What Is Google News
கூகுள் நியூஸ் என்பது கூகுள் நிறுவனத்தால் ஒரு அப்ளிகேஷன் வடிவத்தில் செய்திகளை படிக்கும் செயலி ஆகும். இந்த கூகுள் நியூஸ் பக்கத்தினை(news.google.com) உங்களது கம்ப்யூட்டரிலும் நீங்கள் பார்க்க முடியும். ஆனால் நீங்கள் கம்ப்யூட்டரில் ஒரு செய்தியைப் படிக்கும் பொழுது அந்த செய்தியின் நடுவில் விளம்பரங்கள் தெரியாது. இதுவே ப்ளே ஸ்டோரில் உள்ள கூகுள் நியூஸ் அப்ளிகேஷன் டவுன்லோட் செய்து உங்கள் மொபைலில் ஒரு செய்தியைப் படிக்கும் பொழுது அந்த செய்தியின் நடுவில் விளம்பரங்கள் காட்டப்படும். இந்த கூகுள் நியூஸ் Application-ல் பல்வேறு மொழிகளில், பல்வேறு நாடுகளின் செய்திகள் நீங்கள் பார்க்க முடியும். இந்த செய்திகள் அனைத்தும் கூகுள் நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் செய்திகள் கிடையாது.
இவை அனைத்தும் வெவ்வேறு நாடுகளில் வாழும் சாதாரண மக்களிடமிருந்து மற்றும் சில சிறிய நிறுவனங்களின் இணையதளம் மூலமாகவும் பெறப்படும் செய்திகளாகும். உதாரணத்திற்கு ஒரு செய்தி ஒளிபரப்பு நிறுவனம் இணையதளம் வைத்திருக்கும் பட்சத்தில் அதனை கூகுள் நியூஸ் இணையத்தில் இணைத்து Approval வாங்கிய பின்பு அந்த இணையத்தில் போடப்படும் ஒவ்வொரு போஸ்ட் நீங்கள் கூகுளில் சர்ச் செய்யும்பொழுது ” News” Section- இல் முதன்மையாக காட்டப்படும். இவர் காட்டப்படும்போது அந்த நிறுவனத்தின் இணைய தளத்திற்கும், நிறுவனத்திற்கும் ஒரு விளம்பரம் கிடைப்பதோடு வருமானம் ஈட்டுகிறார்கள். இதனடிப்படையில் வெளிநாடுகளில் வாழும் சாதாரண மக்களும் இதனை ஒரு வருமானத்திற்கும் அவர்களது இணையதளம் கூகுள் நியூஸ் பக்கத்தில் முதன்மை பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுகிறார்கள்.
Google News Monetization
உங்கள் பிளாக்கருக்கு நீங்கள் Google News இணையத்தில் Approval வாங்குவதன் மூலம் கூகுள் நியூஸ் Application- இல் தெரியும் உங்கள் பக்கத்திற்கு நீங்கள் Monetization வாங்க முடியும். இவ்வாறு கூகுள் நியூஸ் அப்ளிகேஷனில் Monetization வாங்குவதற்கு முதலில் உங்கள் பிளாக்கர் Adsense Approval வாங்கியிருக்க வேண்டும். அதாவது Adsense அப்ரூவல் வாங்கிய உங்கள் பிளாக்கருக்கு நீங்கள் கூகுள் நியூஸ் அப்ளிகேஷனில் Monetization வாங்க முடியும். பொதுவாக உங்கள் பிளாக்கருக்கு நீங்கள் Adsense Approval வாங்கியிருந்தாலும் கூகுள் நியூஸ் அப்ளிகேஷனில் உங்கள் இணையதளம் பார்க்கும் பொழுது விளம்பரம் தெரியாது. இதற்கு நீங்கள் தனியாக உங்கள் பிளாக்கருக்கு கூகுள் நியூஸ் பக்கத்தில் அப்ளை செய்து முதலில் அப்ரூவல் வாங்க வேண்டும். கூகுள் நியூஸ் பக்கத்தில் உங்கள் பிளாக்கருக்கு நீங்கள் அப்ளை செய்யும் பொழுது அதே பக்கத்தில் “Ads” Option- இல் Adsense Publisher Id உடன் இணைக்க வேண்டும். இது பற்றிய முழு விவரங்கள் பார்ப்போம்.