How To Get More Views For Website

How To Get More Views For Website

March 5, 2021 0 By admin

Blog Post Views

இணையதளம் வைத்திருக்கும் அனைவரும் ஆரம்பத்தில் Views கொண்டுவருவதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். நீங்கள் அன்றாட Trending News எடுத்து உங்கள் பிளாக்கரில் போஸ்ட் போட்டாலும் நீங்கள் எதிர்பார்க்கும் Views கிடைப்பது அரிதாக இருக்கும். உங்களுக்கு தெரிந்த SEO,Backlinks கொடுத்தும் நீங்கள் எதிர்பார்த்த Views கிடைக்கவில்லை என்றால் வேறு என்ன செய்வது என்று கேள்வி எழும். உங்கள் பிளாக்கருக்கு அதிக Views பெற என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

Website Navigation

ஒரு இணையதளம் நீங்கள் வைத்திருக்கிறீர்கள் என்றால் அதன் Home Page- இல் ஒரு பயனாளர் தேடும் விஷயங்களை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். உங்களது முகப்பு பக்கத்தில் Menu,Category(or)Label Link இவை இரண்டும் பார்வையாளர்களை அடுத்தடுத்த பக்கங்களுக்கு கூட்டிச் செல்லும். இந்த Menu மற்றும் Labels Name ஒற்றை வார்த்தைகளாக ( Single Words ) இருக்குமாறு உருவாக்குங்கள். சிலரது பிளாக்கரில் மிக நீண்ட வார்த்தைகளாக இவற்றை எழுதி இருப்பார்கள். அவ்வாறு எழுதுவது அந்த Menu மற்றும் Label Name முழுமையாக படிக்கும் வகையில் அமைந்திருக்காது. ஒரு பயனாளர் தேடும் விஷயங்கள் உங்கள் பிளாக்கரில் என்று நினைத்து கூட இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. இதை அடுத்து இணையதளத்தின் வலது பக்கத்தில் Recent Posts Or Popular Posts வைப்பதன் மூலம் உங்கள் பிளாக்கரில் பயனாளர்கள் எதை அதிகம் விரும்பி படித்திருக்கிறார்கள் என்பதை ஒருவர் அறிந்து கொள்ள முடியும். இவை மட்டுமே உங்கள் பிளாக்கர் வருகை தரும் ஒரு பயனாளருக்கு போதுமானது. அதாவது உங்கள் பிளாக்கரில் நீங்கள் எழுதி இருக்கும் அனைத்து போஸ்ட் சென்று படிப்பதற்கான Settings நீங்கள் உருவாக்கி இருக்க வேண்டும். இவற்றிற்கு Menu And Labels மிகவும் உதவியாக இருக்கிறது.

Blog Pages

ஒரு இணையதளம் வைத்திருக்கிறீர்கள் என்றால் அந்த இணையதளத்திற்கு என்று Privacy Policy,T&C,Disclaimer,Contact,About Pages இருத்தல் வேண்டும். இதில் About பக்கத்தில் உங்களைப் பற்றியும் உங்கள் பிளாக்கர் பற்றியும் அதில் என்ன விஷயங்களை நீங்கள் எழுதுகிறீர்கள் என்பதைப் பற்றியும் சுருக்கமாகச் சொல்லலாம். இதன் மூலம் ஒரு பொது பயனாளர் உங்கள் பிளாக்கிற்கு வருகை தருகிறார் என்றால் அவர் உங்களைப் பற்றியும். உங்கள் பிளாக்கர் பற்றியும் மிக எளிதில் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.Contact Page உருவாக்குவதன் மூலம் ஒரு பயனாளர் உங்களுக்கு அவருக்கு ஏற்படும் சந்தேகங்களை அல்லது கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். ஒருவகையில் இதுவும் பயனாளர் விரும்பும் ஒரு சேவையாக அமைகிறது. இவற்றை அடுத்து உங்கள் இணையதளத்தில் ஒரு பயனாளர் இடம் இருந்து என்னென்ன தகவல்கள் நீங்கள் வாங்குகிறீர்கள் மற்றும் உங்கள் இணையதளத்தை ஒரு பயனாளர் எப்படி பயன்படுத்த வேண்டும் போன்ற விஷயங்களை Privacy Policy ,T&C மூலம் நீங்கள் பயனாளர்களுக்கு தெரிய படுத்த முடியும். இவை இணையதளத்தின் கேட்டகிரி க்கு ஏற்றவாறு மாறுபடும். உங்கள் இணையதளத்தை Google Adsense Apply செய்ய இருக்கிறீர்கள் என்றால் இந்த அனைத்து Pages கண்டிப்பாக இருக்க வேண்டும்.

SEO Keywords

ஒரு இணையதளத்தில் முக்கிய பங்கு வகிப்பது இந்த SEO keywords ஆகும். ஒரு பிளாக் போஸ்ட் அதன் டைட்டில்,Content ஆகியவற்றில் இந்த SEO Keyword இடம் பெற்றிருப்பது அவசியமாகிறது. இந்த SEO Keyword எங்கு எடுக்கவேண்டும், எப்படி எடுக்க வேண்டும், அதை எப்படிப் பயன்படுத்துவது போன்ற பல்வேறு விஷயங்களை நீங்கள் ஒரு பிளாக் போஸ்ட் எழுவதற்கு முன்பு நன்றாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஒரு பிளாக் போஸ்ட் எந்த அளவிற்கு நீங்கள் அதிக வார்த்தைகள் போட்டு எழுதுகிறீர்களா அந்த அளவிற்கு அந்த பிளாக் போஸ்ட் ரேங்க் ஆகுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.SEO Keyword நீங்கள் Google Keyword Planner மூலமாகவும் இலவசமாக நீங்கள் தேடிக் கொள்ளலாம். இவ்வாறு மிகச்சரியாக உங்கள் பிளாக் போஸ்டில் SEO Keywords பயன்படுத்த தெரிந்திருந்தால் உங்கள் ஒவ்வொரு பிளாக் போஸ்ட்- க்கும் அதிக Views கொண்டு வர முடியும்.

