Speedup Blogger
உங்களது பிளாக்கர் வேகமாக Loading ஆகும்பொழுது Bounce Rate, கூகுள் ரேங்க் அடைவது ஆகிய பயன்கள் ஏற்படுகிறது. பொதுவாக உங்கள் பிளாக்கர் விசிட் செய்யும் ஒவ்வொரு நபருக்கும் மிக வேகமாக லோடிங் ஆகும் பட்சத்தில் அவர்கள் அடுத்தடுத்த பக்கத்திற்கு சென்று உங்கள் பிளாக்கர் போஸ்ட் படிக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஒருவேளை உங்களது பிளாக்கர் மிகக்குறைந்த வேகத்தில் அல்லது ஒரு பக்கத்தினை ஓபன் செய்வதற்கு மிக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் அவர்கள் உங்களது இணையதளத்தை க்ளோஸ் செய்துவிட்டு வேறு இணைய தளங்கள் இருக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு நடக்கும் பட்சத்தில் உங்களது பிளாக்கரின் Bounce Rate அதிக படுத்தப்படுகிறது. இதனால் உங்கள் பிளாக்கரில் போடும் போஸ்ட் கூகுளில் முதலாவது பக்கத்திற்கு ரேங்க் ஆகுவது தடுக்கப்படுகிறது. இதுமட்டுமல்லாது உங்கள் பிளாக்கருக்கு விசிட் செய்யும் நபர்களின் எண்ணிக்கையும் மிக வேகமாக குறைக்கப்படும். இதன் மூலம் நீங்கள் பிளாக்கரில் ஆட்சென்ஸ் அப்ரூவல் வாங்கி இருக்கும்பட்சத்தில் உங்களது வருமானமும் குறைக்கப்படுகிறது. மேலும் கூகுள் நிறுவனம் மிக அதிகமாக வேகமுள்ள இணையதளத்தின் பக்கங்களை தான் அதன் தேடுதளத்தில் முதல் பக்கத்தில் மக்களுக்கு காண்பிக்கிறது. இவ்வாறு உங்கள் பிளாக்கர் Speedup Blogger ஆக இருக்க வேண்டும் என்று பலராலும் கூறப்படுகிறது.
How To Speedup Blogger
இப்பொழுது உங்களுக்கு ஒரு இணையதளம் மிக வேகமாக செயல்பட வேண்டியது மிகவும் அவசியம் என புரிந்திருக்கும். இதற்கு பின்னால் மிகப்பெரிய அளவில் பல்வேறு டெக்னிக்கல் செயல்கள் மூளையாக செயல்படுகிறது. இருப்பினும் அனைவராலும் புரியும் படி வகையில் மற்றும் எளிதில் அனைவரும் செய்யக்கூடிய விஷயங்கள் சில இருக்கின்றன. அந்த சில Setting உங்களது பிளாக்கரில் நீங்கள் செய்வதன் மூலம் மிக வேகமாக செயல்படும் ஒரு பிளாக்கர் ஆக மாற்ற முடியும். இதற்கு முதலில் நீங்கள் உங்கள் பிளாக்கரில் தேவையற்ற Script பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.அதிக அளவில் வீடியோக்கள் பயன்படுத்தும் போது அதன் வேகம் முற்றிலுமாக குறைக்கப்படுகிறது. இதை அடுத்து உங்கள் பிளாக்கர் முழுவதுமாகவோ அல்லது சிறிய அளவிலோ யூடியூப் வீடியோக்களை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்ப்பது உங்களது பிளாக்கரின் வேகத்தை அதிகப்படுத்தும். இதற்கு அடுத்து உங்கள் பிளாக்கை நீங்கள் டிசைன் செய்யும் விதமாக பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட Script பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்ப்பதன் மூலம் உங்கள் பிளாக்கர் வேகத்தினை நீங்கள் அதிகப்படுத்த முடியும். உதாரணத்திற்கு பலர் அவர்களது பிளாக்கரில் Font Style மாற்றுவது,Scrolling Text பயன்படுத்துவது,Animation வீடியோக்கள் அல்லது இமேஜ்கள் பயன்படுத்துவது என பல்வேறு செயல்பாடுகளை முற்றிலும் தவிர்ப்பதன் மூலம் உங்களது பிளாக்கரை நீங்கள் வேகப்படுத்த முடியும்.
Image To Webp

உங்கள் பிளாக்கரின் வேகத்தை நீங்கள் சரி பார்ப்பதற்கு கூகுளின் Page Speed Insights டூலினை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு நீங்கள் உங்களது பிளாக்கரை சரி பார்க்கும் பொழுது இறுதியில் உங்கள் பிளாக்கர் மொபைல் மற்றும் கம்ப்யூட்டரில் பார்க்கும் பொழுது எத்தனை சதவிகிதம் என்கிற சதவிகித புள்ளிகள் காண்பிக்கப்படும். இதில் பெரும்பாலும் மொபைல் செக்ஷனில் அதிகம் காட்டப்படும் புள்ளிகள் 15-50 புள்ளிகள் இருக்கும். இவ்வாறு காட்டப்படும் ரிப்போர்ட்டுகள் பல்வேறு தொழில்நுட்ப தவறுகள் இருப்பது போல் அந்த பக்கத்தில் காட்டப்படும். உதாரணத்திற்கு Fcp,Fid,Lcp,Cls என்று பல்வேறு தொழில்நுட்ப ரீதியான தவறுகள் காட்டப்படும். இதில் பல்வேறு தவறுகள் காட்டப்பட்டாலும் அனைவரும் மிக சுலபமான வழியில் சரிசெய்யக்கூடிய ஒரு வழியும் கூறப்படுகிறது. அதில் Opportunity என்கிற Option கீழ் காட்டப்படும் “Serve images in next-gen formats” கொடுக்கப்பட்டிருக்கும் பல்வேறு இமேஜ்களை நீங்கள் சரி செய்வதன் மூலம் உங்கள் பிளாக்கர் வேகத்தினை அதிகப்படுத்த முடியும். இதில் பெரும்பாலும் உங்கள் பிளாக்கரில் நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தியிருக்கும் இமேஜ்கள் லிஸ்ட் கொடுக்கப்பட்டிருக்கும். அதாவது உங்கள் பிளாக்கரில் இதுவரை நீங்கள் பயன்படுத்திய அதிக குவாலிட்டி உள்ள இமேஜ்களை இங்கே ஒரு லிஸ்ட் ஆக கொடுக்கப்பட்டிருக்கும். இதன் உண்மையான அர்த்தம் உங்கள் பிளாக்கரில் நீங்கள் பயன்படுத்தியிருக்கும் இமேஜ்களை தரத்தினை அதாவது அதன் உண்மையான Size நீங்கள் குறைத்து பயன்படுத்தும் பொழுது உங்களது பிளாக்கரின் வேகம் அதிக படுத்த முடியும் என்பதுதான். இதை நீங்கள் மிக சுலபமாக செய்யக்கூடிய ஒரு செயலாகும்.

இதில் நீங்கள் பயன்படுத்தும் இமேஜ்கள் எந்த பார்மட்டில் இருந்தால் உங்களது பிளாக்கரின் ஸ்பீடு உயர்த்தப்படும் என்று சொல்லப்பட்டிருக்கும். அதாவது உங்கள் பிளாக் நீங்கள் பயன்படுத்தும் இமேஜ் பார்மட் “PEG 2000, JPEG XR, and WebP” ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் பயன்படுத்தும் பட்சத்தில் உங்கள் பிளாக்கருக்கு ஸ்பீட் கிடைக்கும் என்று கூறப்பட்டிருக்கும். இதில் மிகவும் சுலபமான ஒரு முறைதான் Webp அதாவது உங்களது பிளாக்கரில் நீங்கள் பயன்படுத்தும் இமேஜ்கள் “webp Format” முறையில் பயன்படுத்தும் பொழுது உங்கள் பிளாக்கரில் வேகம் அதிக படுத்த இயலும். இதற்கென்று பிரத்தியேகமாக ஆன்லைனில் ஒரு இமேஜை முற்றிலுமாக நீங்கள் Webp Format File ஆக மாற்றி அதனை உங்களது பிளாக்கரில் நீங்கள் பயன்படுத்த முடியும். இவ்வாறு Webp Format ஆக பயன்படுத்துவதற்கு என்று பல்வேறு டூல்கள் ஆன்லைனில் கிடைக்கிறது அல்லது Webp Converter டூலை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த முறையில் உங்களது பிளாக்கரில் பதிவேற்றம் செய்யப்படும் ஒவ்வொரு இமேஜ்கள் Webp Format இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக உங்களது பிளாக்கர் மிக வேகமாக செயல்படும். இதன்மூலம் உங்கள் பிளாக்கரில் Bounce Rate குறைக்கப்படுகிறது,Google Rank அடைகிறது.
all your posts are very good and i am trying website by seeing your youtube videos