Return Visitor
உங்கள் இணையதளத்திற்கு ஒரு பயனாளர்(User) திரும்பத் திரும்ப வருவதால் உங்கள் இணைய தளத்திற்கும்,Adsense Acoount-க்கும் பாதிப்பு ஏற்படுமா என்கிற கேள்வி அனைவருக்கும் இருக்கும். ஒரு நபரை உங்கள் இணையதளத்திற்கு வருகை தருவதை உங்களால் தடுக்க முடியாது. மேலும் இது சம்பந்தப்பட்ட தகவல்களை(Reports) நீங்கள் Google Analytics பக்கத்தில் பார்க்க முடியும். உங்கள் இணையதளத்திற்கு ஒரு நபர் மூலம் Site Engagement கிடைக்கப்பெற்றால் இணையதளத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
Site Engagement
உங்கள் இணையதளத்திற்கு வருகை தரும் ஒரு நபர் பல்வேறு பக்கங்களை கிளிக் செய்து படிப்பது,Contact Form Fill செய்வது, Payment gateway பயன்படுத்துவது( Call To Action ) என பல்வேறு விஷயங்களை செய்யும் பொழுது உங்கள் இணையதளத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. இவ்வாறு ஒரு நபர் மூலம் உங்கள் இணைய தளத்திற்கு Site Engagement கிடைக்கும் பட்சத்தில் உங்கள் இணைய தளத்திற்கும்,Adsense Account-க்கும் எவ்வித பிரச்சனையும் இல்லை. மேலும் உங்கள் பிளாக் போஸ்டில் Internal Links முறையாக கொடுப்பதன் மூலம் உங்கள் பிளாக் போஸ் படிக்கும் ஒரு நபர் உங்கள் இணையதளத்தின் பல்வேறு பக்கங்களை கிளிக் செய்து பார்ப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. மிக சரியான முறையில் Internal Link கொடுப்பதன் மூலம் உங்கள் இணையதளத்திற்கு SIte ENgagement பெற முடியும். ஒரு முறை அல்ல பலமுறை ஒரு நபர் திரும்பத் திரும்ப உங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தாலும் அவர் மூலம் உங்கள் இணையதளத்திற்கு நல்ல Engagement கிடைக்கப்பெற்றால் உங்கள் இணையதளத்திற்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாது.