How To Find Competitors Valid SEO Keywords Using Ahrefs And Google Trends

How To Find Competitors Valid SEO Keywords Using Ahrefs And Google Trends

Competitor Valid SEO Keyword

இணையதளம் வைத்திருக்கும் அனைவருக்கும் ஆரம்பத்தில் அதிக Views பெற வேண்டும், அவர்களது பிளாக் போஸ்ட் கூகுளில் முதல் இடத்தில் காட்ட வேண்டும், அதிக Earning பெற வேண்டும் போன்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டிருப்பார்கள். நீங்கள் ஒரு ப்ளாக் போஸ்ட் எழுதுகிறீர்கள் என்றால் நீங்கள் எழுதும் அதே விஷயத்தைப் பற்றி பல்வேறு இணைய தளங்களில் ஏற்கனவே போஸ்ட் செய்திருப்பார்கள். இந்நிலையில் உங்கள் பிளாக்கரில் நீங்கள் எழுதும் பிளக் போஸ்ட் முதலிடத்தில் கூகுளில் காட்ட வேண்டுமென்றால் அதற்கென்று மெனக்கெடல் வேண்டும். நீங்கள் இந்த கேட்டகிரியில் இணையதளம் வைத்திருக்கிறார்களோ அதே விஷயங்களை பற்றி வேறு ஒரு இணைய தளத்தில் எழுதியிருந்தால் அந்த இணையதளம் உங்கள் Competitor இணையதளமாகும். நீங்கள் தற்போது தான் இணையதளம் ஆரம்பித்து பிளாக் போஸ்ட் எழுதுகிறீர்கள் என்றால் உங்கள் Competitor இணையதளத்தில் பயன்படுத்தப்படும் SEO Keywords பற்றி தெரிந்துகொண்டு அதே தலைப்பில் உங்கள் பிளாக் போஸ்ட் எழுதும் பட்சத்தில் அது அதிக Views பெறுவதற்கு வாய்ப்புண்டு. இவ்வாறு உங்கள் Competitor இணையதளத்தில் Valid SEO Keywords எவ்வாறு எடுப்பது என்பது பற்றி பார்ப்போம்.

Find Competitor Website

Find Competitor Website
Find Competitor Website

முதலில் Valid SEO Keywords எடுப்பதற்கு முன்பு எங்கள் இணையதளத்திற்கு எந்த இணைய தளம் Competitor ஆக இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதை நீங்கள் கூகுள் மூலம் சுலபமாக அறிந்து கொள்ள முடியும். உதாரணத்திற்கு ஒரு Keyword போட்டு கூகுளில் தேடுகிறீர்கள் என்றால் பல்வேறு இணையதளங்கள் வரிசையாக நீங்கள் பார்க்க முடியும். அதில் முதல் பக்கத்தில் உள்ள 10 இணைய தளங்களுக்குள் உங்கள் Competitor இணையதளத்தை நீங்கள் கண்டறிய வேண்டும். இவ்வாறு கூகுளில் தேடும் பொழுது குறிப்பிட்ட ஏதாவது ஒரு இணையதளம் நீங்கள் எழுதும் அதே கேட்டகிரியில் இருக்கும் பட்சத்தில் அந்த இணையதளம் முழுக்க முழுக்க ஒரே கேட்டகிரி சம்பந்தப்பட்ட பிளாக் போஸ்ட் எழுதி இருக்க வேண்டும். சில இணையதளங்களில் பல்வேறு கேட்டகிரியில் பிளாக் போஸ்ட் எழுதி இருக்கும் அவ்வாறான இணையதளங்களும் நீங்கள் கூகுளில் தேடும் பொழுது முதலிடத்தில் காட்டுவதற்கு வாய்ப்புண்டு. இதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது நீங்கள் தேடும் கேட்டகிரியில் அதாவது உங்கள் இணையதளம் எந்த கேட்டகிரியில் உள்ளதோ அதே கேட்டகிரியில் முழுக்க முழுக்க முதல் பக்கத்தில் காட்டும் சம்பந்தப்பட்ட ஒரு இணையதளத்தை Competitor இணையதளமாக நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Find Competitor SEO Keywords On AHREFS Tool

Find Competitor SEO Keywords On AHREFS Tool
Find Competitor SEO Keywords On AHREFS Tool

AHREFs Tool– இல் Site Explorer பயன்படுத்தி ஒரு இணையதளத்தின் ஒட்டுமொத்த விவரங்களை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். உங்கள் Competitor இணையதளத்தை கண்டறிந்த பின்பு அந்த இணையதளத்தின் முகவரியை(URL) Ahrefs Site Explorer Tool– இல் போட்டு அந்த இணையதளத்தின் பற்றிய விவரங்களை முதலில் கண்டறிய வேண்டும். இவ்வாறு நீங்கள் தேடும் பொழுது அந்த இணையதளத்தின் Domain Authority Score எவ்வளவு, எந்தெந்த Page அந்த இணையதளத்தில் அதிக Views பெற்றுள்ளது,Backlinks எத்தனை,Organic Traffic எவ்வளவு,Organic Keywords எவை என பல்வேறு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். இதில் முதல் பக்கத்தில் “organic Search” Option கிளிக் செய்தால் அதில் Organic Keywords Option காட்டப்பட்டிருக்கும். இதில் “More Result” Option கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லவும். தற்போது இந்த இணையதளத்தில் மொத்தம் எத்தனை Keywords பயன்படுத்தப்பட்டுள்ளன, மற்றும் அதன் விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