Backlinks

உங்கள் இணையதளத்திற்கு Off-Page SEO- இல் முக்கிய பங்கு வகிப்பது இந்த Backlinks ஆகும். இவற்றை நீங்கள் பல்வேறு முறைகளில் உருவாக்க முடியும். உதாரணத்திற்கு வேறு ஒரு இணைய தளத்தில் உள்ள பிளாக் போஸ்ட் Comment செய்வதன் மூலமும் , வேறு ஒரு இணையதளத்திற்கு நீங்கள் Guest Post எழுதி அதில் உங்கள் பிளாக் போஸ்ட் லிங்க் கொடுப்பதன் மூலமும், சில Backlink Generator Tool மூலமும் நீங்கள் உருவாக்க முடியும். இதில் அதிக திறன்வாய்ந்த Backlink முறை Guest Post எழுதுவதன் மூலம் கிடைக்கிறது. மேலும் சில இணைய தளங்களில் அவர்கள் வேறு ஒரு இணையதளத்தை Referral Link ஆக பிளாக் போஸ்டில் கொடுத்திருப்பார்கள் அவ்வாறு அவர்கள் கொடுத்த லிங்க் தற்பொழுது Error Page Or 404 Page ஆக மாறி இருக்கலாம். அவற்றை நீங்கள் காணும் பட்சத்தில் அதே கேட்டகிரியில் நீங்கள் உங்கள் இணையதளத்தில் பிளாக் போஸ்ட் எழுதி இருந்தாள் சம்பந்தப்பட்ட இணையதளத்தின் Admin தொடர்புகொண்டு உங்கள் பிளாக் போஸ்ட்டை நீங்கள் Recomment செய்யலாம். இதன் மூலமும் நல்ல விதமான Backlinks இணைய தளத்திற்கு நீங்கள் உருவாக்க முடியும். இந்த Backlinks உங்கள் இணையதளத்தின் நம்பகத்தன்மை, உண்மைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தும். இதை கூகுள் நிறுவனம் புரிந்துகொண்டு உங்கள் பிளாக் போஸ்ட் ரேங்க் செய்வதற்கு உதவி செய்யும். இதன்மூலம் உங்கள் பிளாக்கருக்கு Views அதிகப்படுத்த முடியும்.

Social Share

உங்கள் இணையதளத்திற்கு என்று சமூக வலைதளங்களில் ஒரு பக்கத்தை உருவாக்கி அதில் உங்கள் பிளாக் போஸ்ட் ஷேர் செய்வதன் மூலமும் Views அதிகம் படுத்த முடியும். இவ்வாறு சமூக வலைதளங்களில் இருந்து Views கொண்டு வர விரும்புகிறீர்கள் என்றால் நிச்சயம் உங்கள் பிளாக் போஸ்ட் அவர்கள் படிக்கும் வகையிலும், விரும்பும் வகையிலும் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஒரு பயனாளர் உங்கள் பிளாக்கரில் வருகிறார் என்றால் அவர் உங்கள் இணையதளத்தில் உள்ள பல்வேறு பக்கங்களை படிக்கும் ஆர்வத்தை தூண்டும் விதமாக உங்கள் பிளாக் போஸ்ட் அமைந்திருக்கவேண்டும்.

Post Readability

கண்டிப்பாக உங்கள் பிளாக் போஸ்ட் புரியும் வகையில் எழுதக் கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் எந்த மொழியில் பிளாக் போஸ்ட் எழுதினாலும் அது அந்த மொழி வட்டார மக்களுக்கு கண்டிப்பாக புரியும் வகையில் இருக்க வேண்டும். அடுத்ததாக உங்கள் இணையதளம் எந்த வயதினருக்கு நீங்கள் எழுதுகிறீர்கள் என்பதை மிகத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். எந்த வயதினருக்கு நீங்கள் பிளாக் போஸ்ட் எழுத உள்ளீர்களா அவர்களுக்கு புரியும் விதத்தில் கண்டிப்பாக உங்கள் பிளாக் போஸ்ட் இருக்க வேண்டும். அந்த வட்டார மொழி பேசும் மக்களுக்கு அவர்கள் பயன்படுத்தும் லகுவான வார்த்தைகளை உள்ளடக்கியதாக உங்கள் போஸ்ட் இருக்க வேண்டும். இவ்வாறு எழுதுவது அவர்கள் அவர்களை உங்கள் இணையதள தோடு இணைத்துக் கொள்வார்கள்.

Post Image

நீ போஸ்ட் எழுதும் பொழுது சில வார்த்தைகளுக்கு நடுவே Image Add செய்வது ஒரு பயனாளர் ஐ நீண்ட நேரம் வந்த பிளாக் போஸ்டில் இருக்க செய்வதற்கான ஒரு முயற்சியாக எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் இவ்வாறு Image Add செய்வதன் மூலம் ஒரு பயனாளர் ஐ உங்கள் பிளாக் போஸ்ட் படிக்கும்பொழுது தொய்வில்லாமல் நீங்கள் பார்த்துக் கொள்ள முடியும். இவ்வாறு மேலே சொன்ன அனைத்து விஷயங்களும் உங்கள் இணையதளத்தில் நீங்கள் கடைப்பிடிக்கும் பட்சத்தில் நீங்கள் அதிக Views பெற முடியும்.