Blogger SEO Setup
ஒரு பிளாக்கர் உருவாக்கிய உடன் அதற்கு முக்கியமாக SEO Setup செய்ய வேண்டும். இதில் செய்யும் ஒவ்வொரு விஷயமும் உங்கள் பிளாக்கரில் SEO Rank அதிகப்படுத்தும். நீங்கள் பிளாக்கர் உருவாக்கிய உடன் ஒரு போஸ்ட் போடுவதற்கு முன்பாக இந்த SEO செய்வது மிக முக்கிய ஒன்றாகும். இதில் உங்கள் பிளாக்கருக்கு நீங்கள் டைட்டில் கொடுப்பதில் இருந்து பல்வேறுவிதமான Setting செய்ய வேண்டியிருக்கும். இதிலுள்ள பல முக்கிய அமைப்புகள் உங்கள் பிளாக்கரின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். இதில் என்னென்ன முக்கிய அமைப்புகள் செய்யவேண்டுமென்று சற்று விரிவாக இங்கு பார்ப்போம்.
Basic Setup
இதில் முதலாவதாக உங்கள் பிளாக்கரில் Title கொடுக்க வேண்டும். நீங்கள் ஒரு பிளாக்கர் உருவாக்கும் பொழுது ஆரம்பத்தில் உங்கள் பிளாக்கருக்கு ஒரு டைட்டில் கொடுத்து இருப்பீர்கள். அந்த டைட்டில் நீங்கள் இந்த Basic Setting- இல் பார்க்க முடியும். நீங்கள் விரும்பினால் இந்த டைட்டிலை மாற்றிக்கொள்ள முடியும். ஒருமுறை நீங்கள் யோசித்து கொடுக்கும் டைட்டிலை ஒவ்வொரு முறையும் திரும்ப மாற்றி அமைக்க வேண்டிய அவசியமில்லை. அவ்வாறு அடிக்கடி உங்கள் பிளாக்கரில் டைட்டிலை மாற்றி அமைப்பது உங்கள் பிளாக்கரில் SEO Rank குறைப்பதாகும்.
![]() |
What Is SEO Setup For Blogger In Tamil |
இதற்கு அடுத்ததாக உங்கள் பிளாக்கருக்கு நீங்கள் Description கொடுக்க வேண்டும். இந்த Description- இல் உங்கள் பிளாக்கரில் என்ன மாதிரியான போஸ்ட், என்ன Category- இல் போஸ்ட் போட இருக்கிறீர்களோ அதற்கு ஏற்றவாறு எழுத வேண்டும். மேலும் இதில் SEO Keywords போட்டு எழுதுவது அது உங்கள் பிளாக்கருக்கு பலம் சேர்க்கும். இந்த Description- இல் அதிகபட்சம் 500 வார்த்தைகள் வரை நீங்கள் எழுதிக் கொள்ளலாம். முக்கியமாக இதில் ஆங்கிலத்தில் எழுதுவது கூகுள்-க்கும் உங்கள் பிளாக்கர் வரும் User-க்கும் புரியும் விதத்தில் எழுதுவது சிறப்பாகும்.
அடுத்ததாக Google Analytics Peoperty ID- ஐ கூகுள் அனலிடிக்ஸ் இணையதளத்தில்( analaytics.google.com) உருவாக்கி அந்த ஐடியை இங்கு Paste செய்ய வேண்டும். இந்த ஐடி கொடுப்பதன் மூலம் உங்கள் பிளாக்கரில் பல்வேறுவிதமான தகவல்களை கூகுளின் அனலிடிக்ஸ் இணையதளத்தில் தெரிந்துகொள்ள முடியும். உங்கள் பிளாக்கரில் வரும் Users எந்தப் பக்கத்தில் இருந்து வருகிறார்கள், அவர்கள் பயன்படுத்தும் மொபைல், என்ன பிரவுசர் பயன்படுத்துகிறார்கள், அவர்கள் விசிட் செய்யும் பக்கத்தின் முகவரி, உங்கள் பிளாக்கரில் எந்த பக்கத்தினை பார்வையிடுகிறார்கள் என்பன போன்ற பல்வேறுவிதமான தகவல்களை நீங்கள் கூகுளின் அனலிடிக்ஸ் பக்கத்தில் பார்க்க முடியும். இதை தவிர்த்து இன்னும் ஏராளமான தகவல்களை நீங்கள் அங்கு பார்க்க முடியும்.
Formatting
![]() |
What Is SEO Setup For Blogger In Tamil |
இதில் நீங்கள் வசிக்கும் நாட்டின் நேரத்தினை சரியாக தேர்வு செய்ய வேண்டும். பொதுவாக உங்கள் பிளாக்கரில் வேறு ஒரு நாட்டின் நேரம் Default ஆக இருக்கும். அதிலுள்ள Time Zone கிளிக் செய்தால் பல்வேறுவிதமான நாடுகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் உங்கள் வசிக்கும் நாட்டின் பெயரை தேடி அதனுடன் நேரத்தை சரியாக பார்த்து தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு நீங்கள் கொடுப்பதன் மூலம் நீங்கள் எந்த நாட்டில் இருந்து உங்களது பிளாக்கரை நடத்துகிறீர்கள் என்பதை கூகுளுக்கு சொல்ல முடியும். மேலும் சில நாடுகளில் கூகுளின் Adsense அக்கவுண்ட் அனுமதி இல்லாததால் இதில் மிக சரியாக உங்களது நாட்டின் பெயரை தேர்வு செய்வது மிக முக்கியமாகும்.
Meta Tags
![]() |
What Is SEO Setup For Blogger In Tamil |
இதில் உங்கள் பிளாக்கரில் என்ன மாதிரியான போஸ்ட் போடுகிறீர்கள் என்பதை குறிக்கும் விதத்தில் இங்கு SEO Keywords கொடுக்க வேண்டும். இவை ஒரு Description வடிவத்தில் அல்லது Single Keywords ஆக பல்வேறு வார்த்தைகள் நீங்கள் கொடுக்கலாம். இதில் கொடுக்கப்படும் வார்த்தைகள் அதிக மக்கள் தேடும் ( Search Volume ) உள்ள Keywords ஆக கொடுப்பது சிறப்பாக இருக்கும். மேலும் இதில் அதிகபட்சம் 150 வார்த்தைகளுக்குள் உங்கள் Meta tag இருக்க வேண்டும். இதில் பெரும்பாலும் உங்கள் பிளாக்கரில் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளை கொடுத்து எழுத வேண்டும். இவ்வாறு கொடுக்கும் Keywords-க்கு Search Volume தெரிந்துகொள்வதற்கு நீங்கள் உங்கள் பிரவுசரில் Keyword Surfer Extension பயன்படுத்தி தெரிந்துகொள்ள முடியும்.
Crawlers And Indexing
இந்த அமைப்பில் மூன்று முக்கியமான Setup செய்ய வேண்டும். இதில் முதலாவதாக ” Enable Custom robots.txt” Enable செய்து அதிலொரு Code Paste செய்ய வேண்டும். இந்த Code நீங்கள் ” labnol.org/blogger/sitemap/ ” இணையதளத்தில் உருவாக்கிக் கொள்ள முடியும். அவ்வாறு உருவாக்கிய Code- ஐ ” custom robots.txt” க்ளிக் செய்து அங்கு Paste செய்ய வேண்டும். இதன் முக்கிய செயல் உங்கள் பிளாக்கரில் நீங்கள் எத்தனை போஸ்ட் போடுகிறீர்கள் என்பதை கூகுளின் Search Console இணையதளத்திற்கு தகவல் அனுப்பும். இந்த பிளாக்கர் Setting- இல் மிக முக்கியமான அமைப்பில் இது ஒன்றாகும்.
![]() |
What Is SEO Setup For Blogger In Tamil |
அடுத்து ” Enable custom robots header tags ” Option- ஐ Enable செய்ய வேண்டும். பின்பு கீழுள்ள Home Page Tag கிளிக் செய்து அதில் all – noodp ஆகிய இரண்டு Option Enable செய்ய வேண்டும். அடுத்ததாக Archive and search page tags கிளிக் செய்து அதில் noindex-noodp ஆகிய இரண்டு அமைப்புகளை Enable செய்ய வேண்டும். கடைசியாக Post and page tags கிளிக் செய்து அதில் all-noodp ஆகிய இரண்டும் Enable செய்ய வேண்டும். இதற்கு அடுத்ததாக நீங்கள் உங்கள் பிளாக்கருக்கு Search Console Page உருவாக்க வேண்டும்.
இந்த SEO Setting- இல் கூறப்பட்டிருக்கும் Google Analytics Property Id மற்றும் Search Console Page ஆகிய இரண்டும் எவ்வாறு உருவாக்க வேண்டும் என்று அடுத்த போஸ்டில் பார்க்கலாம். இதில் மேல் கூறிய அனைத்தும் ஒரு பிளாக்கருக்கு செய்யவேண்டிய மிக முக்கியமான அடிப்படை Setting ஆகும். மேலும் இதில் கூறியவாறு உங்கள் பிளாக்கரில் நீங்கள் SEO Setting செய்யும் பட்சத்தில் உங்கள் பிளாக்கரில் SEO Rank அதிகப் படுத்தப்படும்.
One thought on “What Is SEO Setup For Blogger In Tamil”