Adsense EarningLearn Adsense & Earn Money

How To Convert a Normal Blog To SEO Blogspot In Tamil

Normal Blog To SEO Blog

Normal Blog To SEO Blogspot மாற்றுவது என்பது மிக சுலபமான ஒன்றாகும். உங்கள் பிளாக்கரில் மிகவும் அடிப்படை செட்டிங்ஸ், பிளாக் போஸ்டில் SEO செட்டிங்ஸ் மற்றும் உங்கள் Theme Option- இல் SEO செட்டிங்ஸ் என சில மாற்றங்களை செய்ய வேண்டும். இந்த மாற்றங்கள் செய்வதன் மூலம் உங்களுடைய பிளாக்கர் கூகுளில் தேடும் பொழுது உங்கள் பிளாக்கர் முகப்பு பக்கம் அல்லது பிளாக்கரில் போட்டிருக்கும் ஏதாவது ஒரு போஸ்ட் முதலாவதாக காட்டுவதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது. மேலும் உங்களது பிளாக்கர் என்ன மாதிரியான போஸ்ட் போடுகிறீர்கள் என்பதை கூகுள் சர்ச் இஞ்சின் மற்றும் சாதாரண ஒரு மனிதருக்கு புரிய வைப்பதற்காக இந்த அமைப்புகளை நீங்கள் செய்ய வேண்டிய அவசியம் ஆகிறது. இதற்கு நீங்கள் SEO பற்றிய தொழில்நுட்பங்களை பற்றி மிக நுணுக்கமாக அறிந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அனைவராலும் மிக சுலபமாக செய்யக்கூடிய சில அமைப்புகளை பற்றி இங்கு பார்க்க இருக்கிறோம்.

Three Types Of SEO Setting

உங்களது பிளாக்கரில் முதலாவதாக Setting அமைப்பில் சில விபரங்களை கொடுப்பதன் மூலம் இந்த SEO அமைப்பு அமைகிறது. இரண்டாவதாக உங்கள் பிளாக்கர் போஸ்டில் டைட்டில்,SEO Description போன்ற சில முக்கிய செட்டிங்ஸ் செய்வதன்மூலம் இன்னும் கூடுதலாக உங்கள் பிளாக்கர் SEO அமைப்பை பெறுகிறது. இதற்கு அடுத்ததாக Code மூலம் அதாவது Meta Tag Code உங்களது பிளாக்கர் Theme Section- இல் முறையாக கொடுப்பதன் மூலம் இந்த அமைப்பு அமைகிறது. இந்த மூன்று விதமான Settings நீங்கள் சரியாக செய்துவிட்டால் உங்கள் பிளாக்கர் முழுவதும் SEO Blog ஆக மாறிவிடும். இந்த மூன்று முக்கிய அமைப்புகளை பற்றி அடுத்தடுத்து இங்கு விரிவாக பார்ப்போம்.

See also  How To Create SEO Meta Tag For Blogger In Tamil

1.Blogger Basic SEO Setting

Normal Blog To SEO Blogspot
Normal Blog To SEO Blogspot

இந்த பிளாக்கர் Basic SEO Setting என்பது உங்கள் பிளாக்கர் டாஸ் போர்டில் உள்ள Description,Meta Description,Google Analytics,Search Console,Crawlers Settings போன்ற அமைப்புகளை சரியாக செய்வதன் மூலம் Basic SEO அமைகிறது. இதில் முன்னதாக உங்கள் பிளாக்கருக்கு Description எழுதுவது என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இதில் நீங்கள் அதிகபட்சம் 500 வார்த்தைகளுக்குள் இருக்குமாறு உங்கள் பிளாக்கர் சம்பந்தமான Keywords கொடுத்து எழுத வேண்டும். இதற்கு அடுத்த படியாக உங்கள் பிளாக்கருக்கு என்று கூகுள் Analytics Page உருவாக்கி அதில் இறுதியாக கொடுக்கப்படும் Analaytics Id எடுத்து பிளாக்கர் செட்டிங்ஸ்- இல் கொடுக்க வேண்டும். மேலும் இந்த அனலிடிக்ஸ் பக்கத்தில் ஒரு Script Code ( Global Tag Code ) கொடுக்கப்படும், அதனை காப்பி செய்து உங்கள் பிளாக்கர் Theme Section <head> கீழே கொடுக்க வேண்டும். இதற்கு அடுத்தபடியாக Meta Tag கொடுப்பதாகும், இதில் அதிகபட்சம் 150 வார்த்தைகளுக்குள் உங்களது Meta Tag கொடுக்கப்பட வேண்டும். இதில் பெரும்பாலும் சிறுசிறு SEO Keywords கொடுக்கப்பட வேண்டும். இதற்கு அடுத்தபடியாக Crwalers And Indexing அமைப்பில் Custom Robots.txt ஜெனரேட் செய்து கொடுக்க வேண்டும். மேலும் உங்கள் பிளாக்கருக்கு என்று தனியாக கூகுள் Search Console Page உருவாக்கப்பட வேண்டும். இந்த அமைப்புகள் அனைத்தும் மிக சரியாக கொடுக்கப்பட்டு விட்டால் உங்களது பிளாக்கர் Basic SEO Setting நிறைவடைந்து விடும்.