Find Competitor SEO Keywords On AHREFS Tool
Find Competitor SEO Keywords On AHREFS Tool

இதில் Volume Option- இல் 1000 என்று பதிவிடவும். அடுத்ததாக Keyword Difficulty Option- இல் 15 பதிவிடவும். அதாவது உங்கள் Competitor இணையதளத்தில் Search Volume 1000 மேற்பட்டு ம்,Keyword Difficulty 15 கீழுள்ள Keywords இப்பொழுது நீங்கள் Filter செய்து எடுக்க உள்ளீர்கள். இவ்வாறு எடுக்கும் Keywords List- ஐ நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ள முடியும். இந்த முறையில் எடுக்கும் Keywords நீங்கள் இணையதளம் ஆரம்பித்து வெகுசில மாதங்களே ஆன உங்கள் இணையதளத்திற்கு பயன்படுத்துவது அதிக Views பெற்றுத்தரும்.Keywords Difficulty 15 கீழ் எடுப்பது அதிக Competiton இல்லாத Keywords ஆகும், அதே சமயத்தில் Search Volume 1000 மேலிருக்கும் Keywords தான் நீங்கள் எடுக்க உள்ளீர்கள் எனவே மக்கள் ஓரளவு தேடும் Keywords- ஐ தான் எடுக்க உள்ளீர்கள் என்பதை கவனமாக தெரிந்து கொள்ளுங்கள்.

Valid Competitors SEO Keywords Using Google Trends

Valid Competitors SEO Keywords Using Google Trends
Valid Competitors SEO Keywords Using Google Trends

தற்பொழுது Google Trends இணையதள பக்கத்திற்கு சென்றவுடன் முதலில் நீங்கள் Competitor இணையதளத்தில் எடுத்து வைத்துள்ள SEO Keywords- ஐ Valid உள்ளதா என்று சரி பார்க்க முடியும். உதாரணத்திற்கு Competitor இணையதளத்தில் எடுத்து வைத்துள்ள முதல் 5 SEO Keywords எடுத்துக்கொள்ளுங்கள். இந்த 5 SEO Keywords வெவ்வேறு தலைப்புகளில் உள்ளதாக இருக்கலாம். தற்பொழுது இந்த 5 Keywords 5 பிளாக் போஸ்ட் எழுதுவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறாக மீதமுள்ள Keywords- கலில் எந்தெந்த Keywords Valid உள்ளதாக இருக்கிறது என்பதை கண்டறிய முடியும். தற்பொழுது Google Trends பக்கத்தில் நீங்கள் 5 Keywords வரை அதிகபட்சம் தேடிக் கொள்ள முடியும்.Google Trends சென்றவுடன் Country மாற்றிக் கொள்ளவும், பின்பு “Enter a search term” Option- இல் நீங்கள் எடுத்து வைத்துள்ள முதல் Keyword போட்டு தேட வேண்டும்.

Valid Competitors SEO Keywords Using Google Trends
Valid Competitors SEO Keywords Using Google Trends

அவ்வாறு தேடும் பொழுது அந்த Keywords- ஐ கடந்த 12 மாதங்களில் எவ்வாறு மக்கள் கூகுளில் தேடி உள்ளார்கள் என்பது பற்றிய Graph Report நீங்கள் பார்க்க முடியும். தற்போது இந்த பக்கத்தில் நீங்கள் அதிகபட்சம் 5 Keywords போட்டு தேடி கொள்ள முடியும். இவ்வாறு தேடும் ஒவ்வொரு தலைப்பிற்கும் எவ்வளவு Score Point என்பதை Google Trends உங்களுக்கு காட்டும் குறிப்பிட்ட ஒவ்வொரு Keywords- எம் கடந்த 12 மாதங்களில் எவ்வாறு மக்களால் தேடப் பட்டுள்ளன என்று விரிவான Graph Report உங்களுக்கு கிடைக்கும். இந்த 5 Keywords- இல் எந்த தலைப்பை மக்கள் அதிகம் தேடி உள்ளார்கள் என்பதை அதன் Score Point வைத்து நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். பின்பு இதில் எந்த SEO Keywords தலைப்பில் உங்களுக்கு பிளாக் போஸ்ட் எழுத வேண்டுமென்று நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம். இந்த முறையில் நீங்கள் எடுக்கும் SEO Keywords தான் Valid SEO Keywords ஆகும். இந்த முறையில் உங்கள் பிளாக் போஸ்ட் அமையும் பட்சத்தில் பின்னாளில் உங்கள் பிளாக்கருக்கு அதிக Views பெற்றுத் தருகின்றன.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *