What Is Custom Domain
Custom Domain என்பது உங்களது கூகுள் பிளாக்கர் அல்லது வேர்ட்பிரஸ் இணையதளத்திற்கு நீங்கள் விரும்பும் பெயரில் டொமைன் வாங்கி இணைப்பதாகும். இந்த டொமைன் பல்வேறு இணையதளங்களில் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். பொதுவாக பிளாக்கரில் நீங்கள் உருவாக்கும் இணைய தளத்தின் முகவரி கூகுளின் பிளாக்ஸ்பாட் முகவரியுடன் இணைந்து வரும். இதில் உங்கள் இணையதளத்தின் முகவரியை இணையும் பொழுது அதனை URL என்று கூறுவார்கள்.
இந்த இணைய தளத்தின் முகவரி என்பது உங்கள் இணையதளத்திற்கு ஒரு அடையாளத்தை கொடுப்பது மட்டுமல்லாமல் அது பலர் தேடும் Keyword ஆகவும் அமைகிறது. மற்றும் உங்கள் இணையதளம் விசிட் செய்யும் அனைவருக்கும் ஞாபகம் வைத்துக் கொள்ளவும் இந்த கஸ்டம் டொமைன் தான் முக்கிய பங்கு வகிக்கிறது.
How To Be Custom Domain
கஸ்டம் டொமைன் வாங்கும் முன்பு பலரது மனதிலும் தோன்றுவது எந்த பெயரில் டொமைன் வாங்குவது என்கிற கேள்வியாகும். உங்களது இணையதளத்தில் எவ்வாறான தலைப்புகளில் போஸ்ட் போடுகிறீர்கள் என்பதைப் பொருத்தும் கஸ்டம் டொமைன் வாங்கிக் கொள்ளலாம். உதாரணத்திற்கு நீங்கள் Adsense பற்றி எழுதுகிறீர்கள் என்றால் உங்களது இணையதளத்தின் முகவரி Adsense பெயரில் தொடங்குவது சிறந்ததாகும்.
![]() |
How To Choose Perfect Custom Domain In Tamil |
உங்களின் முகவரி பார்க்கும்பொழுது பலருக்கும் புரியும் வகையில் நீங்கள் என்ன தலைப்பில் உங்களது போஸ்ட் உருவாக்கி இருப்பீர்கள் என்று சுலபமாக புரிந்து கொள்வார்கள். அதுமட்டுமல்லாது இணைய தளத்தின் முகவரி ஒரு SEO Keyword ஆகவும் செயல்படுகிறது. கூகுளில் ஒரு Keyword – ஐ எவ்வளவு நபர்கள் தேடுகிறார்கள் என்பதற்கு ஒரு மதிப்பு கொடுக்கப்படுகிறது. அவ்வாறான மதிப்புடைய கீவேர்ட்-ல் உங்கள் இணையதளம் இருக்கும் பட்சத்தில் அது SEO இணையதளமாக மாற்றப்படுகிறது.
SEO Keyword Value
ஒரு SEO Keyword மதிப்பு உங்கள் கூகுள் பிரவுசரில் தேடுவதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதற்கு Keyword Surfer என்கிற Tool உதவி செய்கிறது. இந்த டூலை உங்கள் பிரவுசரில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். கூகுள் வெப் ஸ்டோரில் நீங்கள் இதை டவுன்லோட் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். இந்த Keyword Surfer பயன்படுத்தி ஒரு கீவேர்ட் நீங்கள் தேடும் பொழுது அதன் மதிப்பும் மற்றும் அதற்கு இணையான பல Keywords உங்களுக்கு பரிசீலிக்கப்பட்டு காண்பிக்கப்படும்.
Custom Domain Value
கூகுளின் Keyword Planner-ல் உங்களது கஸ்டம் டொமைன் பெயரின் மதிப்பை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். Keyword Planner என்பது ஒரு Keyword- இன் மிக சரியான மதிப்பை மக்கள் பயன்படுத்தும் அடிப்படையில் கொடுப்பதாகும். இதில் நீங்கள் தேடும் Keyword – இன் மதிப்பு 10000 மேல் உள்ள கீவேர்ட் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
![]() |
How To Choose Perfect Custom Domain In Tamil |
இவ்வாறாக நீங்கள் தேடும் பல Keywords மதிப்பு தனித்தனியே கொடுக்கப்பட்டிருக்கும். இந்த பக்கத்தில் காண்பிக்கப்படும் அதிக மதிப்புள்ள அனைத்து keywords-ம் காப்பி செய்து ஒரு நோட்பேடில் சேவ் செய்து கொள்ளவும். அந்த keywords-ல் உள்ள காலியிடங்களை ( Empty Space ) நீக்கிய பின்பு Name Cheap இந்த இணையதளத்தில் BeastMode கிளிக் செய்து நோட்பேடில் இருக்கும் அனைத்து Keywords காபி செய்து Name Cheap இணையதளத்தில் Paste செய்யவும்.
![]() |
How To Choose Perfect Custom Domain In Tamil |
இப்பொழுது நீங்கள் தேர்வு செய்த Keyword-ல் எத்தனை கஸ்டம் டொமைன் வாங்கும் நிலையில் உள்ளது பற்றிய விவரங்கள் மற்றும் அதன் பணமதிப்பு காண்பிக்கப்படும். இதில் உங்களுக்கு பிடித்த கஸ்டம் டொமைன் நீங்கள் வாங்கிக் கொள்ள இயலும். சரியான கஸ்டம் டொமைன் தேர்வு செய்த பிறகு அதனை நீங்கள் விரும்பும் இணையதளத்திலும் வாங்கிக் கொள்ள இயலும். ஒரு கஷ்டம் டொமைன் வாங்கும் நிலையில் இவ்வாறான பரிசோதனைக்கு பிறகு வாங்குவது மிக சிறந்ததாகும். ஒருமுறை உங்கள் கஸ்டம் டொமைன் வாங்கிவிட்டால் அதனை மாற்றவோ அல்லது Exchange செய்து கொள்ளவும் முடியாது.