Blogger SEO Setup
ஒரு பிளாக்கர் உருவாக்கிய உடன் அதற்கு முக்கியமாக SEO Setup செய்ய வேண்டும். இதில் செய்யும் ஒவ்வொரு விஷயமும் உங்கள் பிளாக்கரில் SEO Rank அதிகப்படுத்தும். நீங்கள் பிளாக்கர் உருவாக்கிய உடன் ஒரு போஸ்ட் போடுவதற்கு முன்பாக இந்த SEO செய்வது மிக முக்கிய ஒன்றாகும். இதில் உங்கள் பிளாக்கருக்கு நீங்கள் டைட்டில் கொடுப்பதில் இருந்து பல்வேறுவிதமான Setting செய்ய வேண்டியிருக்கும். இதிலுள்ள பல முக்கிய அமைப்புகள் உங்கள் பிளாக்கரின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். இதில் என்னென்ன முக்கிய அமைப்புகள் செய்யவேண்டுமென்று சற்று விரிவாக இங்கு பார்ப்போம்.
Basic Setup
இதில் முதலாவதாக உங்கள் பிளாக்கரில் Title கொடுக்க வேண்டும். நீங்கள் ஒரு பிளாக்கர் உருவாக்கும் பொழுது ஆரம்பத்தில் உங்கள் பிளாக்கருக்கு ஒரு டைட்டில் கொடுத்து இருப்பீர்கள். அந்த டைட்டில் நீங்கள் இந்த Basic Setting- இல் பார்க்க முடியும். நீங்கள் விரும்பினால் இந்த டைட்டிலை மாற்றிக்கொள்ள முடியும். ஒருமுறை நீங்கள் யோசித்து கொடுக்கும் டைட்டிலை ஒவ்வொரு முறையும் திரும்ப மாற்றி அமைக்க வேண்டிய அவசியமில்லை. அவ்வாறு அடிக்கடி உங்கள் பிளாக்கரில் டைட்டிலை மாற்றி அமைப்பது உங்கள் பிளாக்கரில் SEO Rank குறைப்பதாகும்.
What Is SEO Setup For Blogger In Tamil |
இதற்கு அடுத்ததாக உங்கள் பிளாக்கருக்கு நீங்கள் Description கொடுக்க வேண்டும். இந்த Description- இல் உங்கள் பிளாக்கரில் என்ன மாதிரியான போஸ்ட், என்ன Category- இல் போஸ்ட் போட இருக்கிறீர்களோ அதற்கு ஏற்றவாறு எழுத வேண்டும். மேலும் இதில் SEO Keywords போட்டு எழுதுவது அது உங்கள் பிளாக்கருக்கு பலம் சேர்க்கும். இந்த Description- இல் அதிகபட்சம் 500 வார்த்தைகள் வரை நீங்கள் எழுதிக் கொள்ளலாம். முக்கியமாக இதில் ஆங்கிலத்தில் எழுதுவது கூகுள்-க்கும் உங்கள் பிளாக்கர் வரும் User-க்கும் புரியும் விதத்தில் எழுதுவது சிறப்பாகும்.
அடுத்ததாக Google Analytics Peoperty ID- ஐ கூகுள் அனலிடிக்ஸ் இணையதளத்தில்( analaytics.google.com) உருவாக்கி அந்த ஐடியை இங்கு Paste செய்ய வேண்டும். இந்த ஐடி கொடுப்பதன் மூலம் உங்கள் பிளாக்கரில் பல்வேறுவிதமான தகவல்களை கூகுளின் அனலிடிக்ஸ் இணையதளத்தில் தெரிந்துகொள்ள முடியும். உங்கள் பிளாக்கரில் வரும் Users எந்தப் பக்கத்தில் இருந்து வருகிறார்கள், அவர்கள் பயன்படுத்தும் மொபைல், என்ன பிரவுசர் பயன்படுத்துகிறார்கள், அவர்கள் விசிட் செய்யும் பக்கத்தின் முகவரி, உங்கள் பிளாக்கரில் எந்த பக்கத்தினை பார்வையிடுகிறார்கள் என்பன போன்ற பல்வேறுவிதமான தகவல்களை நீங்கள் கூகுளின் அனலிடிக்ஸ் பக்கத்தில் பார்க்க முடியும். இதை தவிர்த்து இன்னும் ஏராளமான தகவல்களை நீங்கள் அங்கு பார்க்க முடியும்.