How To Create Search Console For Blogger In Tamil

Search Console

உங்கள் பிளாக்கருக்கு Search Console Page உருவாக்குவதன் மூலம் உங்கள் பிளாக்கரில் போஸ்ட் செய்யும் ஒவ்வொரு போஸ்ட் கூகுளில் நீங்கள் Index செய்ய முடியும். மேலும் உங்கள் பிளாக்கரில் தொழில்நுட்ப ரீதியிலான தவறுகளை இந்த Search Console பக்கத்தில் பார்த்துக் கொள்ளலாம். அது மட்டுமல்லாது உங்கள் பிளாக்கரில் என்ன மாதிரியான Performance நடக்கிறது என்பது போன்ற தகவல்களை இங்கு காண முடியும். உங்கள் பிளாக்கரில் போஸ்ட் செய்யும் ஒரு போஸ்ட் Automatic ஆக Index ஆகவில்லை என்றால் Search Console பயன்படுத்தி Manual ஆக Index செய்ய முடியும். இவ்வாறு உங்கள் பிளாக்கர் வளர்ச்சிக்கும் அதன் தொழில்நுட்ப தவறுகளையும் சுட்டிக்காட்டும்போது தளமாக இந்த Search Console செயல்படுகிறது. கூகுள் பிளாக் உருவாக்கும் ஒவ்வொருவரும் அவரவர் பிளாக்கருக்கு கண்டிப்பாக இந்த Search Console Page உருவாக்குவது கட்டாயமாகும். இந்த பதிவில் எப்படி இந்த பேஜ் உருவாக்குவது பற்றி தெளிவாக பார்ப்போம்.

Create Search Console Page

கூகுளில் ” Search Console ” என்ற தேடும்போது முதல் இணையதளமாக இந்த இணையதளம் காண்பிக்கப்படும். அதனைக் கிளிக் செய்து உங்கள் பிளாக்கருக்கு தேவையான சர்ச் கன்சோல் Page உருவாக்கமுடியும். நீங்கள் எந்த ஜிமெயில் ஐடி- இல் பிளாக்கர் உருவாக்கி இருக்கிறீர்களோ அதே ஜி மெயில் ஐடியில் தான் இந்த சர்ச் கன்சோல் பேஜ் உருவாக்க வேண்டும். இதை உருவாக்குவதற்கு முன்பு நீங்கள் எந்த Gmail ID-ல் உங்கள் பிரவுசரில் Login செய்து உள்ளீர்கள் என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். தற்பொழுது நீங்கள் இந்த சர்ச் கன்சோல் Page வந்தவுடன் முதலாவதாக உங்கள் இணைய தளத்தின் முகவரி கொடுக்க வேண்டும். இதில் உங்கள் இணைய தளத்தின் முகவரி 2 முறைகளில் கொடுக்க முடியும். உதாரணத்திற்கு ” Domain” மற்றும் “URL Prefix” ஆகிய இரு Option இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் Domain Option- இல் உங்கள் இணையதளத்தின் முகவரி கொடுக்க விரும்பினால் அது “tamilbloggers.xyz” என்று கொடுக்க வேண்டும். அல்லது URL Prefix Option- இல் முகவரி கொடுக்க விரும்பினால் அவை ” https://www/tamilbloggers.xyz ” என்று கொடுக்க வேண்டும். இவற்றில் ஏதாவது ஒன்றில் உங்கள் இணையதளத்தின் முகவரி கொடுத்து கீழே உள்ள Continue பட்டனை கிளிக் செய்து உங்கள் பிளாக்கருக்கு Search Console Page உருவாக்க வேண்டும்.

How To Create Search Console For Blogger In Tamil
How To Create Search Console For Blogger In Tamil

 

அவ்வாறு உருவாகிய உடன் திரையில் ” Ownership auto verified ” என்கிற மெசேஜ் காட்டும். இதிலுள்ள Go property என்கிற Option கிளிக் செய்தால் உங்கள் பிளாக்கருக்கு உருவாக்கிய Search Console Page Dashboard சென்றுவிடும். தற்பொழுது உங்கள் Dashboard- இல் உங்கள் பிளாக்கர் சம்பந்தமான Overview,Performance,Coverage போன்ற தகவல்கள் பெறமுடியும். இந்த Page உருவாக்கிய உடன் இதில் எவ்வித தகவலும் ஆரம்பத்தில் Empty ஆக இருக்கும். குறைந்தபட்சம் 24 மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை முதல் தகவல்(Reports) தெரிய கால அளவு எடுத்துக் கொள்ளும்.

Leave a Comment