How To Rank Blog Post On Google First Page In Tamil |
Rank Blog Post
இணையதளம் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் அவர்களது போஸ்ட் கூகுளில் தேடும் பொழுது முதலாவதாக வரவேண்டும் என்று முயற்சி செய்வார்கள். கூகுளில் முதலாவதாக வரும்பொழுது அந்த போஸ்ட்க்கு அதிக வியூஸ் கிடைக்கும். இதன் மூலம் நீங்கள் உங்கள் இணையதளத்திற்கு Adsene Approval வாங்கி வைத்துள்ளீர்கள் என்றால் உங்களது வருமானம் அதிகமாகும். உங்கள் போஸ்ட் கூகுளில் ரேங்க் ஆகுவதற்கு பல்வேறு யுத்திகளை உங்கள் போஸ்டில் பின்பற்ற வேண்டியிருக்கிறது. இதற்கு நீங்கள் SEO Keyword மற்றும் SEO Setting உங்கள் போஸ்டில் பின்பற்ற வேண்டியிருக்கும். உங்கள் போஸ்ட் ரேங்க் ஆகுவதற்கு என்னென்ன வழிமுறைகள் பின்பற்ற வேண்டும் என்று விரிவாகப் பார்ப்போம்.
SEO Keyword Search
உங்கள் போஸ்ட்ன் டைட்டில் மற்றும் Content- இல் SEO Keyword இருக்குமாறு எழுத வேண்டும். பொதுவாக ஒரு டைட்டில் அதிக நபர்கள் தேடும் விதமாக இருக்க வேண்டும். இதற்கு நீங்கள் கூகுளின் Keyword Planner- ஐ பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் என்ன தலைப்பில் போஸ்ட் எழுத இருக்கிறீர்களோ அதன் முக்கிய கீ வேர்ட்- ஐ Keyword Planner – இல் தேட வேண்டும். இதில் கூகுளில் அதிகம் தேடும் கீ வேர்ட் மட்டுமே காண்பிக்கப்படும்.
How To Rank Blog Post On Google First Page In Tamil |
பொதுவாக இதில் Search Volume அதிகமுள்ள கீ வேர்ட்- ஐ தேர்ந்தெடுப்பது மிக சரியாக இருக்கும். உதாரணத்திற்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இமேஜை காணவும். இதில் Adsense என்கிற கீ வேர்ட்-க்கு அதிக Search Volume உள்ள அதற்கு Relative ஆன கீ வேர்ட்- ஐ நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இந்த கீ வேர்ட் வைத்து அதன் தலைப்பில் உங்கள் போஸ்ட் எழுதலாம். உதாரணத்திற்கு “Adsense அக்கவுண்ட் எப்படி லாகின் செய்வது” என்று உங்கள் தலைப்பு வைத்து நீங்கள் போஸ்ட் எழுதலாம். மற்றும் Adsense Login என்கிற கீ வேர்ட் – ஐ ஆங்காங்கே உங்கள் Content- இல் போட்டு எழுத வேண்டும்.