How Big Website Earn More Adsense Earning

Adsense Earning

பிளாக்கர் ஆரம்பித்த ஒவ்வொருவருக்கும் Adsense Earning என்பது முக்கியமான ஒன்றாகும். இங்கு பெரும்பாலும் பணம் ஈட்டுவதற்காக இந்த இணையதளத்தை ஆரம்பிக்கிறார்கள். மற்ற பெரிய இணையதளங்கள் எவ்வாறு அதிக அளவில் பணத்தை சம்பாதிக்கிறார்கள் என்ற சந்தேகம் பலருக்கும் புதிராக இருக்கும். நீங்கள் புரிந்து கொண்ட வரையில் அம்மாதிரியான பெரிய இணையதளத்திற்கு Organic Views அதிகமாக வருவதன் மூலம் அவர்கள் அதிகமாக பணத்தை சம்பாதிக்கிறார்கள் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால் Adsense Earning என்பது உங்கள் இணையதளத்திற்கு வரும் Traffic எங்கிருந்து வந்தாலும் நீங்கள் உங்கள் இணையதளத்தில் சம்பாதிக்க முடியும்.

Big Website Earning

நீங்கள் நினைத்துக் கொண்டு இருக்கும் மிகப்பெரிய இணையதளங்கள் அனைத்தும் மற்ற சமூக வலைதளங்களில் அதிகமான Followers வைத்திருப்பார்கள். உதாரணத்திற்கு சினிமா சம்பந்தமான ஒரு யூடியூப் சேனல் அவர்களுக்கு என்று ஒரு Facebook Page,Twitter Pages,Instagram Page Etc…. ஆகியவற்றை வைத்திருப்பார்கள். அதுமட்டுமல்லாது அந்த சமூக வலைதளங்களில் அதிகமான Followers வைத்திருப்பார்கள். ஒரு இணையதளத்திற்கு Organic Traffic மூலம் வரும் Adsense Earning விட சமூக வலைதளங்கள் மூலம் கிடைக்கும் Traffic மூலம் வரும் Adsense Earning குறைவாக இருக்கும். இருப்பினும் இந்த இணையதளத்திற்கு அதிகப்படியான Views கிடைக்கும்போது Adsense Earning அதிகமாக கிடைக்கும். இம்மாதிரியான பெரிய இணையதளங்கள் அவர்களுக்கு சமூக வலைதளங்கள் பக்கத்திலிருந்து மிக சுலபமாக அவர்களது இணையதளத்திற்கு Social Traffic கொண்டுவருகிறார்கள். பிறகு ஏன் இந்த இணையதளத்திற்கு Adlimit வரவில்லை என்ற கேள்வி உங்களில் பலருக்கும் வரக்கூடும். ஒரு இணையதளத்தில் வரும் பயனாளர்(User) அந்த இணையதளத்தில் பல்வேறு பக்கங்களை பார்ப்பதன் மூலம் இந்த Adlimit பிரச்சினை தடுக்கப்படுகிறது.

இம்மாதிரியான பெரும்பாலான மிகப்பெரிய இணைய தளத்திற்கு Organic Traffic விட Social Traffic ஏ அதிகமாக கிடைக்கும். இதுமட்டுமல்லாது அவர்களது இணையதளம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்களாக இருக்கும். இதன் மூலம் அவர்கள் எதார்த்தமாக அவர்களது இணையதளத்திற்கு வரும்போது நபரை அவர்களால் அதிக பக்கங்களை கிளிக் செய்ய வைக்க முடியும்.

Leave a Comment