
Download Free Blogger Templates
உங்கள் பிளாக்கருக்கு தேவையான Blogger Template நீங்கள் இலவசமாக ஆன்லைனில் டவுன்லோட் செய்து கொள்ளலாம். அவ்வாறு நீங்கள் செலக்ட் செய்யும் டெம்ப்ளேட் SEO Freindly ஆகவும் அதே சமயத்தில் Ads Friendly ஆகவும் இருப்பது முக்கியமாகும். பெரும்பாலானோர் Premium Template பயன்படுத்தினால் அது SEO Friendly ஆக இருக்கும் என்று நினைக்கிறார்கள். உண்மையில் SEO என்பது உங்களது பிளாக்கரில் போடும் போஸ்டில் என்ன மாதிரியான SEO Keyword பயன்படுத்துகிறீர்கள் மற்றும் அதனை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதை பொருத்து அமையும். இங்கு பலரும் Premium Template சிறந்தது என்று நினைக்கும் அதே சமயத்தில் பிளாக்கருக்கு என்று பல இலவச டெம்ப்ளேட்கள் ஆன்லைனில் கிடைக்கிறது. அவ்வாறு இலவசமாக கிடைக்கும் டெம்ப்ளேட் பற்றிய தகவல்களை தருவதற்கு இந்த பதிவு ஆகும்.
Free Blogger Template Simple
இவ்வாறு இலவசமாக கிடைக்கும் பிளாக்கர் டெம்ப்ளேட் Templateyard இணையதளத்தில் நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம். என்னுடைய இணையதளத்திற்கு நான் பயன்படுத்திய வரையில் இந்த இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்யும் ஒவ்வொரு டெம்ப்ளேட் மிக சிறப்பு வாய்ந்ததாகும். குறிப்பாக உங்களது பிளாக்கர் Adsense Approval வாங்கிவிட்டால் இந்த இணையதளத்தில் கிடைக்கும் அனைத்து டெம்ப்ளேட் Ads Friendly ஆக கிடைக்கப்பெறுகிறது. மேலும் நீங்கள் Auto Ads Enable செய்துவிட்டு இந்த பிளாக்கர் டெம்ப்ளேட் பயன்படுத்தும் பட்சத்தில் தேவையான இடங்களில் மிகச்சரியாக விளம்பரங்களை பெரிய செய்கிறது. இந்த இணையதளத்தில் பல்வேறு டெம்ப்ளேட் இருந்தாலும் இங்கு சில டெம்ப்ளேட்கள் உதாரணத்திற்கு குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து டெம்பிளேட் நீங்கள் எந்த ஒரு Category இணையதளம் வைத்திருந்தாலும் அவற்றிற்கு மிகச்சரியாக பொருத்தமாக இருக்கும்.
Ultralite And Ultramag
Ultralite And Ultramage Blogger Template டெக் மற்றும் நியூஸ் சம்பந்தமான பிளாக்கருக்கு நீங்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் Feature Post அமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளன. இதை அடுத்து நீங்கள் ஒவ்வொரு Category-க்கும் தனித்தனியே வகைப்படுத்தி போஸ்ட் தெரியுமாறு அமைத்துக்கொள்ளலாம். இந்த டெம்ப்ளேட் நீங்கள் பயன்படுத்தும் பொழுது உங்களது இணையதளம் ஒரு மிகப்பெரிய இணையதளமாக ஒரு சிறப்பு பார்வை அனைவருக்கும் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.உங்களுக்கு Feature Post அமைப்பு தேவை இல்லை என்றால் அது நீங்கள் Layout Settting- இல் நீக்கிக் கொள்ளலாம்.
Max SEO
Max SEO Blogger Template டெக், நியூஸ், மற்றும் கல்வி சம்பந்தமான அனைத்து பிளாக்கும் இந்த டெம்ப்ளேட் மிக பொருத்தமாக அமைகிறது. இந்த டெம்ப்ளேட் மிகவும் Simple ஆக இருப்பதால் இதனை கையாள்வது என்பது மிக சுலபமான ஒன்று. இந்த டெம்ப்ளேட்டில் Feature Post அமைப்பு மற்றும் Grid Post அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு Feature Post அமைப்பு தேவை இல்லை என்றால் அது நீங்கள் Layout Settting- இல் நீக்கிக் கொள்ளலாம். எனக்கு தெரிந்த வரையில் எனது யூட்யூப் சேனல் சப்ஸ்கிரைப் பர் 20க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த டெம்ப்ளேட் பயன்படுத்தி அவர்களது பிளாக்கருக்கு Adsense Approval வாங்கி உள்ளார்கள் என்பது கூடுதல் தகவலாகும். அதே சமயத்தில் உங்கள் பிளாக்கரில் நீங்கள் போடும் போஸ்ட் Copyright இல்லாமல் இருப்பது மிக முக்கியமாகும்.
SuperFast
Superfast Blogger Template டெக், நியூஸ், கல்வி மற்றும் Personal Blog பிளாக் ஆக உருவாக்குவதற்கு இந்த டெம்ப்ளேட் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த டெம்ப்ளேட்டில் Feature Post மற்றும் Grid Post அமைப்பு கொடுக்கப்படவில்லை. இந்த டெம்ப்ளேட்டில் பிளாக்கர் போஸ்ட் அடுத்தடுத்து Horizontal அமைப்பில் தெரியுமாறு அமைக்கப்பட்டுள்ளது. மற்ற பிளாக்கர் டெம்ப்ளேட் விட இது பார்ப்பதற்கு மிகவும் Simple ஆக இருப்பதோடு ஒரு Attractive ஏற்படுத்தும் வகையில் அமையும்.
Enfold
Enfold Blogger Template டெக், நியூஸ், கல்வி மற்றும் Personal Blog ஆக உருவாக்குவதற்கு இந்த டெம்ப்ளேட் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் Feature Post அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளன. இதை அடுத்து உங்கள் பிளாக்கரில் போடப்படும் Category Post- ஐ நீங்கள் வகைப்படுத்தி தனித்தனியே தெரியுமாறு அமைத்துக்கொள்ள முடியும். மற்றும் வலது பக்கத்தில் ( Sidebar) ஏதாவது ஒரு குறிப்பிட்ட கேட்டகிரி போஸ்ட் தெரியுமாறு அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டெம்பிளேட் நீங்கள் பயன்படுத்தும் பட்சத்தில் உங்களது இணையதளம் மிகப்பெரிய இணையதளமாக பார்வையாளர்களுக்கு காட்டப்படும்.
Conclusion
மேலே கூறிய அனைத்து பிளாக்கர் டெம்ப்ளேட் ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் இருந்து குறிப்பிடப் பட்டவையாகும். இந்த இணையதளத்தில் இன்னும் பல Blogger Template கொடுக்கப்பட்டுள்ளன. இதில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து டெம்பிளேட் நீங்கள் இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும். முக்கியமாக நீங்கள் இதனை Premium Template ஆக வாங்கி பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இலவசமாக கிடைக்கும் அனைத்து டெம்பிளேட் மிக சிறப்பான Setting அமைப்பைக் கொண்டுள்ளன. மேலும் அனைத்து இலவச டெம்ப்ளேட் Ads Friendly ஆக இருக்கிறது. மேலே கூறிய அனைத்து Blogger Template-களும் எனது அனுபவத்தில் நான் பயன்படுத்திய டெம்ப்ளேட் ஆகும்.
Good information about free templates