்கியமானதாகும். இந்த லிங்க் சரியான விதத்தில் நீங்கள் கொடுக்கும் பொழுது அது SEO Rank-க்கு வழிவகுக்கிறது. பொதுவாக இந்த பேர்மலின்க் ஒவ்வொரு போஸ்ட் டைட்டில் தான் அதன் Permalink மாறுகிறது. இவை அனைத்தும் தானியங்கி முறையில் உங்கள் பிளாக்கர் போஸ்ட்க்கு நீங்கள் டைட்டில் கொடுக்கும்பொழுது நடக்கிறது. சில சமயங்களில் உங்களது டைட்டில் 70 வார்த்தைகளுக்கும் அதிகமாக இருப்பின் அதன் முழுமையான வார்த்தைகள் உங்கள் Permalink- இல் சரியாக வருவதில்லை. இந்த லிங்கில் இரண்டு விதமான முறைகள் உண்டு, ஒன்று தானியங்கி முறையிலும் மற்றொன்று நீங்களாக எழுதும் Manual முறையிலும் இருக்கிறது. இந்த Permalink பற்றிய முழு விவரங்களை மற்றும் எப்படி அவை கொடுக்கப்பட வேண்டும் என்று பார்ப்போம்.
Blogger Post Title
உங்களது ஒவ்வொரு போஸ்ட்க்கும் நீங்கள் டைட்டில் கொடுக்கும்பொழுது அதன் நீளம் அதிகபட்சம் 70 வார்த்தைகள் இருக்குமாறு கொடுப்பது சிறந்ததாகும். இந்த டைட்டிலில் முக்கியமாக SEO Keyword வருமாறு கொடுப்பது அந்த போஸ்டின் Views மற்றும் ரேங்க் ஆகியவற்றை உயர்த்த பயன்படும். மேலும் இந்த டைட்டில் பெரும்பாலானோர் கூகுளில் தேடும் ஒரு டைட்டிலாக தேர்ந்தெடுப்பது இன்னும் சிறப்பாக இருக்கும். இந்த SEO Keyword உங்கள் டைட்டிலில் ஆரம்பத்தில் அல்லது டைட்டிலில் மத்தியில் வருமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இந்த டைட்டில் என்ன கொடுக்க இருக்கிறீர்களோ அதன் வார்த்தைகள் தான் உங்கள் போஸ்ட்க்கு Permalink ஆக அமைய இருக்கிறது. நீங்கள் இந்த டைட்டில் கொடுத்தவுடன் வலது பக்கத்தில் Permalink Option – ஐ Check செய்து பார்த்தால் அது தானியங்கி முறையில் உங்கள் போஸ்ட்க்கு Permalink தானாக எடுத்துக் கொள்ளும். இதில் இரண்டு வகைகள் உள்ளன ஒன்று Automatic Permalink மற்றொன்று Custom Permalink.
Automatic Permalink
நீங்கள் உங்கள் போஸ்ட்க்கு டைட்டில் கொடுத்தவுடன் முதலில் உங்களுக்கு Automatic Permalink உருவாகிவிடும். நீங்கள் அதனை பிளாக்கரின் வலதுபக்கத்தில் உள்ள Permalink Option- ஐ கிளிக் செய்து சரிபார்த்துக் கொள்ளலாம். இதில் முதலில் உங்கள் இணைய தளத்தின் முகவரி மற்றும் நீங்கள் எழுதும் போஸ்ட் தேதி, வருடம் ஆகியவை இருக்கும். அதற்கு அடுத்ததாக நீங்கள் என்ன டைட்டில் கொடுத்து இருக்கிறீர்களோ அதன் வார்த்தைகளும் உடன் இணைந்து இருக்கும். இதில் நீங்கள் பெரும்பாலும் எழுதும் டைட்டிலில் முழு வார்த்தைகளும் இடம்பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் டைட்டிலில் நீளத்திற்கு ஏற்ப இந்த Permalink- இல் டைட்டிலில் முழு வார்த்தைகளும் இடம்பெறும்.
![]() |
How To Change Permalink For Blog Post In Tamil |
சில சமயங்களில் உங்கள் டைட்டிலில் கடைசியாக உள்ள சில வார்த்தைகள் விடுபட்டு இந்த Permalink தானாக உருவாகி விடும். ஒருவேளை உங்கள் டைட்டில் முக்கியமான SEO Keyword கடைசியாக கொடுத்து இருந்தீர்கள் என்றால் அந்த Keyword விடுபட்டு காண்பிக்கும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அந்த Permalink SEO தரத்திற்கு சரியானது அல்ல. நீங்கள் டைட்டில் கொடுக்கும் ஒவ்வொரு போஸ்ட்க்கும் டைட்டில் கொடுத்தவுடன் அதன் Permalink Check செய்வது அவசியமாகும். உங்களின் டைட்டில் முழு வார்த்தைகள் இந்த Permalink- இல் வரவில்லை என்றால் அது Post- இன் Google Rank- இல் இருந்து பின்னடையச் செய்யும். ஒருவேளை நீங்கள் கொடுக்கும் டைட்டிலில் இந்த பிரச்சனை வரும் பட்சத்தில் நீங்கள் Custom Permalink- ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.
Custom Permalink
![]() |
How To Change Permalink For Blog Post In Tamil |
நீங்கள் உங்கள் போஸ்ட்க்கு Permalink இரண்டு முறைகளில் கொடுக்கலாம், அதில் இரண்டாவது முறையான இந்த Custom permalink நீங்கள் விரும்பியவாறு உங்களது டைட்டிலை கொடுக்க முடியும். மேலும் இதில் அதிகபட்சம் 70 வார்த்தைகளுக்குள் இருக்குமாறு கொடுப்பது சிறந்ததாகும்.Automatic Permalink- இல் சில பிரச்சனைகள் வரும்போது நீங்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணத்திற்கு இந்த போஸ்ட் இன் டைட்டில் “How To Change Permalink For Blog Post In Tamil” இதனை நீங்கள் Custom Permalink லிங்க் ஆக கொடுக்கும்பொழுது “how-to-change-permalink-for-blog-post-in-tamil” என்று கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுக்கும் டைட்டில் நீளம் அதிகபட்சம் 70 வார்த்தைகள் கொடுக்க வேண்டும்.
Other Language Title Permalink
நீங்கள் ஆங்கிலம் அல்லாது வேறொரு மொழியில் உங்கள் டைட்டில் கொடுக்கும்பொழுது அது Permalink- இல் பதிவு ஆகாது. இதனை நீங்கள் பிளாக்கரின் வலது பக்கத்தில் உள்ள Permalink Check செய்து பார்த்தால் புரியும். இவ்வாறு வேறு மொழியில் உங்கள் ப்ளாக் போஸ்ட் டைட்டில் கொடுக்கும்பொழுது உங்கள் Permalink -ஐ Custom Permalink முறையில் ஆங்கிலத்தில் கொடுக்க வேண்டும். இவ்வாறு நீங்கள் மாற்றவில்லை என்றால் அந்த போஸ்டின் SEO Rank முற்றிலும் தரம் குறைந்ததாக இருக்கும். மேலும் வேறு ஒரு மொழியில் நீங்கள் டைட்டில் கொடுக்கும் பொழுது அதன் Permalink “blog post” என்று Automatic Permalink எடுத்துக்கொள்ளும்.
![]() |
How To Change Permalink For Blog Post In Tamil |
இந்த Permalink சரியான விதத்தில் நீங்கள் பயன்படுத்த தெரிந்து கொண்டால் உங்களது ஒவ்வொரு போஸ்ட் SEO Rank பெறுவதோடு அதன் Views அதிகப்படுத்த முடியும். மேலும் இந்த டைட்டில் கொடுப்பதற்கு SEO Keyword- ஐ பல்வேறு இணைய தளங்களில் நீங்கள் இலவசமாக தேடிக் கொள்ள இயலும். முக்கியமாக இந்த டைட்டிலில் கொடுக்கும் Keyword மக்கள் தேடும் ஒரு வார்த்தையாக தேர்ந்தெடுப்பது சிறப்பாக இருக்கும்.