What Is Domain Authority And Page Authority In Tamil

August 13, 2020 3 By admin

Domain Authority And Page Authority :

Domain Authority மற்றும் Page Authority ஆகியவை ஒரு இணையதளத்தின் SEO மதிப்பிற்கு மிக முக்கியமாகும். ஒரு இணைய தளத்தின் பக்கங்கள் கூகுளில் தேடும் பொழுது முதலாவதாக வருவதற்கு இந்த டொமைன் அத்தாரிட்டி மற்றும் பேஜ் அத்தாரிட்டி மிக முக்கிய காரணமாக அமையும். Moz மற்றும் Semrush ஆகிய SEO சேவை புரியும் இணையதளங்களின் முக்கிய கண்டுபிடிப்பு இந்த பேஜ் அதாரிட்டி மற்றும் டொமைன் அத்தாரிட்டி ஆகும். கூகுளில் ஒரு இணைய தளத்தின் பக்கம் முதலாவதாக காட்டுவதற்கு 200 Factors-க்கு மேல் இருக்க வாய்ப்பிருக்கிறது. அவற்றில் 40 முதல் 50 ஃபேக்டர்ஸ் வரை மையமாகக்கொண்டு இந்த Moz மற்றும் Semrush இணையதளங்கள் டொமைன் அத்தாரிட்டி மற்றும் பேஜ் அத்தாரிட்டி ஆகியவற்றின் மதிப்பை கணக்கிடுகிறது.

Domain Authority :

டொமைன் அத்தாரிட்டி மதிப்பு 1 முதல் 100 வரை கணக்கிடப்படுகிறது. இதன் மதிப்பு கூடுதலாக இருக்கும் பட்சத்தில் ஒரு இணையதளம் கூகுளில் தேடும்பொழுது முதலாவதாக காட்டுவதற்கு வாய்ப்பிருக்கிறது. இந்த டொமைன் அத்தாரிட்டி மதிப்பை கூட்டுவதற்கு ஒரு இணையதளத்திற்கு அதிகமான லிங்க் பில்டிங் தேவைப்படுகிறது. இந்த லிங்க் பில்டிங் ஆனது சரியான முறையில் வெவ்வேறு இணைய தளங்களில் இருந்து உருவாக்கப்பட வேண்டும். லிக் பில்டிங் எவ்வாறு இருக்க வேண்டும் என்று அதன் முறைகள் கீழே கூறப்பட்டுள்ளன.

* உங்கள் இணையதளத்திற்கு வேறு ஒரு இணைய தளத்தில் உங்கள் போஸ்ட் இன் லிங்கை 10 முறை கொடுப்பதற்கு பதிலாக 10 வெவ்வேறு இணைய தளங்களில் உங்கள் இணையதளத்தின் லிங்க் கொடுக்கப்பட்டிருந்தால் அது சரியான முறையாகும்.

* உங்கள் இணையதளத்தின் லிங்க் கொடுக்கப்படும் இணையதளத்தின் டொமைன் அத்தாரிட்டி மற்றும் பேபி அத்தாரிட்டி கூடுதலாக இருப்பின் அது மதிப்பு வாய்ந்த லிங்க் ஆகும்.

* நீங்கள் எழுதும் அதே கேட்டகிரி- இல் எழுதும் வேறு ஒரு இணையதளத்தில் உங்களின் லிங்க் கொடுக்கப்பட்டிருந்தால் அது மதிப்பு வாய்ந்ததாகும்.

* ஒரு இணையதளத்தின் Footer,Sidebar,Header இவற்றில் ஏதேனும் ஒரு பகுதியில் உங்கள் இணையதளத்தில் முகவரி கொடுக்கப்பட்டு இருப்பின் அது மிக சரியான மதிப்பு வாய்ந்ததாகும்.

Page Authority :

பேஜ் அத்தாரிட்டி மதிப்பு 1 முதல் 100 வரை கணக்கிடப்படுகிறது. இதன் மதிப்பு கூடுதலாக இருக்கும் பட்சத்தில் அந்த இணையதளத்தின் பக்கத்தினை கூகுளில் தேடும் போது முதலாக காட்டுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த பேஜ் அத்தாரிட்டி மதிப்பை கூட்டுவதற்கு உங்கள் இணையதளம் பார்க்கும் நபர்களால் தீர்மானிக்கப்படுகிறது. ஒரு நபர் இணையதளத்தின் ஒரு பக்கத்தினை முழுவதுமாக படித்து அதை பக்கத்தினை Share செய்வது, மற்றும் இணையதளத்தின் மற்றுமொரு பக்கத்திற்கு செல்வது ஆகியவற்றின் மூலம் உங்கள் பேஜ் அத்தாரிட்டி மதிப்பு கூட்டப்படுகிறது.

இந்த பேஜ் அத்தாரிட்டி கூட்டுவதற்கு உங்கள் போஸ்ட் முழுவதும் அனைவரும் படிக்கும் வகையில் சுவாரசியமாக இருத்தல் வேண்டும். மற்றும் அதன் டைட்டில் மிகச் சரியானதாகும் அந்த போஸ்ட்- படிக்க வேண்டும் என்று ஆர்வத்தை தூண்டுவதாக அமைய வேண்டும். இத்துடன் உங்கள் ஒவ்வொரு போஸ்ட்-ம் SEO Keyword போட்டு மிக சரியான முறையில் எழுதியிருக்க வேண்டும்.

கூகுள் நிறுவனம் இந்த பேஜ் அத்தாரிட்டி மற்றும் டொமைன் அத்தாரிட்டி முறையை நிர்வாக முறையாக அறிவிக்கவில்லை. இருப்பினும் ஒரு போஸ்ட் கூகுளில் தேடும் பொழுது முதலாக வருவதற்கு பல்வேறு காரணங்கள் அமைகிறது. இதில் சில Factors- எடுத்துக்கொண்டு Moz, Semrush மற்றும் SEO சேவை புரியும் இணையதளங்கள் இந்த முறையை உருவாக்கியுள்ளன. உங்கள் இணையதளத்தின் DA-PA மதிப்பை நீங்கள் இந்த இணையதளங்கள் சென்று அறிந்து கொள்ளலாம்.