How To Create Sitemap xml For Blogger When Reached 150 posts

How To Create Sitemap xml For Blogger When Reached 150 posts

Sitemap Xml (atom)

உங்கள் பிளாக்கருக்கு Sitemap Xml Code உருவாக்கி அதனை பிளாக்கர் செட்டிங்கில் உள்ள ” Custom robot.txt” option- இல் கொடுத்து இருப்பீர்கள். அடுத்ததாக உங்கள் பிளாக்கருக்கு Search Console Page உருவாக்கி அதில் ” Sitemap ” Option- இல் sitemap.xml மற்றும் atom code கொடுத்து இருப்பீர்கள். இவ்வாறு Sitemap உருவாக்கி அதனை உங்கள் பிளாக்கரில் Search Console பக்கத்தில் கொடுத்தால் மட்டுமே உங்கள் பிளாக்கரில் எத்தனை போஸ்ட் போட்டு இருக்கிறீர்கள், அவ்வாறு போட்டிருக்கும் போஸ்டில் ஏதேனும் தொழில்நுட்ப ரீதியிலான பிரச்சனைகள் உள்ளதா, ஒவ்வொரு போஸ்டில் உள்ள பிரச்சனை என்ன மற்றும் அனைத்து போஸ்ட் Index ஆக்குவதற்கான அனைத்து வேலைகளும் இந்த Sitemap Code கொடுப்பதன் மூலம் மட்டுமே நடைபெறும்.

How To Create Sitemap.xml

முதல் முறையாக நீங்கள் உருவாக்கும் பிளாக்கருக்கு labnol இணையதளத்தில் Sitemap Generate செய்து உங்கள் பிளாக்கரில் கொடுத்து இருப்பீர்கள். இந்த இணையதளத்தில் உருவாக்கப்படும் atom code- ஐ Search Console பக்கத்தில் கொடுத்து இருப்பீர்கள். பொதுவாக நீங்கள் ஆரம்பத்தில் உருவாக்கும் இந்த Sitemap xml Code 1-லிருந்து 500 வரையிலான போஸ்ட் Index செய்யும் வகையில் அந்த Code உருவாக்கப்படும். உதாரணத்திற்கு ( Sitemap: https://www.tamiltechs.in/atom.xml?redirect=false&start-index=1&max-results=500 ) இவ்வாறு இருக்கும். இதில் atom.xml Code- இல் 1 முதல் 500 வரையிலான பிளாக்கர் போஸ்ட் Crawl செய்து Index செய்ய வைப்பதற்கான Processing Code வடிவமைக்கப்பட்டிருக்கும்.

Sitemap.xml index=1&max-results=500 Correct ?

உங்கள் பிளாக்கருக்கு Search Console பக்கத்தில் மேலே குறிப்பிட்டிருக்கும் atom.code அதாவது 1 முதல் 500 வரையிலான போஸ்ட் Index செய்வதற்கான Code- ஐ பயன்படுத்துவது எவ்வித பாதிப்பையும் உங்கள் பிளாக்கருக்கு ஏற்படுத்தாது. இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அதாவது உங்கள் பிளாக்கரில் 1 முதல் 150 போஸ்ட் மேல் இல்லை என்றால் மேலே குறிப்பிட்டிருக்கும் (atom.code 1 to 500) பயன்படுத்தினாலும் உங்களது அனைத்து போஸ்ட் Index செய்யப்படும். நீங்கள் எப்பொழுது உங்கள் பிளாக்கரில் 150- க்கு மேல் எழுதிக் கொண்டு இருக்கிறீர்களோ அப்பொழுது நீங்கள் Search Console பக்கத்தில் atom.code மாற்றி அமைக்க வேண்டும்.

How To Create atom code when Reached 150 Posts

Sitemap xml
Sitemap xml

உங்கள் பிளாக்கரில் 150 போஸ்ட் மேல் எழுதும் பொழுது atom code மாற்றி அமைக்க வேண்டும். அதாவது Search Console உங்கள் பிளாக்கரில் அதிகபட்சம் 150 போஸ்ட் மட்டுமே Crawl செய்து Index செய்யும். இன்னும் தெளிவாக சொன்னால் ஒவ்வொரு 150 போஸ்ட் தனித்தனியாக Search Console Crawl செய்து Index செய்யும். உதாரணத்திற்கு உங்கள் பிளாக்கரில் நீங்கள் 250 போஸ்ட் போட்டு இருக்கிறீர்கள் என்றால் முதலில் 150 போஸ்ட் Crawl செய்து Index செய்யும். அடுத்ததாக மீதமுள்ள 100 போஸ்ட் Crawl செய்து Index செய்யும். எப்பொழுது நீங்கள் 250 போஸ்ட் அடுத்தபடியாக 300 போஸ்ட் எழுதி முடித்தவுடன் முதற்கட்டமாக 150 போஸ்ட், இரண்டாம் கட்டமாக 150 போஸ்ட் என்று தனித்தனியாக Crawl செய்து Index செய்யும். இந்நிலையில் நீங்கள் 300 அல்லது அதற்கு மேற்பட்ட பிளாக்கர் போஸ்ட் எழுதும் பொழுது ஒவ்வொரு 150 போஸ்ட்-க்கும் தனித்தனியே atom code search console பக்கத்தில் add செய்ய வேண்டும்.

உதாரணத்திற்கு உங்கள் பிளாக்கரில் 300 போஸ்ட் இருக்கும் பட்சத்தில் :

முதல் 150 போஸ்ட் Index செய்வதற்கு : “atom.xml?redirect=false&start-index=1&max-results=150” என்று கொடுக்க வேண்டும்.

அடுத்த 150 போஸ்ட் Index செய்வதற்கு : “atom.xml?redirect=false&start-index=151&max-results=150” என்று கொடுக்க வேண்டும்.

இவ்வாறு உங்கள் பிளாக்கரில் எத்தனை போஸ்ட் எழுதி இருக்கிறீர்களோ அதற்கு ஏற்றவாறு atom code search console பக்கத்தில் கொடுக்க வேண்டும்.

One thought on “How To Create Sitemap xml For Blogger When Reached 150 posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *