Top 10 Tamil Blogs

Top 10 Tamil Blogs

Top 10 Tamil Blogs

பல்வேறு துறை சார்ந்த பதிவுகளும், பல்வேறு வகை சார்ந்த பதிவுகளும் அடங்கிய Top 10 Tamil Blogs எவை என்று பார்க்க இருக்கிறோம். தமிழ் மொழியில் எழுதப்படும் பல்வகையான பிளாக்கர் இருக்கின்றன. இதில் செய்திகள், கதைகள், கட்டுரைகள், இலக்கணங்கள், சினிமா சார்ந்த செய்திகள், அரசியல் செய்திகள், துறை சார்ந்த பதிவுகள் என பல்வேறு வகையான பிளாக்கர்கள் தமிழர்களால் நடத்தப்பட்டு வருகின்றன. அவை என்னவென்று பார்ப்போம்.

Jeyamohan

பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் பல்வேறு நாவல்கள் அவரது ப்ளாக் போஸ்டில் எழுதியுள்ளார். மேலும் சிறுகதைகள், அறிவியல் செய்திகள், கவிதைகள், நாடகங்கள் என பல்வேறு அம்சங்கள் கொண்ட பிளாக் போஸ்ட் எழுதுகிறார்.

Charu Nivedita

பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா 6 நாவல்கள்,8 கதைகள்,1 மொழிபெயர்க்கப்பட்ட கதை,25 தொடர்கள்,1 நாடகம் எழுதியுள்ளார். மேலும் சினிமா துறை சார்ந்த, அரசியல்துறை சார்ந்தும் பல்வேறு கருத்துக்களை எழுதியுள்ளார். இவரது புத்தகங்கள் அமேசான் இணையதளத்திலும் கிடைக்கப் பெறலாம்.

Ramakrishnan

தமிழிலக்கியத்தில் ஒரு முக்கிய எழுத்தாளராக திரு ராமகிருஷ்ணன் அவர்கள் திகழ்கிறார்.21 கதைகள்,22 குழந்தைகள் இலக்கணம்,7 விரிவுரை,11 உலக இலக்கணக் கட்டுரைகள்,13 சினிமா கட்டுரைகள் என பல்வேறு துறை சார்ந்த, மொழி சார்ந்த பதிவுகளை எழுதியுள்ளார்.

Valaitamil

வலைத்தமிழ் இணையதளத்தில் சினிமா, அரசியல், கல்வி, அன்றாட நிகழ்வுகள் என பல்வேறு அம்சங்கள் அடங்கிய சிறப்பு சேவைகளை அவர்களது இணையதளம் மூலமாக வழங்குகிறார்கள்.

Eluthu

இந்த இணையதளம் கவிதை,கதை,கட்டுரை,நகைச்சுவை,ஓவியம்,அகராதி,தமிழ் படி,திருக்குறள்,எழுது,பொன்மொழிகள்போட்டிகள்,எண்ணம்,கருத்து கணிப்பு,விளையாட்டு,கேள்வி பதில் ஆகியவை அடங்கிய பதிவுகளை எழுதுகிறார்கள்.

Luckyonline

யுவகிருஷ்ணா என்ற பெயரில் எழுதும் கிருஷ்ணகுமார் இந்த இணைய தளத்தை நிர்வகிக்கிறார். இவர் இணைய விவாத தளங்களிலும், வலைப்பதிவுகளும், குங்குமம், ஆனந்த விகடன், குமுதம் ரிப்போர்ட்டர், பில்டர்ஸ் வேர்ல்டு உள்ளிட்ட பத்திரிகைகளிலும் எழுதியுள்ளார். இவரது இணையதளத்தில் கதைகள், கவிதைகள், கட்டுரைகள், சினிமா, அரசியல் பன்முகம் கொண்ட பதிவுகளை காண முடியும்.

Indiatempatetour

இந்த இணையதளத்தில் இறை சார்ந்த பதிவுகளை காண முடியும். சென்னை, கேரளா, ஆந்திர பிரதேசம் நகரங்கள் சார்ந்த கோவில் பற்றிய விவரங்களை இந்த இணையதளத்தில் படிக்க முடியும். மேலும் ஒவ்வொரு கோயிலின் சிறப்பம்சங்கள், வரலாற்று சிறப்புமிக்க கோவில் பற்றிய விபரங்கள் இங்கு காண முடியும்.

Santhosh Mathevan

இந்த இணையதளத்தில் சினிமா, கருத்துக்கள், நேர்காணல், அரசியல், வரலாற்றுப் பதிவுகள், சிறுகதைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கிறது.

Automobiletamilan

இந்த இணையதளத்தில் கார், பைக், வணிகம், மோட்டார் ஷோ, டிராக், பேருந்து, ஆட்டோ டிப்ஸ் என பல்வேறு வகை சார்ந்த பதிவுகளை காணமுடியும்.

Ariviyal

எழுத்தாளர் என்.ராமதுரை அவர்களால் இந்த இணையதளம் நிர்வகிக்கப்படுகிறது. இவர் “Inside the Atom” புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். பத்துக்கும் மேற்பட்ட பொது அறிவியல் புத்தகங்களை எழுதினார். இந்த இணையதளத்தில் அறிவியல் சார்ந்த செய்திகளை மிகத் தெளிவாக எளிய முறையில் தமிழில் பதிவு செய்துள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *