Custom 404 Redirect
பொதுவாக பிளாக்கர் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சனை இந்த Custom 404 பிரச்சனையாகும். உங்கள் பிளாக்கரில் ஒரு போஸ்ட் உருவாக்கிவிட்டு பின்னர் அதனை நீங்கள் டெலீட் செய்யும்பொழுது இந்த பிரச்சனை உங்கள் பிளாக்கரில் வரக்கூடும். உங்கள் பிளாக்கரில் நீங்கள் ஏற்கனவே போட்ட அனைத்து போஸ்ட் கூகுளில் Index ஆகிவிட்டால் அது கூகுளில் ரேங்க் ஆகிவிடும். அவ்வாறு கூகுளில் ரேங்க் ஆகிவிட்ட குறிப்பிட்ட ஒரு போஸ்ட் க்ளிக் செய்யும் பொழுது அது உங்கள் பிளாக்கரில் காண்பிக்கப்பட வேண்டும். இந்நிலையில் நீங்கள் ஏற்கனவே போஸ்ட் செய்த ஒரு போஸ்ட் வேறு சில காரணங்களுக்காக நீங்கள் டெலீட் செய்து அந்த போஸ்ட் கூகுளில் ரேங்க் ஆகிவிட்ட சூழ்நிலையில் அதனை ஒருவர் கிளிக் செய்யும் பொழுது உங்கள் பிளாக்கரில் 404 Error காண்பிக்கப்படும். இது உங்கள் பிளாக்கர் SEO Rank பாதிப்பதோடு உங்கள் பிளாக்கர் Spam List- இல் போவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
Custom 404 Fix

இவ்வாறு உங்கள் பிளாக்கர் பாதிக்கும் இந்த Custom 404 Error பிரச்சனையை நீங்கள் எளிதில் சரி செய்ய முடியும். இதற்கு நீங்கள் பிரத்தியேகமாக ஒரு ஸ்கிரிப்ட் உங்கள் பிளாக்கரில் பயன்படுத்த வேண்டும். இந்த ஸ்கிரிப்ட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதனை காப்பி செய்து உங்கள் பிளாக்கரில் உள்ள செட்டிங்ஸ் அமைப்பினை கிளிக் செய்து அதிலுள்ள Custom 404 Option- ல் பேஸ்ட் செய்ய வேண்டும். இவ்வாறு நீங்கள் கொடுத்த பின்பு உங்கள் பிளாக்கரில் சரியாக வேலை செய்கிறதா என்பதை நீங்கள் சரி பார்க்க முடியும். உதாரணத்திற்கு உங்கள் பிளாக்கரில் நீங்கள் போடாத ஒரு லிங்கை செக் செய்யும் பொழுது அது உடனடியாக அதிகபட்சம் ஏழு வினாடிகளுக்குள் உங்கள் பிளாக்கரில் Home Page தானாக Redirect செய்துவிடும். இந்த ஸ்கிரிப்ட் முக்கிய வேலை என்னவென்றால் உங்கள் பிளாக்கரில் Custom 404 Page யாராவது கிளிக் செய்து பார்க்கும் பொழுது உடனடியாக அதிகபட்சம் 7 வினாடிகளுக்குள் உங்களது பிளாக்கரின் Home Page தானாக Redirect செய்யும் வேலையை இந்த ஸ்கிரிப்ட் செய்கிறது.
Custom 404 Script Disadvantage
இந்த ஸ்கிரிப்ட் நீங்கள் பயன்படுத்தும் பொழுது உங்கள் பிளாக்கர் Template இதற்கு Support செய்யவில்லை என்றால் உங்கள் பிளாக்கர் சரியாக ஓபன் ஆகாது. அதாவது உங்கள் பிளாக்கர் முற்றிலும் செயல்படாமல் Coudn’t Reach என்கிற Error காட்டும். அனைத்து பிளாக்கர் Template- ல் இந்தப் பிரச்சினை ஏற்படுவதில்லை. நீங்கள் பயன்படுத்தும் பிளாக்கர் டெம்ப்ளேட் ஏற்றவாறு இது ஸ்கிரிப்ட் சரியாக வேலை செய்யும் வேலை செய்யாமல் இருப்பதும் அமைகிறது. நான் சரி பார்த்தவரையில் இந்த ஸ்கிரிப்ட் மிக சரியாக எனது பிளாக்கர் டெம்ப்ளேட்- ல் வேலை செய்கிறது. இந்த ஸ்கிரிப்ட் உங்கள் பிளாக்கரில் நீங்கள் பயன்படுத்தும் பொழுது ஒரு முறை இந்த ஸ்டெப்ஸ் சரியாக வேலை செய்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவேளை உங்கள் பிளாக்கர் இந்த ஸ்கிரிப்ட் பயன்படுத்துவதன் மூலம் வேலை செய்யவில்லை என்றால் முற்றிலுமாக இந்த ஸ்கிரிப்ட் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள்.