See also  மிகச்சரியான கீ வேர்ட் எப்படி தேர்ந்தெடுப்பது

2.SEO On Blog Post

Normal Blog To SEO Blogspot
Normal Blog To SEO Blogspot

உங்கள் பிளாக் போஸ்டில் டைட்டில் உருவாக்கும் பொழுது அதன் நீளம் அதிகபட்சம் 70 வார்த்தைகள் இருக்குமாறு உருவாக்கப்பட வேண்டும். மேலும் உங்களது டைட்டில் ஆங்கிலத்தில் கொடுப்பது என்பது உங்கள் போஸ்ட் என்ன விஷயங்களைப் பற்றி நீங்கள் சொல்ல இருக்கிறீர்கள் என்பதை கூகுள் Search Engine-க்கு புரியும் விதத்தில் அமையும். இதற்கு அடுத்தபடியாக உங்கள் போஸ்டுக்கு Label கொடுப்பது என்பது User Experience ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் அது உங்கள் பிளாக்கரில் போடும் ஒவ்வொரு போஸ்ட் என்ன Category என்பதை கூகுள் Search Engine மற்றும் பயன்பாட்டாளர்களுக்கு புரிய வைக்கிறது. இதற்கு அடுத்ததாக Search Description அதிகபட்சம் 150 வார்த்தைகளுக்குள் கொடுக்கப்பட வேண்டும். இதில் உங்கள் போஸ்டுக்கு சம்பந்தமான மிக முக்கிய SEO Keyword வருமாறு எழுதப்படவேண்டும். அடுத்ததாக Permalink உங்களது போஸ்ட் டைட்டில் உள்ள வார்த்தைகள் முழுவதுமாக இங்கு கொண்டு வரப்பட வேண்டும். அதாவது உங்களது டைட்டில் 70 வார்த்தைகளுக்குள் இருக்கும் பட்சத்தில் அவை முழுமையாக இந்த Permalink- இல் வருமாறு கொண்டு வரப்பட வேண்டும். இதற்கு நீங்கள் Custom Permalink Option பயன்படுத்தி அவ்வாறு மாற்றிக் கொள்ளலாம். இறுதியாக உங்கள் பிளாக்கர் போஸ்டில் நீங்கள் போடும் Image-க்கு ALt Text,Caption கொடுப்பதன் மூலம் அந்த இமேஜ் கூகுளில் Image Section- இல் இடம் பெறும் பொழுது அந்த இமேஜை யாரேனும் கிளிக் செய்தால் அது உங்களது பிளாக்கருக்கு கூட்டிச் செல்லும். இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ள இந்த முக்கிய அமைப்புகளை நீங்கள் சரியாக செய்வதன் மூலம் உங்கள் பிளாக் போஸ்ட் SEO Setting முழுமையடைகிறது.

See also  What Is SEO Setup For Blogger In Tamil

3.SEO Meta Tag

Normal Blog To SEO Blogspot
Normal Blog To SEO Blogspot

இந்த SEO Meta Tag என்பது ஒரு Code மூலமாக உருவாக்கப்பட வேண்டும். இதற்கென்று நாம் பிரத்தியேகமாக ஒரு இணையதளம் உருவாக்கி உள்ளோம். அதில் உங்களது பிளாக்கர் டைட்டில்,Description,Author Name,Keywords போன்றவற்றை கொடுப்பதன் மூலம் அது ஒரு Meta tag Code ஆக மாற்றப்பட்டு உங்களுக்கு கொடுக்கப்படும். அதனை காப்பி செய்து உங்களது பிளாக்கரில் உள்ள Theme Section <head> கீழே கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுப்பது என்பது உங்கள் பிளாக்கர் மேலும் கூடுதலாக SEO Rank பெற வழிவகை செய்கிறது. இந்த SEO Meta Tag உருவாக்கம் நமது இணைய தளத்தின் முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது, அதனை கிளிக் செய்து உங்கள் பிளாக்கருக்கு தேவையான Meta Tag- ஐ நீங்கள் இலவசமாக உருவாக்கிக் கொள்ள முடியும். இந்த மூன்று முக்கிய SEO Setting செய்வதன் மூலம் உங்களது பிளாக்கர் Normal Blog To SEO Blogspot ஆக மாற்றப்படுகிறது.

Meta Tage generator

One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *